பொன்னியின் செல்வன் இந்த நாவலை பெரும்பாலானோர் படித்திருப்பார்கள். அதனைத் திரைப்படமாக எடுப்பதற்கு எம்.ஜி.ஆர், கமலஹாசன் போன்றோர் முயற்சி செய்து தோல்வியுற்றனர். ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, இயக்குனர் மணிரத்னம் இந்த நாவலை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு,சில கதாப்பத்திரங்களுக்கு நடிகர்களையும் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அவராலும் அந்த படத்தை எடுக்க இயலாமல் போய்விட்டது. திரைபப்டமாக எடுக்கத்தான் முடியாமல் போனதே தவிர, இந்த புதினத்தை நாடகமாக அமெரிக்காவில் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
அந்த நாடகத்தைப் பற்றிய செய்தி - அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் நாடகம்
இங்கு சென்னையில் அந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அந்த நாடகத்தைப் பற்றிய இரு விமர்சனங்கள்
நான் இந்த விமர்சனங்களை எல்லாம் படித்தபோது, அடாடா, நம்மால் இந்த நாடகத்தை பார்க்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். சரி, எப்படியும் இந்த நாவலை யாராவது துணிந்து திரைப்படமாக எடுப்பார்கள், அப்பொழுது பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். உண்மையில் எனக்கு எந்த ஒரு நாவலையும் தொலைக்காட்சி சீரியலாகவோ அல்லது படமாகவோ எடுப்பதில் உடன்பாடு இருந்ததில்லை. வாசிக்கும்போது கிடைக்கிற அந்த சுகம், திரையில் பார்க்கும்போது ஏற்படாது என்ற ஒரு எண்ணமும், மேலும் நாவலை அப்படியே அவர்கள் திரையில் காண்பிக்க மாட்டார்கள் என்ற எண்ணமும் தான். ஆனால் பொன்னியின் செல்வனை பொறுத்தவரை, அது திரையில் வந்தால் நன்றாக இருக்குமே என்று தான் நினைத்தேன். ஏனென்றால், இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் நாவல்களை படிப்பதை காட்டிலும் ஆங்கில நாவல்களை படிப்பதில் தான் அதிக நாட்டம். அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் சொல்லவே வேண்டாம். பெரியவர்களே, ஆங்கில நாவல்களை தான் விரும்பி படிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, இந்த காலத்து இளைஞர்களிடம் போய் பொன்னியின் செல்வனை படியுங்கள் என்று சொன்னால்? அவர்கள் “ஹாரிபாட்டரை” வேண்டுமானால் விழுந்து விழுந்து படிப்பார்களே தவிர, பொன்னியின் செல்வனை எங்கே படிக்க போகிறார்கள். அதில் சிலர் விதிவிலக்காக இருக்கக்கூடும். இங்கு எனக்குத் தெரிந்து ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி பொன்னியின் செல்வனை முழுமையாக படித்திருக்கிறார். அவரிடம் கேட்டால், சின்ன வயதில், என்னுடைய தாய் இந்த கதையைத் தான் தினமும் சொல்லுவார்கள். அந்த கதையே கேட்டு கேட்டு, எனக்கு அதனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது என்று கூறினார். இவரைப் பற்றி தெரிந்த பிறகு தான், நம்மில் எத்தனை பேர், அந்த கதையை நம்முடைய சங்கதியினருக்கு சொல்லியிருக்கிறோம் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நாமும் இந்த மாதிரி கதைகளை குழந்தைகளிடம் சொல்லப்போறதில்லை, அவர்களாகவும் படிக்கப்போவதுமில்லை. பிறகு எப்படி நம் குழந்தைகள் அந்த கால வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வார்கள். அதற்கு ஒரே வழி, இந்த மாதிரி சரித்திரம் மிக்க புதினங்கள் திரையில் வருவது தான்.
சமீபத்தில் படித்த ஒரு செய்தி, பொன்னியின் செல்வன் 2 டி அனிமேஷனில் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக வரப்போகிறது என்பது தான். அனிமேஷனில் இந்த நாவல் வரும்போது, கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள். அவர்களுக்கு அந்த கதை மிகவும் எளிதில் விளங்கும். இதற்கு பெரிய உதாரணம், அனிமேஷனில் வெளிவந்த “இராமாயணம் ,பிள்ளையார், ஆஞ்சிநேயர், கிருஷ்ணர்” போன்ற இதிகாச கதைகளை குழந்தைகள் விரும்பி பார்ப்பது தான். அது மாதிரி பொன்னியின் செல்வனும் அனிமேஷனில் வெளிவந்தால் கண்டிப்பாக அந்த கால தமிழ்நாட்டை நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
பார்ப்போம் இந்த முறையாவது பொன்னியின் செல்வன் திரையில் தோன்றுவாரா என்று!.
நல்லதொரு விடயத்தை பகிந்தளித்தமைக்கு நன்றி நண்பரே.. உள்புறம் செல்லவில்லை கண்டிப்பாக பிறகு வருகிறேன் தங்களுக்கே தெரியும் வேலைப்பளு.... நன்றி.
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியராக இருக்கிறீர்கள். கண்டிப்பாக அந்த வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். நிதானமாக வந்து படியுங்கள்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
நாடகமாக வந்தது தெரியும். சென்னையில் பெரிய பெரிய போஸ்டர்கள் பார்த்த நினைவு. திரைப்படமாக வரும் என்பது புதிய செய்தி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான தகவலை பதிவாக வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்.. அண்ணா வெளிவர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஅந்த கால ரசனை ,இந்தகால ரசனையோடு ஒத்து வருமா என்று தெரியவில்லை ,கடைசியா வந்த ,சரித்திரப் படங்கள் நகைச்சுவையால் தான் வெற்றி அடைந்தது !
ReplyDeleteகண்டிப்பாக வெற்றி பெரும் என்று தான் நினைக்கிறேன். பார்ப்போம் முதலில் இந்த படம் வருகிறதா என்று.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி
நல்லதகவல். பொன்னியின் செல்வன் மீண்டும் வெல்லட்டும் இதயங்களை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்
Deleteவந்தால் அருமையாக இருக்கும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைப் படித்த வாசகர்கள் அதன் பிற வகையான பதிவுகளை ஏற்பார்களா என்பது ஐயமே. இருப்பினும் தற்காலச் சூழலில் அனைவரையும் சென்றடைய இதுபோன்ற வடிவங்கள் உதவும். இது போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கன. என் தாத்தா நாங்கள் படிக்கச்சொல்லிக் கேட்டார். தற்போது என் மகன்கள் ஈடுபாட்டோடு இதனைப் படித்துள்ளனர். எங்களது இல்ல நூலகத்தில் தாத்தா வைத்திருந்ததும், என் மகன்கள் வாங்கியதும் உள்ளன.
ReplyDeleteதங்களின் சொந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.
Deleteஅந்த காலத்தில் வந்த பதிப்புகளும் இந்த காலத்தில் வந்த பதிப்புகளும்,கேட்கவே நன்றாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
வரும் காலம் வரும்...!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteபொன்னியின் செல்வன்
ReplyDeleteவரலாற்றுப் புதினத்தை
பத்து முறைகளுக்கும் மேல் படித்திருப்பேன் நண்பரே
இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களையும் , அனைவருமே, ஒருவாறு மனதில் உருவகப் படுத்தி வைத்திருப்பார்கள். அதனை திரையில் கொண்டு வருவது சாத்தியமல்ல.
பொன்னியின் செல்வனின் பலமே, மற்றவர்களின் மனங்களில் ஒருவித உருவகத்தை ஏற்படுத்தி விடுவதுதான், அது திரையில், அனிமேசனில் சாத்தியமா என்று தெரியவில்லை
எனினும் முயற்சியைப் பாராட்டுவோம் நண்பரே
"//அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களையும் , அனைவருமே, ஒருவாறு மனதில் உருவகப் படுத்தி வைத்திருப்பார்கள். அதனை திரையில் கொண்டு வருவது சாத்தியமல்ல.//" - உண்மை உண்மை.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
நான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 5 தடவைகள் படித்திருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் திரும்பவும் படிக்கத் தூண்டும் அருமையான படைப்பு. அது திரைப்படமாக வந்தால் கல்கி எழுதியது போல் இருக்குமா என்பது ஐயமே. ஏனெனில் பிரபலமான கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டபோது அவைகள் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்பது நாம் அறிவோம். இருப்பினும் யாராவது கல்கியின் படைப்பை திரையில் கொண்டுவந்தால் எதிர்கால சந்ததியருக்கு ஒரு ஆவணப் படமாக அது இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ReplyDelete"//எதிர்கால சந்ததியருக்கு ஒரு ஆவணப் படமாக அது இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. //" -ஆமாம் ஐயா, அப்படியாவது அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
நான் இன்னும் வியந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல் பொன்னியின் செல்வன். அனிமேஷன் படமாக வருவது சிறப்பு! வருங்கால சந்ததிகளுக்கு மிகவும் பயனளிக்கும்! புதிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteநானும் விரும்பி படித்த நாவல்களில் பொன்னியின் செல்வன் ஓன்று. நீங்க கூறிய மாதிரி படத்தைவிட அனிமேஷன் படமானால் விரும்பி பார்ப்பார்கள். நல்ல தகவல்.நன்றி சகோ.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஅதுதானே பார்த்தேன் ... அனிமேஷனில் அசத்தலாம் ....
ReplyDeleteகாத்திருப்போம்