Wednesday, December 3, 2014

காதல் - எதிர் வீட்டு நிலவு



நிலவு
உன்னைப் பார்க்காதவர்கள்

சொன்னார்கள்,

அமாவாசை அன்று

நிலவு வராது என்று!!


இது ஒரு மீழ் பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதினது. இதனை படிக்காதவர்களுக்காக மீண்டும்.......  


                


அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்துகதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில்தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணிஎன் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும்வெளியில் நான் நிற்பதை பார்த்துஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்துஎன் கண்களைப் பார்த்து, “நீங்க!என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான்உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால்நீயே பின்பக்கம் திரும்பிஅத்தே! யாரோ வந்திருக்கிறார்கள் என்று கூறினாய். என் அம்மாவும் உள்ளிருந்தபடியேஎன்னைப் பார்த்துஅது வேறு யாரும் இல்லைஎன் மகன் தான் என்று கூறினார்கள். நீயும்என்னை நன்றாக பார்த்துஒரு புன்னகையை அளித்துவிட்டுநான் போயிட்டு வரேன் அத்தைஎன்று கூறிக்கொண்டுஎன்னை தாண்டி கொண்டுவேகமாக ஓடினாய். 

நானோ என் மனதுக்குள்உன் வாய் சிரித்ததாஇல்லை உன் கண்கள் சிரித்ததா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன். என் அம்மாவோஎன்னடா! இவ்வளவு சீக்கிரமா வந்துட்டஉடம்பு முடியவில்லையா என்று கேட்டார்கள். நான் அதற்கு பதில் கூறாமல்ஏம்மா! உன் அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என்ன?. என்கிட்ட சொல்லவே இல்ல! என்றேன். என் அம்மாவும் ஒன்றும் புரியாமல் என்னடா சொல்ற என்று கேட்க. அதான்இப்ப போன பொண்ணு உன்னைய அத்தைன்னு இல்ல சொல்லிட்டு போகுது என்றேன். டேய்உன் குறும்புக்கு ஒரு அளவே இல்லையாஅந்த பொண்ணு நம்ம எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிறவங்களோட பொண்ணு என்று கூறி, சரிஎன்ன முடியலையாஇவ்வளவு சீக்கிரம் வேலையிலிருந்து வந்துட்ட என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டார்கள். ஆமாம்மாஒரே தலைவலி அதான் வந்துட்டேன். காப்பி கொஞ்சம் கொடுகுடிச்சுட்டுதூங்கி எழுந்தால் சரியா போய்விடும் என்று கூறிக்கொண்டு என் அறைக்குள் சென்றுஜன்னலைத் திறந்தேன். எதிர் வீட்டில் நீயும் உன் அறையின் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டுஎன் அறையையே பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னைப் பார்த்ததும்மீண்டும் ஒரு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு உள்ளுக்குள் சென்று மறைந்து விட்டாய். 

அப்பொழுதுகாபியை எடுத்துக்கொண்டு வந்த என் அம்மாஇன்னைக்கு அமாவாசைநான் கோயிலுக்கு போகணும். நீ காபியை குடிச்சுட்டுதூங்குநான் வீட்டை பூட்டிக்கிட்டு போய் வருகிறேன் என்று சொன்னார்கள். நானோஇன்னைக்கு பௌர்ணமி தானே என்றேன். என்ன உளர்றஇன்னைக்கு அமாவாசை என்றார்கள். நானும் உடனே எதிர் வீட்டைப் பார்த்தபடிஆமாம்ஆமாம்பௌர்ணமி தான் மறைஞ்சிடுச்சேஅப்ப அமாவாசை தான் என்று சொன்னேன். என் அம்மாவும் என்னையும்உன் வீட்டையும் மாறி மாறி பார்த்துவிட்டுஇன்னைக்கு வந்ததிலிருந்து நீ ஒழுங்காவே இல்லை. காபியை குடிச்சுட்டு நல்லா தூங்கு என்று கூறிவிட்டு சென்றார்கள். நானும் பகல் கனவில் உன்னோடு என்ன பேசலாம் என்று எண்ணிக்கொண்டே காபியை குடிக்க ஆரம்பித்தேன்.

27 comments:

  1. ம்ம்ம் :) சரி சரி :) கதையல்ல நிஜம் போல இருக்கே !!
    யாரந்த நிலவு ? :)

    ReplyDelete
    Replies
    1. நிஜம் எல்லாம் இல்லை. அந்த நிலவு ஒரு கற்பனை நிலவு தான் சகோ.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. நிஜமா...? கதையா...?

    ReplyDelete
    Replies
    1. இது வெறும் ஒரு கற்பனை கதை தான்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  3. மிகவும் ரசித்து எழுதியது போல் தோன்றுகிறது நண்பரே
    நிழலா, நிஜமா நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நிழல் தான். இந்த மாதிரி ஒரு நிஜம் அமைவதற்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் சார்.


      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  4. சரிதான்... காதல் ரொம்ப முற்றி விட்டது போலேருக்கே!

    ஆனால் கண்டதும் காதலில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா!!!

    :))))

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது, காதல் ரொம்பத்தான் முற்றிப்போய்விட்டது.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. ம்ம்! நடத்துங்க! நடத்துங்க! கதை ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்,

      Delete
  6. கதை இப்படியும் போகுதா,,,,,, போகட்டும் போகட்டும் அப்படீனா அடுத்து டும் டும் டும்தானோ...

    ReplyDelete
    Replies
    1. டும்,டும் டும் எல்லாம் முடிஞ்சு ரொம்ப வருஷம் ஆயிடுச்சே... இப்ப எதுக்கு அதை திருப்பி ஞாபகப் படுத்துறீங்க?

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. யாரந்த நிலவு ? :) -- எதிர் வீட்டு நிலவு

    ReplyDelete
    Replies
    1. அந்த நிலவு ஒரு கற்பனை நிலவு அம்மா.
      நிஜ நிலவாக இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்... உம்...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  8. சில சமயங்களில் கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். தங்களது பதிவை படித்ததும் அவ்வாறான எண்ணம் தோன்றியது. இயல்பாக பலரது வாழ்வில் எதிர்கொண்ட சூழல்தான் இது. தாங்கள் எழுதியுள்ள விதம் படித்த ஒவ்வொருவரையும் அவரவர் விரும்பிய நிகழ்வுக்கும், எதிர்கொண்ட சூழலுக்கும் அழைத்துச்சென்றிருக்கும் என்பதே நிதர்சனம். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. "//சில சமயம் கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்//" - உண்மை தான் ஐயா.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. கவிதையும் கவிதையோடு கூடிய கதையும் அருமை. தங்கள் கற்பனையை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்னுடைய கற்பனையை இரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா.

      Delete
  10. ரசனையை ரசித்தேன்...

    என்ன தீடீரென்று இப்படி...?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்னுடைய ரசனையை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி டிடி.

      வாழ்க்கையில தான் இந்த மாதிரி எதுவும் நடக்கல, கற்பனையிலையாவது நடக்கட்டுமேன்னு தான்.

      Delete
  11. கற்பனை நிறைய சமயங்களில் மிக அழகாயிருக்கும். உங்கள் பதிவும் அப்படி அழகாயிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா.

      Delete
  12. பயபடாதீங்க நண்பரே நிஜம் என்று தைரியமாக ஒத்துக் கொள்ளுங்கள் இல்லை இந்த கற்பனையை நிஜம் என்று உங்க வீட்டுகாரம்மாவை நம்ம வைத்துவிடுவோம்... நானே எவ்வளவு காலத்திற்கு அடிவாங்குவது

    ReplyDelete
  13. Yaar Andha Nilavu, Yen Indha Kanavu
    Yaaro Solla Yaaro Endru Yaaro Vandha Uravu
    Kaalam Seidha Kolam Ingu Naan Vandha Varavu
    by kannadasan
    (kaalam siidha kolam ingu Thiru. chokkan thantha varau)

    நல்வாழ்த்து!
    புதுவை வேலு

    ReplyDelete
  14. கற்பனையோ நிஜமோ - சுகம்! :)

    ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  15. ஆஹா!!! மேட்டர் சீரியஸா போகுதே!!! அண்ணி நம்பர் எப்படி கிடைக்கும்>ம்ம்ம்ம்
    சும்மா கலாய்ச்சேன் சகோ!! கவித கவித....

    ReplyDelete
  16. ஆஹா! என்ன அருமையான கவிதை அதற்கேற்ற ஒரு அழகிய கதை!!! மிகவும் ரசித்தோம் நண்பரே! அழகிய நடை!

    ReplyDelete