Wednesday, December 31, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு


 
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை


சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்


சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – எட்டாம் அதிகாரம் – தருமஸ்தாபனம்
 

ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு



ஐயா அவர்கள் பால்ய முதல் நித்திய நியம பாராயணமும் சிவபூசையும் சிவதரிசனமும் செய்வதுடன், பெரியோர்கள் சார்பும், கல்வி சாஸ்திராராய்ச்சியுமுள்ள  விற்பன்னராக விருந்தபடியால் சுயமாக விரைவிற் கவிதைபாடுவதில் அதிசாமர்த்திமுள்ளவர்களாக இருந்தார்கள்.

 முதலில் தம்முடைய குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ வன்றொண்டரவர்கள்  மீது, "வன்றொண்ட குருஸ்துதி" என்னும் ஓர் பதிகம்பாடி, அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார்கள். அதன்பின், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்  குருவணக்கமும், ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் குருவணக்கமும், மேற்படி சுவாமிகளது சரித்திர சங்கிரகமும், விநாயகர் சுப்பிரமணியர், சிவபெருமான், உமாதேவியார், சமயா சாரியார்கள், சந்தானா சாரியார்கள், அறுபத்து மூவராதியடியார்கள், முதலானவர்களுக்கும், சிவஸ்தலங்களுக்கும், புராணம், மான்மியம், பதிகம், மாலை, அந்தாதி, சிலேடை, வெண்பா, பிள்ளைத்தமிழ், சந்தவிருத்தம், திருவூசல், நவமணி மாலை, திருவிரட்டைமணி மாலை, மும்மணிக் கோவை, மஞ்சரி, ஸ்தவம், நமகம், அஷ்டகம், கண்ணி, நாமாவளி முதலிய செந்தமிழ்ச் செய்யுள் நூல்களும், வசன நூல்களும், இயற்றி அச்சிட்டு உபகரித்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியிட்ட நூல்கள் நூற்றெட்டாகும். அந்நூல்களின் பெயர்களை இதனோடு சேர்க்கப்பட்டிருக்கும் அட்டவனையில் காணலாம், அந்நூல்களெல்லாம் சிவபரத்துவத்தையே விளைக்குந்தன்மையுடையன.

 
ஐயா அவர்களுடைய கையெழுத்து.


 

(மூலநூலில் உள்ள இந்த பகுதியை அப்படியே ஸ்கேன் செய்து எடுத்துப் பதிவிட்டிருக்கிறேன்.)


இவையன்றியும் தக்கவித்துவான்கள் இயற்றிய நூல்களுக்குக் கொடுத்திருக்கின்ற சாற்றுக் கவிகளும், சிவாலய முதலிய திருப்பணி, கும்பாபிஷேக, உற்சவ, பாலஸ்தாபன, முதலிய முகூர்த்தங்கட்கும் எழுதிக்கொடுத்த பத்திரிக்கைகளும் செய்யுட்களும் அளவில்லாதனவாகும்.

 
ஐயா அவர்கள், வேண்டுஞ் சமயம் நிமிஷ கவியாகப் பாடக் கூடியவர்களானபடியால், ஓர் மாணாக்கர், பாராயணஞ் செய்தற் பொருட்டு திருவெம்பாவைச் செய்யுட்களுக்கும், கந்தரனுபூதிச் செய்யுட்களுக்கும், செய்யுள் முதற் குறிப்புத் தெரிந்துகொள்ள ஒவ்வோர் செய்யுளாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கு, உடனே ஐயா அவர்கள் சொல்லிய செய்யுட்களாவன,

 
           "ஆதி பாச  முத்தன்ன

                வொண்ணித் திலமா லறிமானே

           மோத மாரன் னேகோழி

                முன்னை பாதா ளம்மொய்யார்

           ஓது மார்த்த பைங்குவளை

                யொடுகா தாரோ ரொரு முன்னிக்

           காதற் செங்கண் ணண்ணாவுங்

                கைபோற் றியுமெம் பாவைமுதல்"

           "மாதிருமு னெஞ்சாடு லாசவா

                னேர்புவழை மகமாயை திணியாகெடு

           வாயமரு மட்டுகார் கூகாசெம்

                முருககை வாய்முருக பேராசையா

           மோதியுதி வடிவுமரி கருகாளை

                யுடிகூர்மெய் யோதுமாதார மின்னே

           யுரைசெய்யு மானாவ வில்லேசெவ்

                வான்பா ழுணர்த்துகலை யேபசிந்தா

           சாதிசிங் காரவிதி நாதாகு

                கிரியொடா தாளிமா வேழ்சவினையோ

           சாகாகு றியைதூசு சாடுகர

                வாகியெந் தாயுமா றாறையெறிவொன்.

           றாதிசார் தன்னந் தனிமதியொ

                டுருவாகி யைம்பதிற் றிரண்டுகாப்போ

           டாவிமுழு தருளம்பி காவலவர்

                தருகந்த ரனுபூதி கவிகண்முதலே."
 

ஒன்பதாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

 

உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

23 comments:

  1. அருமையான அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தை அய்யாவின் கையெழுத்தில் காணும் போது தோன்றுகின்ற மகிழ்ச்சிக்கு அளவு இல்லை அய்யா!
    நீங்கள் துணிந்து மரபில் எழுத வரலாம் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.
      நான் இன்னும் தங்களின் யாப்பு பாடத்தையே படித்து முடிக்கவில்லை.
      தங்களைப் போன்றோர் சொல்லிக்கொடுக்கும் தமிழ் பாடத்தை கற்றுத் தேர்ந்த பிறகு மரபில் எழுதுவதற்கு வருகிறேன் நண்பரே. .
      தவறுதலாக எழுதினாலும் திருத்துவதற்கு தங்கள் இருக்க கவலை இல்லை. அதனால் கண்டிப்பாக மரபில் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.

      இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  2. சிறப்பான செய்யுட்கள்... தொடர்க...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  3. புத்தகத்தினை ஆவணப்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது! தொடருங்கள்! நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete

  6. தொடர்கின்றோம் நண்பரே!
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. அண்ணா தங்களுக்கும் இனியா, ஓவியா மற்றும் அண்ணிக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  8. தெய்வீக பணி தொடர்க... தொடர்கிறேன்.
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  9. மிக அருமை சகோதரரே!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  11. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக கருத்திட்டமைக்கு நன்றி.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete

  12. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  13. சொக்கலிங்க ஐயாவின் எழுத்துக்களைத் தங்கள் மூலமாக அறிந்து மகிழ்கின்றேன். சில பாடல்கள் புரிந்துகொள்ள சிரமமாக இருப்பினும் அரிய பொருள் குறித்து தாங்கள் எழுதுவது பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete