சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஆறாம் அதிகாரம் – வாசஸ்தானம்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்
அப்பொழுது, யாழ்பாணம் அம்பலவாண நாவல சுவாமிகள்
சிதம்பர ஸ்தலத்திலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் திருவுருவப் பிரதிட்டை செய்து, அந்தச் சந்நிதியில் இத்தருமஞ் செய்வது
மிகப் பொருத்தம் என்று சொன்னபடியால், அவரிடத்தில் அது சம்பந்தமான
காரியங்களைத் தீர்மானம் பண்ணிக்கொண்டு நகர தனவைசியர்களிடத்தில் பொருளீட்டி, அவ்வம்பலவாண நாவல சுவாமிகள் மூலமாய் மேற்படி சுவாமிகள் முன் பேசிக்கொண்ட பேச்சுப்படி
நேர்மையான முறையில் வாராமையினால் அதை அவர்களிடத்து விட்டு அவர்கள் சார்பினின்றும் விலகிக்
கொண்டார்கள்.
அன்றியும் சிதம்பர சிவாலயத்திலே விநாயகப் பெருமானுக்கும், ஸ்ரீமந் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி
அம்மையாருக்கும், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், அண்ணாமலையாருக்கும், சுப்பிரமணியப் பெருமானுக்கும், சமயாசாரியர்களுக்கும், அர்ச்சனை அபிஷேக நைவேத்தியங்கள்
இன்ன இன்ன காலங்களில் இன்ன விதஞ் செய்வது என்பதும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.
அவைகளும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன.
ஐயா அவர்கள், பெரிய புராணம் பாடியருளிய சேக்கிழார்
பெருமான் அவதரித்த குன்றத்தூருக்குப் போக விரும்பி இலக்கணஸ்வாமிகள் என்கிற முத்துக்
குமாரசுவாமிகளுடனும் வேறு சில அன்பர்களுடனும் திருமயிலாப்பூர் சென்றிருக்கும்போது, சென்னை வாசிகளாகிய ஆங்கில வைத்தியகலாசாலைப்
போதகாசிரியராயுள்ள திருவாளர் சின்னச்சாமிப்பிள்ளை
முதலிய அன்பர்கள் வந்து ஐயா அவர்களோடு சைவ விஷயங்களை அளவளாவி மகிழ்ந்து குன்றத்தூருக்கு
அழைத்துச் சென்று அங்கே சேக்கிழார் பெருமான் குருபூசை மகோற்சவ தினத்தில் பல அன்பர்கள்
கூடிய பெருஞ்சபையில் சேக்கிழார் பெருமானது பெருமையையும் பெரிய புராணத்தின் அருமையையும்
பற்றி மகோபந்நியாசம் செய்து சபையிலுள்ளார்களைப் பெரிதும் மகிழச் செய்தார்கள். அதுகேட்ட
சபையோர்களெல்லாரும் மிகவும் கொண்டாடினார்கள். அன்று முதல் குன்றத்தூர் சேக்கிழார் பெருமானுக்கு
அபிஷேக நைவேத்திய அர்ச்சனை செய்ய அற்பாடு செய்தார்கள்.
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்
எட்டாம் அதிகாரம் – தருமஸ்தாபனம்
ஐயா அவர்கள் காரைமா நகரிலுள்ள அறுபத்து மூவர் குருபூஜை மடத்தை விசாலமாகக்
கட்டிப் புதுப்பித்தற்கு வேண்டும் முயற்சி செய்தார்கள். சில காரணங்களால் அச்சமயம் அது
முடிவு பெறாதிருந்தாலும் இனி அந்த முயற்சியே ஆதாரமாக விருந்து அனுகூல விநாயகப் பெருமான்
அநுக்கிரகந் துணையாக அத்திருப்பணி நகரத்தார்களால் விரைந்து நடைப்பெற்றுச் சிறப்புற்றோங்கும்.
இன்னும், காரை மாநகரில் ஸ்ரீ மீனாட்சி
சுந்தரேசுவரர் வித்தியாசாலை ஸ்தாபித்து அதில் ஆரம்பந் தொடங்கிச் சாஸ்திர பாடம் வரை
தமிழ் பிரதானமாகவும், இங்கிலீஷும் கிரந்தமும் துணைப்பாஷையாகவும்
வைத்து விஸ்தாரமாக நடத்திவர வேண்டுமென்று கருதி, திருவாளர் முத்த.
வெ. வெள்ளையப்பச் செட்டியாரவர்களுடன் ஆதியில் முயன்று பொருள் சேகரித்து வந்தார்கள்.
பின்பு ஐயா அவர்கள் ஆச்சாபுரம் போயிருக்குங் காலத்தில், இங்குள்ளார்
காலதேசவர்த்தமான நோக்கி, இங்கிலீஷ் பிரதானமாகவும், தமிழும் கிரந்தமும் துணைப்பாஷையாகவும், நடத்தி வர ஏற்பாடு
செய்து, அப்படியே இப்போதும் உன்னத நிலையில் நடைபெற்று வருகின்றது.
பின்பு, ஆறாம் அதிகாரத்திற் சொல்லியபடி
திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஆச்சாபுரத்தில் அறுபத்து மூவர் குருபூசைமடம் ஸ்தாபித்து
அதில் அறுபத்து மூவர் திருவுருவப்படமும், விநாயகர் திருஞானசம்பந்தர், சேக்கிழார் விம்பமூர்த்திகளும் பிரதிட்டை செய்வித்தும், தேவார பாடசாலை வைப்பித்தும், திருஞானசம்பந்த ஸ்வாமிகள்
திருக்கோயில், பெரியமண்டபம், உத்சவ மண்டபம், முதலிய திருப்பணிகளும், ஆகமபாடசாலை, வேதபாடசாலை, பசுமடம், திருநந்தனவனம்
முதலிய சிவ தருமங்களைப் பல அன்பர்களைக் கொண்டும் நடப்பித்து வந்தார்கள்.
பின்பு, தமிழ் இலக்கண இலக்கிய வித்தியாபிவிருத்தியும், சிவசாஸ்திராபிவிருத்தியும், சிவ பரத்துவ மகிமைகளை எடுத்துக்காட்டி
விளக்குஞ் சைவ சமயாபிவிருத்தியும், சிவதரும விருத்தியும் செய்துவர
நீடித்த காலமாக அதிவிருப்புற்றிருந்தார்கள்.
அதன்பின் வித்தியாபிவிருத்தி சைவ சமயாபிவிருத்தி முதலியவைகளைச் சிவபரஞ்சுடராகிய
ஸ்ரீ நடராஜ பெருமான் சிதாகாசமத்தியில் அனவரதமும் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுகின்ற பொதுவாகிய
அந்தச் சிதம்பர ஷேத்திரத்திலேயே செய்தற்கு நோக்கங் கொண்டு, நகர தன வைசியர்களிடம் பொருளீட்டிச் சொந்தப் பொருளுங்கூட்டி
அங்கு மாலைகட்டித் தெருவில் ஓர் கட்டிடம் வாங்கி, அதைத் தக்கபடி
புதுப்பித்து ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை
ஸ்தாபனஞ் செய்து, அதில் ஆறாம் அதிகாரத்திற் கூறியபடி அறுபத்துமூவர்
ஆதிய திருவுருவப்படம் பிரதிட்டை செய்து என்றென்றும் நித்திய பூசையும் நாயன்மார் குருபூசைகளும்
நடந்து வரும்படிக்கும், தமிழிலக்கண விலக்கிய வித்தியாபிவிருத்தியும், சைவ சித்தாந்த சாஸ்திராபிவிருத்தியும், சைவ சமயாபிவிருத்தியும், சமஸ்கிருதாபிவிருத்தியும் மற்றும் தருமங்களும் நடந்து வரும்படி அதற்குரிய
ஆசிரியர்களையும் மாணாக்கர் முதலியவர்களையும் அமைத்து என்றும் நடைப்பெறும்படி ஏற்பாடு
செய்து நடத்தி வந்தார்கள்.
அங்கு நாடோறும் பிராதக் காலத்தில் சிவகெங்கைத்தீர்த்த ஸ்நானஞ் செய்து சிவபூசை
பண்ணி ஸ்ரீமந் நடராஜ முர்க்தியைத் தரிசனஞ் செய்துகொண்டு ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையில் இருந்து
அங்குள்ள மாணாக்கர்களுக்குத் தாங்களும் பாடஞ் சொல்லி வந்தார்கள்.
ஸ்ரீமந் நடராஜ வள்ளலாருடைய மார்கழி மாசத் திருவாதிரை தரிசனத்துக்குவரும்
நகரத்தார்களும், வித்துவ சிரோமணிகளும், சிவநேசர் திருக்கூட்டத்தார்களும், சிவனடியார்களும் இந்தத் திருமடத்திலேயே தங்கியிருந்து சைவப்பிரசங்கங்கள் செய்யவும், அவற்றைச் சிரவணஞ் செய்யவும், திருவமுது அருந்தவும் ஏற்பாடு
செய்து வைத்துள்ளார்கள். அந்தப் பிரகாரம் வருடந்தோறும் குறைவின்றி அவைகள் நடந்து வருகின்றன.
மேற்படி வித்தியாசாலையிலுள்ள சிவனடியார்களும் தரிசனார்த்தமாக வருகிற சிவனடியார்களும்
சிவபூசை செய்யவும், திருமுறைப் பாராயணஞ் செய்யவும்
பூசை மண்டபமும், நந்தனவனமும் அமைத்திருக்கிறார்கள். பல சிவனடியார்களும்
நாடோறும் சிவபூசை முதலியன செய்து வருகின்றார்கள்.
மேற்படி வித்தியாசாலைத் தருமங்கள் நிலைபேறாக நடந்து வரும் பொருட்டு அதற்கு
வேண்டிய பொருள்களை நகர தன வைசியார்களிடம் ஈட்டி , கட்டிடம்
அமைத்தும் புஸ்தகங்களும் விளை நிலங்களும் வாங்கி வைத்தும் பண நிதியமைத்தும் மனவுறுதியுடன்
மெய்கண்ட வித்தியாசாலையைப் போற்றி வந்தார்கள். அதன் ஆவேதனமும் யாவருந் தெரிந்து கொள்ளும்படி
அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள்.
இந்தச் சிவதருமமாகிய ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையானது என்றென்றும்
அபிவிருத்தியாய் நடந்துவரும்படி பரிபாலனஞ் செய்து வருவதற்காக திருவாளர்கள், அரிமழம் அ. அரு. அண்ணாமலைச் செட்டியார், காரைக்குடி ராம. உ. காசிவிஸ்வநாதன் செட்டியார், காரைக்குடி
முத்துபட்டணம் ராம. சொ. திருநாவுக்கரசு செட்டியார், காரைக்குடி
கா. கா. அழ. காளையப்ப செட்டியார், மேற்படியூர் முத்த. வெ. சொக்கலிங்கச்
செட்டியார், மேற்படியூர் சேவு. மெ. மெய்யப்ப செட்டியார் ஆகிய
ஆறுபேர்களுக்கும் ஐயா அவர்கள் தருமபரிபாலன உரிமைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஒப்பித்தார்கள்.
அந்தப் பிரகாரமே ஆறுபேர்களும் தம்முள் வருஷத்துக்கு இரண்டு பேர் பரிபாலகராகவிருந்து
வித்தியாசாலைக் காரியங்களைச் செவ்வையாய் நடத்தி வருகின்றார்கள்.
ஐயா அவர்கள், மேலும் தமக்குத் தெரிந்தவர்களிடத்தும், சிவபக்திமான்களிடத்தும், வேண்டியவர்களிடத்தும், அவரவர்க்குத் தக்கபடி இன்ன இன்ன சிவதருமங்கள் செய்யுங்கள் என முயன்று செய்வித்த
சிவாலயத் திருப்பணிகள், குருபூசை மடங்கள், வீபூதி மடங்கள், வேதசிவாகம பாடசாலைகள், தேவார பாடசாலைகள், திருநந்தனவனங்கள் முதலானவை அநேகம்
உள்ளன.
எட்டாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
பின்குறிப்பு – அடுத்த அதிகாரத்தில் ஐயா அவர்களின் கையெழுத்து வெளிவரும்.
ஸோரி நான் நாளை படிக்கிறேன் நண்பரே.....
ReplyDeleteபொறுமையாக வந்து படியுங்கள் நண்பரே.
Deleteஐயா அவர்கள் பற்றி விரிவாக தெரிவித்தமைக்கு வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்
Deleteபடித்து மகிழ்ந்தேன் நண்பரே
ReplyDeleteதொடரட்டும் தங்களின் தமிழ்த் தொண்டு
நன்றி நண்பரே
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஅய்யா,
ReplyDeleteசைவசித்தாந்தச் செல்வரின் வரலாற்றைத் தொடர்கிறேன்.
அவர் தம் கையெழுத்தைக் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
காண ஆவலாய் இருக்கிறேன்.
அய்யா கட்டிய, மெய்கண்ட சித்தாந்த வித்யா சாலை இன்னும் இருக்கிறதா?
தங்களின் பணி போற்றுதற்குரியது!
நன்றி
அடுத்த அதிகாரத்தில் அவரின் கையெழுத்து (4-5 வரிகள்) இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்து வெளியிடுகிறேன்.
Deleteஇன்னும் சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை இருக்கிறது. அங்கு தான் ஐயா அவர்கள் எழுதிய அனைத்து நூல்களும் இருக்கின்றன. அடுத்த முறை இந்தியா வரும்போது அந்த நூல்களை எல்லாம் இணையத்தில் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
வணக்கம்
ReplyDeleteபடித்து மகிழ்ந்தேன்.. சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ஐயாவின் கையெழுத்து பிரதிக்காக காத்திருக்கேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடுத்த அதிகாரத்தில் அவரின் கையெழுத்து (4-5 வரிகள்) இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்து வெளியிடுகிறேன்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
ஐயா வணக்கம், தங்களை என்நன்பர்களின் வலைப் பக்கத்தில் பர்த்திருக்கிறேன்
ReplyDeleteவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேஎன்னுடைய தளம் செல்வேனா
அப்படியே .....போயிற்று. ஆனா இன்று வந்து ஒரு நல்ல தகவலைத்தெரிந்து
கொண்டேன் இன்னும்7 அதிகாரங்கள் தெரிந்துகொள்ள நான் தொடர்கிறேன்
தங்களின் வருகையைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அம்மா.
Deleteமற்ற அதிகாரங்களையும் படித்து வாருங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அந்தக்காலத்து கையெழுத்து...கூட்டெழுத்தாக நிறைய இருக்கும்...வித்தியாசமாயும் இருக்கும். இப்போது ஆங்கில கூட்டெழுத்து தான் தெரிகிறது அனைவருக்கும். தமிழ் கூட்டெழுத்து அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை இப்போது. என் தந்தையார் கூட்டெழுத்தாக எழுதுவார்கள் எனக்கு அது மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஐயாவின் எழுத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். ஐயா எழுத்து என்கிற போதே என்
மனதில்தெரிகிறது உருவமாக.... பார்க்கலாம்
நன்றி சகோ
Hi sir.. I'm Nithya from Chennai, based out of karaikudi ...need ur contact regarding some info I need about ur Aiya.. Rama.so.so Aiya.. For some work I'm into.. Can I have ur contact number please
ReplyDeleteSorry Madam for a very late reply.
Deletemy email-id sambantha@gmail.com. Please reply me to this email and I will send my contact number.
Again Sorry for the late response
சொக்கலிங்கம் ஐயா அவர்களின் படம் வேண்டும்
ReplyDelete