Thursday, February 6, 2014

பெண்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க போலீஸ் அதிகாரி தரும் டிப்ஸ்

இன்றைக்கு எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவிற்கு அதனால் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. அதிலும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் தான் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தக்குற்றங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி ஒரு விழிப்புணர்வு கட்டுரையை அவள் விகடனில் படிக்க நேர்ந்தது. பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தாலே, பல குற்றங்கள் நிகழாமல் தடுத்து விட முடியும் என்றும் அவ்வாறு எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம் என்று மதுரை நகர காவல்துறை எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவர்கள் அந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறார். அந்த டிப்ஸ்களை  தொகுத்து, உங்களுக்காக அதைப் பகிர்ந்துக்கொள்கிறேன். அந்த கட்டுரையை நீங்களும் படித்திருக்கலாம். படித்ததை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
 
 
பேஸ்புக்:
Ø  ஃபேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
 
Ø  ஃபேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் 'ரிப்போர்ட்பகுதியில் 'க்ளிக்செய்து புகார் தந்தால், உடனே ஃபேஸ்புக் நிர்வாகத்தினர், அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு உங்கள் புகாரை பரிந்துரை செய்வார்கள்.
 
 
Ø  முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள். அவர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
 
Ø  முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுதுங்கள். உங்களது எழுத்தே உங்களை சிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் ஜாக்கிரதை!
 
செல்போன்:
Ø  செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும்.
 
Ø  செல்போன், எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ்., என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்துங்கள். அதைவிடுத்து, 'தானாகவே சரியாகிவிடும்என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும். பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.
 
 
Ø  'ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள். தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.
 
Ø  செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் புகைப்படங்களை அழித்து விடுங்கள். மெமரி கார்டை அகற்றிவிட்டு கொடுங்கள். கான்டாக்டில் இருக்கும் எண்களை யும் கூட கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.
பெண்களே... மிகவும் கவனமாக இருங்கள்!
உங்களது ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே திரிகிறது என்பதை மறவாதீர்கள். பொது இடங்களில் நடக்கும்போதுகூட உங்களைப் புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் உலவவிடும் நாசக்காரர்கள் இருக்கிறார்கள். பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயைக்கூட இந்தச் சதிகாரர்கள் விட்டுவைப்பதில்லை. மறைந்து நின்று புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்கிறார்கள்.
தண்டனைகள் பலவிதம்..!
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தால், .டி சட்டம் 2008-ன் படி மூன்று ஆண்டுகள் முதல், ஆயுள் வரை தண்டனையாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவர்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது, ஆண் - பெண் இருவரின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால், அவர்கள் ஜாமீனில் வரமுடியாத சட்டங்களின்படி கைது செய்யப்படுவார்கள்.
சென்னையில் கடந்த ஆண்டு 1,472 சைபர் க்ரைம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 27 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 35 குற்றவாளிகள் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்தியா முழுவதும் ஓர் ஆண்டுக்கு சைபர் க்ரைம் சம்பவங்களில் வெறும் 21% அளவுக்குத்தான் புகார்களாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன. இந்தியாவில், இன்டர்நெட் மோசடிகள் மூலமாக, ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு பண மோசடிகள் நடக்கின்றன.
எப்படி புகார் செய்வது?
சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை, சென்னையைப் பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகவும், நேரில் செல்ல இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாகவும், மெயில் .டி வழியாகவும் தெரிவிக்கலாம். தவிர, தமிழகத்தின் அனைத்து உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.
எஸ்.எம்.எஸ் : 95000 99100; போன் : 044 - 23452350; -மெயில் முகவரி: cop@vsnl.net.
(நன்றி. அவள் விகடன்)

 
நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டால் இம்மாதிரியான சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு தான் தேவை.

6 comments:

  1. இன்றைக்கு மிகவும் தேவை...

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.


      Delete
  2. விழிப்புணர்வு பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி அம்மா.

      Delete
  3. மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய
    ரிவிசன் செய்யவேண்டிய பதிவு...
    நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete