அன்பார்ந்த நண்பர்களே ,
நான் இந்த பதிவில் சொன்னது போல்
கட்டுரையை எழுதுவதற்காகவாவது கமப்ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தை சிறிது படித்து, அதிலிருந்து ஒரு துளியாக
"கம்பனில் ஆளுமையியலில் - கைகேயியின் ஆளுமை"
என்ற தலைப்பில் ஒருவழியாக கட்டுரையை எழுதி சமர்பித்திருந்தேன். கட்டுரையும் தேர்வாகி விட்டது என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கோ உண்மையில நம்ப முடியலை. இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தான் அந்த நம்பிக்கையின்மைக்கு காரணம்.
முதலில் கட்டுரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி என்று சனவரி மாதம் 15ஆம் தேதி என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் கொடுத்திருந்த தலைப்புகளைப் பார்த்தவுடனே, எனக்கு எந்த தலைப்பை எடுப்பது என்று ஒரே குழப்பம். ரெண்டு மூணு தலைப்பை யோசிச்சு, கடைசியில எப்படியோ ஒரு தலைப்பை கண்டுப்பிடிச்சேன். அப்புறம் தான் மிகப்பெரிய சோதனையே, என்னிடம் கம்பராமாயணத்துக்கான உரைநடை புத்தகம் கிடையாது. இங்கு இருக்கும் ஒரு தனியார் நூலகத்தில்(இலங்கை தமிழர்கள் இந்த நூலகத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்துகிறார்கள். வெறும் தமிழ் புத்தகங்கள் மட்டும் தான் இருக்கும்). அந்த புத்தகக் கடலில் என்னால் தேடி கண்டுப்பிடிக்க முடியலை. இந்த நூலகம் கணினி மயம் கிடையாது. அதனால் நாம் தான் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அப்படி தேடுவதற்கு எனக்கு பொறுமை இல்லை. நாங்கள் முன்பிருந்த வெண்ட்வோர்த்வில் (wentworthville) இடத்தில், நாங்கள் குடியிருந்த தெருவிலேயே ஒரு அரசாங்க நூலகம் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட தமிழ் நூலகள்,நாவல்கள் என்று இருக்கும். அதில் இந்த அயோத்தியா காண்டம் இருக்கிறது. ஆனால் என் நேரம் அதை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்த வழியும் மூடிவிட்டது. வலைத்தளத்தில் அந்த புத்தகத்திற்கு பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நான் கேட்கும் நேரம் அது கிடைக்கவில்லை.
கடைசியில், நண்பர் அன்பு ஜெயா அவர்கள், தன்னிடம் இருந்த புத்தகத்தையும், மேலும் இரண்டு கம்பராமாயன மின்னூலையும் எனக்கு அளித்து, மாபெரும் உதவி புரிந்தார்கள். (அவர்களும் கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள்).
இப்படி புத்தகத்தை தேடிப்பிடிப்பதிலேயே நாள் ஓடி விட்டது. இந்த மாதம் 13ஆம் தேதி போல் கம்பன் கழகத்தாரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, அவர்கள் கட்டுரையை சமர்பிக்க தேதியை இந்த மாதம் 31ஆம் தேதி வரை நீடித்திருப்பதாக சொன்னார்கள். ஆஹா, நமக்காகவே அவர்கள் நீடித்திருக்கிறார்கள், இனியும் தாமதம் செய்யாமல், கட்டுரையை எழுதிவிட வேண்டும் என்ற முனைப்போடு ஒரு வழியா கட்டுரையை எழுதி சந்தேகத்தோட தான் அனுப்பினேன். அந்த இராமனின் அருளால் கட்டுரை தேர்வு செய்யப்பட்டு விட்டது.
மார்ச் 15,16 தேதிகளில் காரைக்குடியில் இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதில் தான் நான் இந்த கட்டுரையை வாசிக்கவுள்ளேன்.
இனி நான் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றெல்லாம் இனி தான் யோசிக்க வேண்டும்.
இந்த கட்டுரை மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட பின், நான் இங்கு அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
வருக வருக...
ReplyDeleteகட்டுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுக்கள்... கருத்தரங்கம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி தனபாலன்
Deleteகட்டுரை தேர்வாகி இருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
ReplyDeleteபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா
Delete
ReplyDeleteமுதலில் வாழ்த்துக்கள் ..& பாராட்டுகள்.
உங்களின் தமிழ்பற்று என்னை மிகவும் வியக்க வைக்கிறது கம்ப ராமாயணத்தை ப்ற்றி எழுதியதும் அல்ல அதற்கான விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறீர்கள் என்று அறிந்ததும் நான் அடைந்த ஆச்சிரியத்திற்கும் அளவே இல்லை. நீங்கள்தான் உண்மையான தமிழன்
தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழா.
Deleteஉண்மையை சொல்லப்போனால், இதில் சிறிது சுயநலமும் அடங்கியிருக்கு. படிப்பில் தான் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறமுடியவில்லை. அதனால் இந்த மாதிரி ஆராய்ச்சிக்கட்டுரைகளையாவது எழுதி மாநாடுகளில் அதை வாசித்து அந்த தாகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்பதால், நான் இந்த மாதிரி விஷயங்களில் இறங்குகிறேன்.
ஆனால் சிறிதும் கூட சுயநலம் இல்லாமல் நிறைய பேர் தமிழுக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது என்னுடைய தமிழ்ப்பற்று மிகப் பெரிய விஷயம் இல்லை.
தங்களின் இந்த கனிவான வார்த்தைகள் சுயநலம் இல்லாமல் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்! தமிழகத்திற்கு தங்களை வருக வருக என வரவேற்கிறேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தமிழகத்தில் நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது, , நீங்கள் எழுதிக்கொண்டு வரும் "தமிழ் அறிவு" பற்றிய பதிவுகளை உங்களுடன் அலைபேசியில் கலந்துரையாடலாம் என்றிருக்கிறேன்.
Deleteஓ!சார் அவ்ளோ தமிழ் தேர்ச்சி மிக்கவரா?
ReplyDeleteநான் ரெண்டு ஸ்டேப் backல போய்டேன்!
கம்பன் விழாவில் கட்டுரை வாசிக்க வருகை தரும்
அண்ணன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
Congrats... Welcome to India... Pls plan until 25 th march... I tried reaching your landline.... ping me in Facebook when you are free...
ReplyDeleteமிக்க நன்றி சோலை. நான் இன்னும் எவ்வளவு நாள் தங்குவது என்று முடிவு செய்யவில்லை. செய்துவிட்டு, உன்னை தொடர்பு கொள்கிறேன்.
Deleteஐயையோ, நீங்க என்னைய தப்பா நினைச்சுக்கிட்டீங்க சகோ!!!
ReplyDeleteநான் தமிழில் அப்படி ஒன்றும் தேர்ச்சி பெற்றவனில்லை. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் தமிழில் தான் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன்.
வெளி நாடுகளுக்கு வந்த பிறகு தான் நம் தமிழின் அருமை தெரிய ஆரம்பித்தது. அதிலும் நான் டோக்கியோவில் வசிக்கும்போது, ஜப்பானிய நண்பர் ஒருவர், தமிழகத்திற்கே வராமல், தமிழின் மீது ஏற்பட்ட காதலால், நம் இலக்கியங்களையும், இதிகாசங்களையும் படித்து, தூய தமிழில் உரையாடுவார். அவரைப் பார்த்த பிறகு தான் நம் தாய் மொழியை எவ்வளவு தூரம் நான் ஒதுக்கிவைத்திருந்திருக்கிறேன் என்று தெரிந்தது. அன்றிலிருந்து தான் நானும் நம் தாய் மொழியை காதலிக்க ஆரம்பித்தேன். அதனால் நான் வெறும் தமிழ் ஆர்வலன் மட்டுமேயொழியே, தமிழில் தேர்ச்சி அடைந்தவன் கிடையாது.
தங்களின் அன்பான வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
வாழ்த்துக்கள் ...
ReplyDeleteவிரைவில் கட்டுரையை படிக்க விருப்பம்...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteமாநாடு முடிந்தவுடன், கட்டுரையை பதிகிறேன்.
வாழ்த்துக்கள். கட்டுரையை படிக்க ஆவலாய் உள்ளேன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteமாநாடு முடிந்தவுடன், கட்டுரையை பதிகிறேன்.
விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் சார்... இந்தியா வரும்போது சந்திக்கலாம்...
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள். இந்தியா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். கருத்தரங்கம் முடிந்த பிறகு உங்கள் கட்டுரை படிக்க விருப்பம். பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteமாநாடு முடிந்தவுடன், கட்டுரையை பதிகிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteகண்டிப்பாக சந்திப்போம்.
வணக்கம் சகோதரரே..!
ReplyDeleteகட்டுரையை படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதத்தில் இப் பதிவு அமைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் எழுதி தாகத்தை தணித்துக் கொள்ளவும் சிறப்புப் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
தமிழகம் செல்ல விருப்பது தங்கள் ஆர்வத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. நட்பு தொடரும். நன்றிகள் ..! தொடர வாழ்த்துக்கள் ....!
தங்கள் இனியா மகள் இனியா நலமா?
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteதங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தால் தான், என்னால் இம்மாதிரி கட்டுரைகளை எல்லாம் எழுத முடிகிறது.
இனிய மகள் இனியா நலமே. ஆனால் பண்ணுகின்ற சேட்டையைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.