Thursday, June 19, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


நண்பர் திரு. மதுரைத் தமிழன் அவர்கள் சும்மா இருக்காம, சக வலைப்பதிவர் சகோதரி ராஜி கனவுல வந்து பத்து கேள்வி கேட்டாங்க, அதுக்கு நான் இப்படியெல்லாம் பதில் சொன்னேன்ன்னு  சொல்லி, கூட ஒரு பத்து பேர் கிட்டேயும் இந்த கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டாரு. இதுல கொடுமை என்னன்னா, அந்த பத்து பேர்ல நானும் ஒருத்தனாப் போயிட்டேன். இதுல வேற ஒழுங்கான பதிலாக இருக்கணுமா, நக்கலாக எல்லாம் இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன்.

அந்த பத்து கேள்விகளும், என்னோட பதில்களும்: 

1.
உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறு வயது வரை இருந்து என்னுடைய புலம்பல்களையெல்லாம் என் வலைப்பூவில் எழுதி உங்களை படிக்கச் சொல்லி தொந்தரவு பண்ணமாட்டேன் என்று நம்புகிறேன். 


2.
என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சோம்பேறித்தனத்தை எவ்வாறு விட்டொழிப்பது என்பதை

3.
கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

வலைப்பதிவு நண்பர் சுரேஷ் எழுதிய இந்தியரின் மாஜிக் படித்து நல்லா வாய் விட்டு சிரித்தேன் 


4. 24
மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகலில் என் குழந்தைகளோடு வீட்டுத் தோட்டத்தில் விளையாடுவேன், மாலையில் மெழுகு வர்த்தியை ஏற்றி, நான் படிக்காமல் விட்டுப்போன புத்தகங்களை படிப்பேன் 


5. 
உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

வாழ்கையில் எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் மனம் கலங்காமல் அதை எதிர்த்து போராடு. உன் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல தோழியாக உன்னை மாற்றிக்கொள். இறுதியாக குடும்பத்தலைவி தான் கண்ணாடி என்பதை மறவாதே என்று சொல்லுவேன்.  

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

ஆதரவற்றவர்கள் (குழந்தைகளாக இருந்தாலும் சரி,பெரியவர்களாக இருந்தாலும் சரி) என்ற அந்த நிலை ஒருவருக்கும் உருவாகாமல் இருக்க முயற்சிப்பேன், 


 
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மூன்றாண்டுகள் முன்பு வரை என் அன்னையிடம் கேட்டு வந்தேன். அவர்கள் என்னை விட்டு நீங்கியதால், இப்பொழுதெல்லாம், என்னை நன்றாக புரிந்த உற்ற நண்பரிடம் கேட்கிறேன்8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

நாய் சூரியனைப் பார்த்து குலைக்கிறது என்று எண்ணி ஒன்றும் பேசாமல் அம்மாதிரியான துஷ்டர்களிடமிருந்து இருந்து ஒதுங்கி விடுவேன் (இந்த பதில் வெறும் கேள்விக்காக எழுதப்பட்ட பதில் இல்லை, எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் நான் சொல்லியிருக்கிறேன்)


9.
உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இனிமேல் உன் குழந்தைகளுக்கு நீ தான் தாயுமானவனாக இருந்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்று சொல்லுவேன்


10.
உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

இருக்கவே இருக்கு புத்தகங்களும், புலம்பல்களை எழுதுவதற்கு என்னுடைய வலைப்பூவும் - உண்மையானவன்இந்த தொடர் பதிவில் நான் மாட்டிவிடும் நண்பர்களான , நீங்களும் உங்களால் முடிந்தால் இந்த தொடர் பதிவை உங்கள் வலைப்பூவில் எழுதி உங்களுக்கு வேண்டிய (?) நண்பர்களையும் இதில் இழுத்து விடுங்கள்.  

ஸ்கூல் பையன் http://www.schoolpaiyan.com/
சுரேஷ் http://thalirssb.blogspot.com/
பக்கிரிசாமி http://packirisamy.blogspot.com.au/
உமையாள் காயத்ரி http://umayalgayathri.blogspot.com.au/
பிரியசகி http://piriyasaki.blogspot.com.au/
மலர்தரு http://www.malartharu.org/
கீதமஞ்சுரி http://geethamanjari.blogspot.com.au/
கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com/35 comments:

 1. ஐயய்யோ மாட்டி விட்டுட்டாரே.... இருந்தாலும் யோசிப்போம் நமக்குத்தான் மூளை இருக்கே... இருக்கா ?

  ReplyDelete
  Replies
  1. ஒழுங்கான பதிலாக இருந்தாத்தான் உங்களுக்கு மூளை இருக்குதுன்னு ஒத்துப்போம்.

   Delete
 2. எனது வேண்டுகோளை ஏற்று அருமையான பதில்களை தந்தற்கு பாராட்டுக்கள் & நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியதற்காக உங்களுக்கு நன்றிகள்.

   Delete
 3. எனது வேண்டுகோளை ஏற்று மற்றொரு பதிவர் வெளியிட்ட பதிவு இங்கே ..அவரின் பதில்களும் அருமை அந்த பதிவிற்கு பதில் அளித்த சூர்ய சிவா அவர்கள் அளித்த பதிலகளையும் கண்டிப்பாக படிக்க வேண்டு கிறேன்
  http://makizhnirai.blogspot.com/2014/06/self-estimation.html

  ReplyDelete
  Replies
  1. முன்னரே சகோதரியின் பதிவை படித்து கருத்து அளித்து விட்டேன்.

   சூர்யா சிவா ஐயா அவர்களின் பதிலையும் படித்து மிகுந்த ஆச்சிரியம் கொண்டேன்.

   Delete
 4. அருமையான பதில்கள்! என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே! முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

   Delete
 5. அடடா, ஏற்கனவே ராஜி அக்கா ஒரு தொடர்பதிவுல மாட்டிவிட்டிருக்காங்க.... இப்போ நீங்களுமா சார்? நேரமின்மை வாட்டி வதைக்கிறது.... முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

   Delete
 6. அருமையான பதில்கள் சகோ. என்னையும் சேர்த்துவிட்டீர்களா? எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

   Delete
 7. Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

   Delete
 8. அழகிய பதில்கள்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் "ராபிட் பையர்" ரவுண்ட் பார்த்தது போல் இருந்தது..:):)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 9. அறிவார்த்தமான பதில்கள். உங்களவுக்குலாம் நாங்க ஜிந்திக்கல.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. நான் ரூம் போட்டு யோசிச்சு எழுதின பதிலாச்சே இது.

   Delete
 10. அருமையான பதில்கள்
  என்னையுமா?
  முயற்சிக்கிறேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 11. உங்கள் செண்டிமெண்ட்ஸ், குடும்ப பாசம், நட்புக்கு தரும் மரியாதை என முழுமையாக அறிய தருகின்றன விடைகள், அருமை சகோ:))

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 12. நானும் படித்தேன்...
  நல்லா இருக்கு ...
  பூரிக்கட்டை இப்படி பூமராங்காய் பதிவுலகை சுற்றி வருவது மகிழ்வு...
  http://www.malartharu.org/

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது.

   பூரிக்கட்டை பூமராங்காய் சுற்றுவது மிகவும் மகிழ்ச்சி. பலருடைய சிந்தனைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

   Delete
 13. அருமையான பதில்கள்...... என்னையும் எழுதச் சொல்லி இருக்காரு..... எழுதணும்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார். சீக்கிரம் எழுதுங்க படிக்க காத்திருக்கிறேன்

   Delete
 14. அருமையாக எழுதியுள்ளீர்கள்.
  அட என்னையுமா?
  எதிர்பார்க்கவில்லை....!
  ஷாக் ஆகிட்டேன்.

  என் கனவுல யாராவது வந்து .... stop இக்கேள்வித் தொடர் முடிந்து விட்டதுன்னு சொல்ல மாட்டாங்களா...?

  ReplyDelete
  Replies
  1. அதுக்குள்ள யார் ஸ்டாப் சொல்லுவார்கள்.

   தங்களின் பதில்களையும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. நன்றாக பதில் சொல்லியுள்ளீர்கள். என்னையும் எழுத சொன்னதற்கு நன்றி. என் பதிலையும் பாருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பதிலையும் சென்று பார்த்து கருத்திட்டுள்ளேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 17. பதில்கள் நிதானமாகவும் தெளிவாகவும் உள்ளன. எனக்கும் அழைப்பு விடுத்தமைக்கு மிகவும் நன்றி சொக்கன்.

  ReplyDelete
 18. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப் பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  ReplyDelete
 19. தாமதமாக வந்ததற்காக வருந்துகிறேன். கேள்வி எண் ஐந்துக்கான உங்களின் பதில் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 20. அனைத்தும் அருமையான பதில்கள் !!
  கேள்வி 5 இற்கு ..மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  அனைவரது பதில்களையும் வாசிக்க இன்ட்ரெஸ்ட் ஆக இருக்கு :) வெவ்வேறு சிந்தனைகள் பலவிதமான யோசிக்க வைக்கும் பதில்கள்

  ReplyDelete