Monday, March 31, 2014

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் பணக்கார நிறுவனங்களான அட்டைப்பூச்சிகள்


அங்காடித்தெரு படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.  அந்த படத்தில் பெரிய வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலமையை அப்பட்டமாக தோலுரித்திருப்பார்கள். மேலும் அவர்கள் நின்று கொண்டே பல மணிநேரம் வேலை செய்வதால், பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நிலை உபாதைகளையும் சொல்லியிருப்பார்கள். அந்த படம் வெளி வந்த போது, இந்த மாதிரி பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை செலுத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள், நாங்கள் எப்பொழுதும் போல் தான் இருப்போம். யாரும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்று அந்த நிறுவனங்கள் தங்களின் போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்கு உதாரணம், முகநூலில் வெளிவந்துள்ள இந்த செய்தி.

என்னடா, நீ முகநூலுக்குள்ளேயே போக மாட்டியே அப்புறம் எப்படி உனக்கு இது தெரிந்தது என்று நீங்கள் கேட்பது, எனக்கு கேட்கிறது. உலகத்துலேயே முகநூலில்  ப்ராக்ஸி கணக்கு (proxy account) வைத்திருப்பவன் நானாகத்தான் இருப்பேன். இரு நாட்களுக்கு முன்பு அம்மணி தன்னுடைய முகநூலுக்கு வந்த ஒரு செய்தியை, படித்து காண்பித்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, வறுமையின் காரணமாக பணக்கார நிறுவனங்களிடம் தங்களுடைய வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கும்வரை, பணக்கார முதலைகள் மாறப்போவதில்லை என்று. அந்த செய்தியை படித்தபோது மனது மிகவும் கனத்துப்போனது.  இதை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி . 

SHARE பண்ணுங்க pls....
சில
நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ்
சென்றிருந்தேன். இரவு 9 மணி.
அதிகக் கூட்டம் இல்லை. நாள்
முழுக்க உழைத்த களைப்புடன்,
வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த
சிறு புன்னகையுடன்
துணிகளை எடுத்துக் காட்டிக்
கொண்டிருந்தார் அந்தப் பெண்.
மெலிந்த தேகம். மிஞ்சிப்
போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘
திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘
திருநெல்வேலிகாரங்கதான்
நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘
இப்போ அப்படி இல்ல...
அவங்கல்லாம் வேற கடைக்குப்
போயிட்டாங்க.. நாங்க
திருவண்ணாமலை பிள்ளைங்க
நிறைய பேரு இருக்கோம். 150
பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும்
எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘
காலையில 9 மணிக்கு வரணும்.
நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘
அப்படின்னா 14 மணி நேரம்
வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட்.
இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம்
உண்டா?’’
‘‘
ஷிப்டா... அதெல்லாம்
தெரியாதுண்ணே. 
காலையில
வரணும். நைட் போகனும்.
அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘
கேண்டீன் இருக்கு. கொஞ்ச,
கொஞ்ச பேரா போய்
சாப்பிட்டு வருவோம்.’’
‘‘
எத்தனை மணிக்கு தினமும்
தூங்குவீங்க?’’
‘‘12
மணி, 1 மணி ஆகும்.
காலையில எழுந்ததும்
வந்திருவோம்’’
‘‘
தங்குற இடம், சாப்பாடு எல்லாம்
நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணே.
நாள் முழுக்க
நின்னுகிட்டே இருக்குறோமா...
அதுதான் உடம்பு எல்லாம்
வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘
ம்ஹூம்.. உட்காரக் கூடாது.
வேலையில
சேர்க்கும்போதே அதை எல்லாம்
சொல்லித்தான் சேர்ப்பாங்க.
மீறி உட்கார்ந்தா கேமராவுல
பார்த்துட்டு சூப்பரவைசர்
வந்திடுவார்’’
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன்
நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருப்பதையும்
சூப்ரவைஸர் கேமராவில்
பார்க்கக்கூடும். அதனால் அந்தப்
பெண் இங்கும் அங்குமாக
துணிகளை எடுத்து வைத்தபடியேப்
பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500
ரூபாய்.’’
‘‘
வெறும் 5500 ரூபாய்தானா?
வேற
ஏதாவது முன்பணம், கல்யாணம்
ஆகும்போது பணம் தர்றது...
அதெல்லாம் உண்டா?’’
‘‘
இல்லண்ணே... அது எதுவும்
கிடையாது. இதான் மொத்த
சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன
பண்ணுவீங்க?’’
‘‘
தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.
எனக்கு ஒண்ணும் செலவு இல்லை.
சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம்
அனுப்புவேன். மீதி பேங்க்
அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘
எத்தனை வருஷமா இங்கே வேலைப்
பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப்
போகுது.
அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான்.
இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல்
மாசத்துலேர்ந்து மாசம் 5500
ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘
ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம்
வாங்குறாங்களா?’’
‘‘
சூப்ரவைசருங்க வாங்குவாங்க.
அதுவும் பத்து வருஷம்
வேலை பார்த்திருந்தாதான்.
இல்லேன்னா ஏழாயிரம்,
எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு.
அதுக்கு ஒரு நாளைக்கு 200
ரூபாய் சம்பளத்துலப்
பிடிச்சுக்குவாங்க.’’
‘‘
பிடிச்சுக்குவாங்களா?
அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘
அதான் சொல்றனேண்ணே...
லீவு உண்டு. ஆனால் சம்பளம்
பிடிச்சுக்குவாங்க. அதனால
நாங்க பெரும்பாலும் லீவு போட
மாட்டோம்’’
‘‘
அப்போ ஊருக்குப்
போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டு வருவேன்.
அதுக்கு லீவு கொடுப்பாங்க.
ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம்
கிடையாது’’
‘‘
ஊருக்குப்
போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப்
போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற
விலைக்கு வாங்க முடியுமா?
வெளியில பாண்டி பஜார்ல
எடுத்துட்டுப் போவோம்.
இங்கே எடுத்தாலும் சில சுடிதார்
மெட்டீரியல்
கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘
உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’

‘‘
ம்ஹூம்... அதெல்லாம்
தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன
விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘
தெரியலை..’’
‘‘
ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘
நெல் விவசாயம்..’’
‘‘
எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘
தெரியலை.. ஆனால்
கம்மியாதான் இருக்கு’’
‘‘
இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப்
பார்க்குறதுக்குப்
பதிலா சரவணா ஸ்டோர்ஸ்ல
வேலைப்
பார்த்தேன்னு சொல்லி திருவண்ணாமலையி
லேயே ஒரு துணிக்கடையில
வேலை வாங்க முபயாதா?’’
‘‘
வாங்கலாம். ஆனா இதைவிட
கம்மியா சம்பளம் கொடுப்பாங்க.
இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும்
சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ.
சம்பளக் காசு மிச்சம்.
அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப்
பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும்
பொம்பளைப் பிள்ளைங்க மட்டும்
800
பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும்
சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘
ஆவடில எங்க
அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும்
ஒரு நாள் லீவு போட்டுட்டுப்
போயிட்டு வருவேன்.’’
-
கனத்த மனதடன் அந்தப்
பெண்ணிடம்
விடைபெற்று நகர்ந்தோம்.
அந்த
தளம் முழுக்கவும், அடுத்தடுத்த
தளங்களிலும் இதேபோன்ற
உழைத்துக் களைத்த பெண்கள்.
அவர்களின்
உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும்
சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த
பிரமாண்ட கட்டடம் ஓர்
ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.
SHARE பண்ணுங்க(படித்தது)

-  (நன்றி முகநூல்)


எனக்கு ஒன்று மட்டும் புரியலை, அதாவது இந்திய அரசாங்கத்தில் "தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்"  என்று ஒன்று இருக்கிறது. அந்த துறை இந்த மாதிரி நிறுவனங்களிடம், தொழிலாளர்களின் நலன் பாதுக்காகப்படுகிறதா என்று சரி பார்க்காதா? இல்லை அப்படி பார்க்க வருகிறவர்களிடம், பணக்கார முதலைகள், பணத்தை கொடுத்து சரி கட்டிவிடுகிறார்களா?

வல்லரசு நாடாக ஆவதற்கான முன்னேற்றப்பாதையில் இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து, இந்தியாவில் பணக்காரர்கள் மட்டும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள், ஏழைகளாகவே இருக்கிறார்கள். 

இந்த பதிவிற்கு தொடர்பான, என்னுடைய முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும் - 
சுதந்திர இந்தியாவில் கொத்தடிமைகள்


18 comments:

  1. 15 வருடங்களுக்கு முன் ஒரே ஒரு சவக்கிடங்கு இருந்தது... இன்றைக்கு நிறைய...

    கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் போல் முதலில் வருகை தந்து கருத்து பதிவிட்டதற்கு நன்றி டி‌டி.

      Delete
  2. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது! பாவம் அவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  3. இதுக்குதான் இந்தமாதிரி கடைக்கே போறதில்லை:((((

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      எனக்கு எப்பொழுதுமே முகநூலில் சொல்லப்பட்ட அந்த கடையின் மீது ஒரு நல்ல அபிப்பிராயமே இருந்ததில்லை. அதனால் நானும் அந்த கடைக்கு போவது கிடையாது.

      Delete
    2. இதுதான் சரியான முடிவு நண்பரே. மக்களிடம் “அங்காடித்தெரு“வின் தாக்கம் அதிகரிக்க வேண்டும. சட்டம்-ஒழுங்கைக் “காப்பாற்றுவோ“ரும் எப்போதும் முதலாளிகளுக்கே மறைமுக மற்றும் நேர்முக ஆதரவாக இருக்கிறாரகள். உங்கள் பதிவு படிப்பவர்களில் ஒருசிலரையாவது அந்தக் கடைகளுக்கு எதிராகத் திருப்பும் என்று நம்புகிறேன். நன்றி, பாராட்டுகள். (நாமளும் உங்கள மாதிரித்தாங்க... முகநூலில் நம்ம வலைப்பதிவைக் கொண்டுபோய் இடுவதோடு சரி.. உட்கார்ரதில்ல...ஓடிவந்திடுவேன்... நேரக்கொலை!)

      Delete
    3. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி திரு.முத்துநிலவன் ஐயா .

      ஆஹா, நீங்களும் என்னைப் போல தானா!!!. அது என்னவோ எனக்கு முகநூலில் உட்கார பிடிப்பதில்லை. சரியாகச் சொன்னீர்கள் - நேரக்கொலை என்று.

      Delete
  4. அரசாங்கமே முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் புரியும் போது ஊழியர் நலனை யார் நினைக்கப் போகிறார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் பகவான்ஜீ.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. இந்த நிலவரம் அங்கு மட்டும் இல்லை உலகம் பூராவும் இருக்கத் தான் செய்கிறது. முதலாளி தொழிலாளி உறவுகள் இப்படியே தான் இருக்கும் போல பெரிய இடைவெளியாகவே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்த நிலமை உலகம் பூராவும் இருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்து மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் தான் தொழிலாளிகள் மிக மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  6. முகப்புத்தகத்தில் நானும் படித்தேன்.

    இப்போது இது போன்ற பல கடைகள் முளைத்து விட்டன. இத்தனை பேரின் உழைப்பில் ஒருவர் மட்டும் கொழித்துக் கொண்டிருக்கிறார்..... :(

    ReplyDelete
    Replies
    1. டி‌டி அவர்கள் சொன்னது போல் 15 ஆண்டுகளில் எத்தனை எத்தனை கடைகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  7. என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்
    ஏழ்மையில் பிறந்ததைத் தவிர
    மனம் கனக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று சும்மாவா சொன்னார்கள். இம்மாதிரி கடைகளில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் இளமையில் வறுமையை அனுபவிப்பவர்கள் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      Delete
  8. நானும் இதை முகநூலில் படித்தேன்.. உங்களின் ஆதங்கம் புரிகிறது..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாடோடி

      Delete