ஒரு வழியா கதாநாயகி அறிமுகமாகிற
காட்சியை எடுத்து முடித்தவுடன், உங்களோட அந்த continuity காட்சியை எடுக்கபோறோம், வாங்கன்னு சொன்னாங்க. நாங்களும்
அவுங்க சொன்ன இடத்துக்கு போனோம். அப்பத்தான் காமிரா எல்லாம் செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
அது கொஞ்சம் நேரம் எடுத்ததுனால, இயக்குனர் அங்க இருக்கிற புல்லுல
போய் உட்கார்ந்தாரு. நாங்களும் அவர் பக்கத்துல போய் உட்கார்ந்தோம். அவ்வளவுதான் உடனே, அமலாபால் அங்கே இருக்கிற
எடுபிடிங்கக்கிட்ட, “ஏய், உங்க டைரக்டர் கீழே உட்கார்ந்திருக்காரு, அதனால் போய் சேர் கொண்டுவான்னு” விரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா யாருமே போகலை. அவுங்களும் ரெண்டு மூணு தடவை சொன்னதுக்கு அப்புறம், ஒருத்தர் போய் சேர் கொண்டு வந்தாரு. ஆனா இயக்குனர் அதுல உட்காரலை. மறுபடியும்
அமலாபால், சேர்ல உக்காருங்க விஜய்ன்னு சொன்னாங்க. அவரும், “வேண்டாம் அம்லா, இது தான் வசதியாக இருக்குதுன்னு” கீழேயே
உட்கார்ந்திருந்தாரு (இயக்குனர் எப்பவுமே அமலாபாலை, அம்லான்னு
தான் கூப்பிடுவாரு). நானும் மற்ற நண்பர்களும் அமலாபால் இயக்குனரிடம் காட்டிய கரிசனத்தைப்
பார்த்து நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டோம். இதுல ஒரு நண்பருக்கு நாங்க ஏன் அப்படி
சிரிச்சுக்கிட்டோம்னு புரியலை. அவர் ரொம்ப இந்த சினிமா கிசு கிசு எல்லாம் படிக்காதவரு.
இந்த காட்சியை எடுத்து முடிச்ச பிறகு எங்களிடம், “ஏங்க ஒரு கதாநாயகி, இயக்குனர்
கீழே உட்காருவதைப் பார்த்து, சேர் கொண்டுவாங்கன்னு சொன்னா, அதுக்கு நீங்க ஏங்க அப்படி சிரிச்சுக்கிட்டீங்கன்னு” கேட்டாரு. நான் உடனே, ஏங்க உங்களுக்கு விஷயமே தெரியாதா, “இவுங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு தெய்வீகக் காதல் ஓடிக்கிட்டு
இருக்குதுங்க, அதான் அவரு கீழே உட்கார்ந்தவுடனே, அவுங்களுக்கு பொருக்கலைன்னு” சொன்னேன். அதை கேட்ட அந்த ஒண்ணும் தெரியாத நண்பரும், ஏங்க பத்திரிக்கையில என்ன என்னமோ எழுதுவான் அதையெல்லாமா நம்புறதுன்னு அப்பாவியா
திருப்பி கேட்டாரு. இவரு இப்படி கேட்டவுடனே, என் பக்கத்துல இருந்த
நண்பருக்கு கோபம் வந்துடுச்சு. “ஏங்க இப்பத்தான் நீங்க பார்த்தீங்க
இல்ல, இவரு அவுங்களை “அம்லா, அம்லான்னு
கூப்பிடுறதும், அவுங்க பதிலுக்கு விஜய், விஜய்ன்னு பக்கத்துல போய் ஒட்டி நின்னுக்கிட்டு பேசிக்கிறதும், அவர் கீழே உட்கார்ந்தவுடனே, சேர் கொண்டு வா, சேர் கொண்டு வான்னு கேக்குறதும், இப்படி இதையெல்லாம் பார்த்துமா, நீங்க நம்ப மாட்டேன்னு சொல்றீங்கன்னு கோபமா கேட்டாரு. அப்ப பகக்த்துல இருந்த
இன்னொரு நண்பரும், “அட, நீங்க வேறங்க, இவர் அப்பாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு, அமலாபால் தெலுங்கு பட படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு போயிருக்காங்க, இவுங்க போனது மட்டுமால்லாம அப்பா,அம்மாவையும் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க, அப்புறம் இவரோட தெய்வத் திருமகன் படத்துலேயும் இவுங்க தான் நடிச்சிருக்காங்க இதுலேருந்து
எல்லாம் உங்களுக்கு ஒண்ணும் தெரியலையான்னு” அவர் பங்குக்கு கேட்டாரு.
கடைசில நாங்க கிசு கிசு படிச்சு, அது உண்மைதான்னு நேரே பார்த்து
தெரிஞ்சுக்கிட்ட ஒரு விஷயத்தை, இதையெல்லாம் கூட தெரிஞ்சுக்காம சினிமாவில நடிக்க
வந்த ஒரு மனுஷனை நம்ப வச்சுட்டோம். சரி, அடுத்த பாகத்தோட என்னோட
இந்த திரைப்பட அனுபவத்தை முடிச்சுக்கிறேன்.
என்னடா, இவன் நடிச்ச அந்த continuity
காட்சியை பற்றி சொல்லுவான்னு பார்த்தா, வேற எதையோ
சொல்லியிருக்கானேன்னு நீங்க நினைக்கிறது புரியுது. இதுலேயே சொன்னா, இந்த பதிவோட வீரியம் குறைந்து விடும் அப்படின்கிறதுனால, தனி பதிவா இதை மட்டும் சொல்லியிருக்கேன். ஏறக்குறைய ஐந்து நாள் இந்த திரைப்படத்துல
நடிச்சிருக்கேன், அதுல இந்த விஷயத்தை கூட சொல்லலைன்னா அப்புறம் நான் அந்த
படத்துல நடிச்ச அனுபவத்தை எழுதி என்னங்க பிரயோஜனம்!!!!.
தலைவா திரைப்பட அனுபவம் (இறுதி பகுதி) - அமலாபால் சில்க்ஸ்மிதா மாதிரி இருக்கிறார் என்று நான் சொன்னது
தலைவா திரைப்பட அனுபவம் (இறுதி பகுதி) - அமலாபால் சில்க்ஸ்மிதா மாதிரி இருக்கிறார் என்று நான் சொன்னது
- இன்னும் சொல்கிறேன்
யோவ் நல்லவேளை நீங்க ஒரு படத்தோட நடிக்கிறதை விட்டு விட்டீங்க இல்லைன்னா நீங்கமுழு நேர கிசு கிசு சினிமா எழுத்தாளர் ஆகி இருப்பிங்க
ReplyDelete
ReplyDeleteஇனிமே உங்களை மாதிரி ஆட்களை நடிக்க கூப்பிடும் போது நடிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் உங்கள் கண்களை கட்டி போட்டும் காதை அடைத்து விட்டும்தான் மீதி படத்தை எடுக்கனும்
கிசு கிசு கேட்பதில் தான் என்னவொரு கிச்சு கிச்சு... ஹா... ஹா...
ReplyDeleteசொல்லுங்க
ReplyDeleteசொல்லுங்க
காத்துக்கிட்டு இருக்கோம்
கிசுகிசுவை உண்மை ஆக்கிட்டீங்க போல!
ReplyDeleteசுவாரஸ்யம்.....
ReplyDeleteகண்ணைக் கட்டி விட்டால் நமக்கு இது போல விஷயங்கள் கிடைக்குமா மதுரைத்தமிழன்?
so போன வேலையைப் பொறுப்பா முடுசுடிங்க!!
ReplyDeleteஅன்பின் சொக்கன் சுப்ர மணீயன் - பதிவு நன்று - கிசு கிசு - ஆகா ..... இறுதிப் பகுதியும் படித்து விடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஆஹா அப்பவே பத்திகிச்சா! ம்ம்ம்மிப்பதான் கல்யாணத்துல முடிய போகுதே! எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்துவோம்!
ReplyDelete