Saturday, December 6, 2014

சிட்னியில் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு - 2015



நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடாசாலைகள் கூட்டமைப்பு (NSW Federation of Tamil Schools) நடத்தும் முதலாவது “ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாடு” – 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25ஆம் தேதி சிட்னியில் நடக்க இருக்கிறது.  





நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இயங்கும் அனைத்து தமிழ் பள்ளிகளும் ஒருங்கிணைந்து உருவாக்கிய கூட்டமைப்புத்தான் இந்த “நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடாசாலைகள் கூட்டமைப்பு” (NSW Federation of Tamil Schools) ஆகும். (சிட்னியில் இந்தியத் தமிழ் பள்ளிக்கூடமான “பாலர் மலர் தமிழ் பள்ளிக்கூடம் ஐந்து இடங்களிலும், இலங்கைத் தமிழ் பள்ளிக்கூடங்கள் ஐந்து இடங்களிலும் இயங்குகிறது). இந்த கூட்டமைப்புத்தான் முதலாவது தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டை அடுத்த வருடம் நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள் – “ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்பித்தல்” . இந்த கருப்பொருளின் அடிப்படையில் பல தலைப்புகளில் கட்டுரைகளை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக ஆஸ்திரேலியா மட்டும் இல்லாமல் மற்ற புலம் பெயர்ந்த நாடுகளிளிலும் தமிழ் பயிற்றுவிப்பதை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

1. Effective and innovative ways of introducing Tamil to preschool students
2. Introducing Tamil Alphabets – Journey from sound to letters
3. Using songs to teach basic Tamil and simple conversation
4. How to maintain students’ interest in learning Tamil through middle years
5. Role of multimedia in class rooms for primary and secondary students
6. Teaching approach for delivering spoken Tamil to young adults in a short time frame
7. How to trigger enthusium and wanting to learn more hunger among higher class students.
8. How to increase HSC participation.
9. What strategy is needed to take Tamil language beyond three generations
10. Reading strategies for imtermediate and higher classes
11. Kinds of writing – samples and criteria
12. Teaching Tamil Grammer in context
13. Task based learning in Tamil
14. Motivating through structured testing and reporting






பின் குறிப்பு – கட்டுரைச் சுருக்கத்தை டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் இன்று எழுதலாம்,நாளை எழுதலாம் என்று நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறேன். இன்னும் 10 நாட்கள் இருக்கிறது, அதற்குள் கட்டுரைச் சுருக்கத்தை எழுதி அனுப்பிவிட வேண்டும். 

15 comments:

  1. உங்களுக்கெல்லாம் 10 நிமிஷம் கிடைத்தாலே பல நல்ல கட்டுரைகளை எழுதிவிடுவீர்கள் 10 நாட்கள் என்பது டூமச் டைம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்பு நண்பரே கட்டுரையை சிறப்பாக எழுதி காரைக்குடியின் பெயரை நிலை நிறுத்திட எமது வாழ்த்துகள்.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. ஹலோ! கில்லர்!!!!! அதென்னப்பா உங்கூரு?!!ஹஹஹ் காரைக்குடி தமிழ்நாட்டில்தான் உள்ளது...!!!! அப்படித்தான் நினைக்கின்றோம்!!....ஹஹஹஹ

      Delete
  4. அருமையான கட்டுரையை சமர்ப்பிக்க வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  5. போட்டிகளில் வெல்வதை வரலாறாகவே வைத்திருகிறவர் நீங்கள் ...
    நல்ல கட்டுரையை சமர்பிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமை சகோதரரே!

    சிறப்பான கட்டுரையை வளங்கி வெற்றி பெற
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  8. சிட்னியில் தமிழ் ஆசிரியர் மாநாடு சிறப்பாக நடக்கவும், தங்களின் பங்களிப்பு சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மாநாடு சிறப்பாக அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தாங்கள் அருமையான கட்டுரை வழங்கி சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அயலகத்தில் தமிழும் தமிழ்க்கற்பித்தலுக்கு இதுபோன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு மேம்பாடு அடைகின்றமை குறித்து மகிழ்ச்சி அய்யா!
    தங்கள் கட்டுரையும், மாணவர் மொழிப்பாடத்தில் தடைகளைத்தாண்டி எளிதாகக் கற்கத் துணை செய்வதாய் அமையும் என்பதில் அய்யமில்லை.
    அதைப் பதிவாக வெளியிடலாம் தானே!
    காத்திருக்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  12. ஆஹா! அருமையான வாய்ப்பு நண்பரே! நீங்கள் நிச்சயமாக எழுதி விடுவீர்கள்! எழுதிவிட்டீர்களா? தமிழ்நாட்டின் பெருமையைக் காப்பாற்றுவீர்கள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete