Monday, January 6, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

என்னடா, நீ இன்னும் தலைவா படம் அனுபவத்தையே முடிக்கலை, அதுக்குள்ள இன்னொரு தொடர் கட்டுரையை ஆரம்பிச்சுட்டே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தலைவா தொடர் அதிகபட்சமாக இன்னும் மூன்று பகுதிக்குள் முடிந்து விடும். அந்த தொடர் படம் வெளிவந்தவுடன் தான் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்ததால், இவ்வளவு தாமாதாமாகி விட்டது. இந்த உள்ளூர் சுற்றுலா தொடர் இரண்டு பகுதிகள் தான். அதனால் தான் இதனை ஆரம்பித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.


2012ஆம் ஆண்டு இறுதியில், அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில், ஆறு குடும்பங்கள் சேர்ந்து ஏறக்குறைய 600கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காஃப்ஸ் ஹார்பர் (“coffs harbour”) என்ற இடத்துக்கு காரில் சென்றோம். அது தான் நான் கார் ஓட்டிச்சென்ற முதல் தொலைத்தூர கார் பயணம். 2013ஆம் ஆண்டு முடிவில், எனக்கு இரண்டு நாட்கள் தான் விடுமுறை இருந்தது. அதனால் எங்குக் செல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஓவியாவோ, நாம் எங்காவது சென்று இரண்டு,மூன்று தங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அதனால் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை எங்கள் வீட்டிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வுள்ளாங்காங் (“Wollongong”) சென்று இரண்டு நாட்கள் தங்கி, இன்று மாலை தான் வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு நாட்கள் தங்குறதுன்னு முடிவாகி விட்டது. அதனால எங்க வீட்டு அம்மணி, ரைஸ் குக்கர் முதற்கொண்டு, அரிசி,புளிக்காச்சல், இட்லி,சட்னி என்று ஏகப்பட்ட முட்டை முடிச்சுகளை முதல் நாள் இரவே எடுத்து காரில் வைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழ்மை காலையில நாங்க அப்படி இப்படின்னு கிளம்பவே 10.30 மணி ஆயிடுச்சு. சரியா 11.30 மணியைப்போல அந்த ஹோட்டலுக்கு போனோம். 2.00 மணிக்கு தான் செக்-இன் செய்ய முடியும். இருந்தாலும் எங்களோட அறைக்குள்ள போயிடலாம் அப்படின்னு ஒரு குருட்டு நம்பிக்கையில, ஹோட்டலுக்கு போனேன். அங்க இப்பத்தான் உங்க அறையை சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, அதனால நீங்க ரெண்டு மணிக்கே வாங்கன்னு சொல்லிட்டாங்க. நம்க்கு எப்பவுமே சரியான நம்பிக்கையே ஒழுங்கா வேலை செய்யாது, இதுல குருட்டு நம்பிக்கை எப்படி வேலை செய்யும்னு நினைச்சுக்கிட்டு, சரி பக்கத்துல இருக்கிற புத்தர் கோவிலுக்கு போகலாம்னு அங்க போனோம்.அந்த புத்தர் கோவிலுக்கு பேர் – “Nan Tien Temple” (இதற்கு, “தெற்கில் ஒரு சொர்க்கம்” என்று சீன மொழியில் அர்த்தமாம். இந்த கோவில் இருப்பதும் சிட்னியின் தெற்கில் தான்). 26 ஏக்கர் பரப்பளவில், 1995ல் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஊருக்கு, இந்த கோவில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். 
இந்த கோவில் வளாகத்தில் வெளிப்பிரகாரத்தில்(தரைத்தளத்தில்)  எட்டடுக்கு “பகோடா” (“pagoda”) இருக்கிறது. இந்த பகோடாவிற்கு போவதற்கு நம்மூர் மலைமேல் இருக்கும் கோவில்களுக்கு செல்வது போல், படிகள் ஏறி செல்ல வேண்டும்.இந்த பகோடாவிற்கு நேர் எதிரில் தான் இந்த புத்தர் சிலை இருக்கிறது.
  
இந்த தரைத்தளத்தில் தான் கார் பார்க்கிங் இருக்கிறது. இந்த தளத்தைச் சுற்றிலும் நிறைய சின்ன சின்ன சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது. உதாரணத்திற்கு, என் மனதை கவர்ந்த சில சிலைகளின் புகைப்படங்களை கீழே பாருங்கள்.
நாங்கள் நேராக முதலில் மெயின் டெம்பிளுக்குள் சென்றோம். நம்மூர் கோவில்கள் மாதிரி, செருப்பை வெளியில் விட்டுவிட்டு செல்ல வேண்டும். அங்கே ஒரு பெரிய ஹால் மாதிரியான ஒரு அரை இருக்கிறது. மேடையில் ஐந்து புத்தர் சிலைகள் இருக்கின்றன. தரையில் அமராமல் உட்காருவதற்கு ஏற்ற பலகைகள் வைத்திருக்கிறார்கள். அதில் அமர்ந்து கொண்டு பிராத்தனை செய்கிறார்கள். அந்த அறையை சுற்றி 10,000 சிறிய உருவத்திலான புத்தர்களை சுவற்றில் பதித்திருக்கிறார்கள். மண்டபத்திற்குள் யாரும் புகைப்படம் எடுக்க கூடாது. சரி,புகைப்படம் எடுக்க முடியாது போல இருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, நிறைய பேர் வெளியில் நின்று கொண்டு உள்நோக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்பற்றி எடுத்துக்கொண்டேன்.

கோவில் வளாகத்திற்குள் ஒரு அழகான தாமரைக் குளம் உள்ளது.இதில் இரண்டு வாத்துக்கள் சென்றுக்கொண்டிருந்தன.

 அப்போது ஒரு வாத்து தண்ணீரில் மூழ்கும் போது, நான் கிளிக் செய்தது தான் இந்த படம்.
ஒரு வழியாக நாங்க இந்த கோவிலை சுற்றி பார்த்து முடித்து பிறகு நேரத்தை பார்த்தால், மணி இரண்டாகியிருந்தது. நாங்க ஹோட்டலுக்கு போய் சேர்ந்தபோது மணி இரண்டரை. அறைக்குள்ள போய் கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, பீச்சிற்கு போகலாம் என்று கிளம்பினோம். அந்த ஹோட்டல் வரவேற்பறையில் இருந்தவர்களிடம் பீச்சிற்கு எப்படி போக வேண்டும் என்று கேட்டபொழுது, அவர்கள், இங்கேருந்து ஒரு ஏழெட்டு நிமிட நடையில் பீச் வந்துவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நம்பி நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்... நடந்தோம்... நடந்துக்கொனேயிருந்தோம்...

எவ்வளவு நேரம் நாங்கள் நடந்து அந்த பீச்சை அடைந்தோம் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2


14 comments:

 1. எல்லாப்படங்களும் அருமை. வாத்துப்படம் வெகு ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா

   Delete
 2. படங்கள் மிகவும் அழகு. நாங்களும் உங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. என்னுடன் பயனித்துக்கொண்டு வருவதற்கு மிக்க நன்றி.

   Delete
 3. படங்களுடன் கூடிய பதிவு அருமை

  ReplyDelete
 4. உலகில் எந்த மூலைக்கும் நாம் வெகேஷன் சென்றால் கூடவே எலுமிச்சை சாதமும் கூடவே வந்துவிடுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   Delete
 5. இனிமையான பகிர்வுடன் இந்த வருடம் பயண ஆரம்பம்... படங்கள் அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 6. கண்ணைக் கவரும் படங்களுடன் இனிய சுற்றுலா தொடர் ஆரம்பமா? சூப்பர்....

  ReplyDelete
 7. தாமரைக்குளம் கருத்தைக்கவர்ந்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete