Thursday, January 23, 2014

கொலஸ்ட்ரால் - தொடர்ச்சி

 

சென்ற வாரம் மீண்டும் உணவியலரை (Dietician) போய் சந்தித்தேன். அவர் முதல் தடவையே ஒரு பேப்பரை கொடுத்து, அடுத்த முறை வரும்போது, நீங்கள் தினமும் என்ன என்ன சாப்பிட்டீங்கன்னு எழுதிக்கிட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால நானும் தினமும் காலையில பிரட்டு இல்லன்னா சீரியல்ஸ், மதியம் சாதமும், கொழம்பும், காய்கறிகளும், இரவு இட்லி,தோசை இல்லன்னா பீட்ஸா, பாஸ்தான்னு சாப்பிட்டேன்னு அதில எழுதி கொண்டுபோயிருந்தேன். நீங்க எந்த அரிசியில சாதம் சாப்பிடுறீங்கன்னு கேட்டாங்க. நானும் பாஸ்மதி அரிசியில தான் சாப்பிடுறேன்ன்னு சொன்னேன். பாஸ்மதி அரிசியெல்லாம் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா இந்த இட்லி,தோசையைப் பத்தி தான் அவுங்களுக்கு ஒண்ணும் தெரியலை. இங்கிருக்கிற சில வெள்ளைக்காரர்களுக்கு தோசையைப் பற்றி தெரிஞ்சிருக்கு. ஆனா என் அதிர்ஷ்டம், இந்த அம்மாவிற்கு தோசை,இட்லி பற்றியெல்லாம் ஒண்ணுமே தெரியலை. அப்புறம் ஒரு வழியா அரிசியை ஊற வைக்கிறதிலிருந்து, இட்லி ஊத்துறது, தோசையை வார்த்துறது வரைக்கும் அவுங்களுக்கு புரிய வச்சேன். அவுங்க உடனே, நீங்க வந்து பாஸ்மதி அரிசியில தான் இதெல்லாம் சாப்பிடுறீங்க, அதனால ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு சொன்னாங்க. அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது, ஆஹா இந்த அம்மா, இட்லி,தோசை எல்லாம் கூட பாஸ்மதி அரிசியில தான் செய்வோம்னு நினைச்சுக்கிட்டாங்க போல. அட கடவுளே! சரி, மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிப்போம்னு, நாங்க சாதத்துக்கு பாஸ்மதி அரிசியும், இந்த மாதிரி இட்லி, தோசைக்கு வேற அரிசியும் தான் பயன்படுத்துவோம். அதுவும் எங்க ஊர்ல, சாதத்துக்கு கூட வேற அரிசியும், பிரியாணிக்கு மட்டும் தான் பாஸ்மதி அரிசியும் பயன்படுத்துவோம்னு அவுங்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அவுங்க தலையைப் பிடிச்சுக்கிட்டு, உங்களோட  சாப்பாட்டு  விஷயத்துல இவ்வளவு குழப்பமான்னு கேட்டுட்டு (இன்னும் கேட்டா நமக்கு தலைவலியை உண்டு பண்ணிடுவான்னு நினைச்சுக்கிட்டாங்க போல!!!), ஒரு பேப்பரை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தாங்க. அதுல, எந்த எந்த பொருட்கள்ல அதிகமா "GLYCAEMIC INDEX", எது எதில அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்குதுன்னு போட்டிருந்துச்சு. நம்மா சாப்பிடுகிற பொருட்கள்ல அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கனுமாம்.

அந்த பட்டியல் தான் இது.

 இங்க பால் வந்து ரெண்டு வகையா கிடைக்கும். ஒண்ணு வந்து "FULL CREAM", இன்னொன்னு வந்து "LITE MILK / SKIM MILK". அதாவது என்னன்னா, "FULL CREAM" வந்து, நல்லா கெட்டியா, கொழுப்புச்சத்து எல்லாம் எடுக்காம இருக்கும், இன்னொரு பால் வந்து, மொட்டைத் தண்ணியா, கொழுப்புச்சத்து கொஞ்சம் கூட இல்லாம வாய்க்கு விளங்காம இருக்கும். நான் முன்னாடியெல்லாம் அந்த "FULL CREAM" பால்ல தான்  காபியோ,டியோ குடிப்பேன். (நல்லா கவனிச்சுக்குங்க, போட்டுக்குடிப்பேன்னு சொல்லலை, ஏன்னா போட்டுக் கொடுக்கிறது வீட்டு அம்மணியோட வேலையாச்சே!!!) போன தடவைவே, நீங்க "LITE MILK" தான் குடிக்கணும்னு சொன்னாங்க. அதனால நானும் அந்த "LITE MILK"ல டீயை குடிச்சேன். கடவுளே, வாய்க்கு விளங்கலை. டீயே இந்த நிலமைன்னா, காபி எப்படியிருக்கும்னு நினச்சுக்கிட்டு, சரி,இனிமே டீக்கு தடா போட்டுட வேண்டியது தான் போலன்னு முடிவெடுத்தேன். நல்ல காலம், நண்பர் அண்ணா சுந்தரம், கொலஸ்ட்ராலுக்காகவே ஒரு பால் இருக்குது அதை வாங்கி குடிங்கன்னு சொன்னாரு. அந்த பாலோட பேரு "HEART ACTIVE" . இப்ப இதுல தான் டீ குடிக்கிறதே. பரவாயில்லைன்னு தான் சொல்லணும்.

 
 
அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. போன தடவை பாலுக்கு வேட்டு வச்சாங்க, இப்ப தயிருக்கு வேட்டு வச்சுட்டாங்க. அந்த வீணாப்போன தண்ணிப்பால் தயிரைத்தான் தான் சாப்பிடணுமாம். அம்மணி எப்பவும் கெட்டியான பாலைக் காய்ச்சித்தான் தயிர் செய்வாங்க, இப்ப அந்த "HEART ACTIVE" பால்லேருந்து நேத்து தான் தயிர் உறைய வச்சிருக்காங்க. பார்ப்போம், அந்த தயிர் எப்படியிருக்குன்னு.

பாட்டி வைத்தியம் -  இதுக்கு நடுவுல என் நண்பரோட மாமனார் ஊரிலிருந்து வந்தவர், எனக்கு கொலஸ்ட்ரால் இருக்குதுன்னு கேள்விப்பட்டவுடனே, அம்மணிகிகிட்ட இட்லி ஊத்தும்போது, முணு, நாலு இட்லியில பூண்டை தோலுரிச்சு போட்டுடுமா, அதுவும் இட்லியோட வெந்துடும். அந்த இட்லிகளை அவர் சாப்பிடட்டும். அப்புறம் கொலஸ்ட்ராலை நீங்க தான் தேடணும்னு சொன்னாரு. அடுத்த வாரத்திலிருந்து தான் அதை முயற்சி செய்து பார்க்கணும்.

 
 



13 comments:

  1. பட்டியலுக்கு நன்றி...

    நான் ஒன்னு போட்டுக் கொடுக்கிறேன்... ஹிஹி...

    காலையில் பத்தே பத்து பல் பூண்டு துண்டுகளை பாலில் வேக வைத்து, அப்படியே சாப்பிட்டு விட்டு பாலை குடியுங்கள்... கொலஸ்ட்ராலை பிறகு தேடணும்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      இதோ இன்னொரு பாட்டி வைத்தியம். இதைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இட்லி சாப்பிடாத நாட்களில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

      என்ன! படிக்கும்போதே, ஒரு மாதிரியாக இருக்கிறது. பத்து பல் பூண்டு துண்டுகளை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் எப்படியிருக்குமோ. மேலும் அந்த பாலை வேற குடிக்கச் சொல்லுகிறீர்கள். உம்!!!!. முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. இட்லிக்கு பாஸ்மதி அரிசியா!? வெளங்கிடும். ரொம்ப காஸ்ட்லியான டாக்டரு போல!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஊர் மருத்துவர்களுக்கு நம்ம சாப்பாட்டைப் பத்தி என்ன தெரியும்!!. அதனால் தான் இட்லிக்கு பாஸ்மதி அரிசின்னு நினைச்சிருக்காங்க.

      Delete
  3. ஹிஹி... நீங்களே யாராவது ரத்தம் கொடுத்தா தேவலைன்னு இருக்கீங்க... உங்களுக்கு கொழுப்பா?

    பாஸ்மதி அரிசியில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவுகள் குறைவு என்று கேள்விப்பட்டதுண்டு... பூண்டு நல்ல முயற்சி, கொழுப்பைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்றது. கொழுப்பு வந்துடுச்சே.
      உண்மை தான். பாஸ்மதி அரிசியில் கெட்ட கொழுப்பின் அளவு சற்று குறைந்து காணப்படுகிறது.

      இப்பொழுது, பூண்டைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  4. தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது வென்னீர் பொறுக்கும் சூட்டில் குடித்தால் கொழுப்பு கரையும் என்று சொல்கிறார்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா, மற்றுமொரு பாட்டி வைத்தியத்தை சொன்னதற்கு.
      முயற்சி செய்கிறேன்.

      Delete
  5. //அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. //

    அதுக்காக 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுத கூடாது...

    ReplyDelete
  6. //அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. //

    அதுக்காக 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுத கூடாது...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.
      ஆஹா, எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.
      சாதத்தை சாப்பிட்டு அப்புறம் 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுதக்கூடாதுன்னு சொல்றீங்களா?

      Delete
    2. வரவேற்புக்கு நன்றி.. . தங்கள் வலைபதிவிற்கு முதல் முறை வந்துள்ளேன். மதுரை தமிழனின் பதிவுகளை தொடர்ந்து படிப்பது வழக்கம். தங்களின் comments ஐ பார்ப்பது உண்டு. தங்கள் தளத்திற்கு வரும் சந்தர்ப்பம் இப்பொழுது கிட்டியது. இனி என்னை அடிக்கடி தங்கள் வலை தளத்தில் பார்க்கலாம். நான் பதிவு எழுதுவது இல்லை. ஆனால் comments மட்டும் எழுதுவது உண்டு. மீண்டும் சந்திப்போம்...

      Delete
    3. தங்களை அடிக்கடி என்னுடைய வலைப்பூவில் பார்க்கபோவதற்கு மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் பதிவுகளை எழுதப்பாருங்களேன்.

      Delete