Friday, January 17, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2


நாங்க அன்றைக்கு வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து புளியோதரையும், தயிர் சாதத்தையும் செய்துக்கொண்டு வரலை. இத்தாலியன் உணவகமோ அல்லது இந்திய உணவகமோ பக்கத்தில் இருக்கும் என்று அந்த கியாமாவின் முக்கிய கடைவீதியில் தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். பார்த்தா அந்த வகையான உணவகங்கள் கண்ணுக்கு தென்படவேயில்லை.  அப்புறம் ஒரு தாய்லாண்ட் உணவகத்துக்குச் சென்று, நான் ஒரு “vegetarian fried rice” காரமாக வேண்டும் என்றும், அம்மணியோ, சாதமும், “coconut creamமோடு இருக்கும் chicken” வேண்டும் என்றும் சொன்னோம். நாங்க ஆர்டர் பண்ணியாச்சு, ஓவியாவிற்கும், இனியாவிற்கும் என்ன சொல்லலாம் என்பது தான் ஒரு பெரிய மில்லியன் டாலர் கேள்வியாகி விட்டது. கடைசியில் அவர்களுக்கு வெள்ளை சாதமும், தயிரும் கொண்டு வாருங்கள் என்றோம். அதற்கு அவர்கள் சாதம் மட்டும் இருக்கு என்று சொல்லி, வெறும் வெள்ளை சாதத்தை மட்டும் கொண்டு வந்தார்கள். ஒரு வழியா அவர்களுக்கு அந்த வெள்ளை சாதத்தோடு, சிக்கன் மற்றும் என்னுடைய உணவில் இருந்த காய்கறிகளையெல்லாம் வைத்து அவர்களை சாப்பிட வைத்தோம். என்னோட உணவு நல்ல காரமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அந்த ஃப்ரைடு ரைஸை சாப்பிட்டால், அதில் கொஞ்சம் கூட காரமே இல்லை. அடப்பாவிகளா, காரம் ரொம்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எப்படி செய்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே எப்படியோ கஷ்டப்பட்டு அதை சாப்பிட்டு முடிச்சேன். அப்பத்தான் நம்ம பாரம்பரிய உணவான புளியோதரையும், எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் “எங்களையா உதாசீனப்படுத்தின, நல்லா அனுபவி மகனே,அனுபவின்னு சொல்லாம சொல்லி சிரித்த மாதிரி எனக்கு தோணுச்சு.

 

சாப்பிட்டு முடிச்ச பிறகு, என்னுடைய நடைப் பயிற்சியை அங்கேயும் தொடர்ந்தேன். நடக்கும்போது அங்க இருந்த ஒரு சில கடைகளில் அம்மணி உள்ளே சென்று, தனக்கு வேண்டிய பாசி,மணிகளையெல்லாம் வாங்கிக்கொண்டார். அப்போது ஓவியா ஒரு அருமையான கேள்வியை கேட்டார்.

“ஏம்பா நான் ஏதாவது வேணும்னு கேட்டா வாங்கிக்கொடுக்க மாட்டேங்கிறீங்க ஆனா அம்மாவுக்கு மட்டும் அவுங்க கேக்குறது எல்லாம் வாங்கிக்கொடுக்கிறீங்க”

உனக்கு நான் வேணாம்னு சொன்னா, கொஞ்ச நேரத்துல நீ சமாதானம் ஆயிடுவ, ஆனா உங்கம்மா அப்படியான்னு, சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா உடனே அந்த எண்ணத்தை தண்ணியைவிட்டு கழுவிட்டேன். அந்த கேள்விக்கு வேற எந்த பதிலும் சொல்லாம, ஓவியாவிற்கும், இனியாவிற்கும் இரண்டு பொம்மைகளை வாங்கிக்கொடுத்து பக்கத்துல இருந்த பார்க்குக்கு போய், அவுங்களை கொஞ்ச நேரம் விளையாட விட்டோம்.

அப்புறம் அங்கிருந்து ஒரு ஐந்து மணியைப் போல கிளம்பி “BASS POINT” அப்படிங்கிற ஒரு சின்ன தீபகற்பகத்துக்கு போனோம். அது கியாமாவிலிருந்து திரும்பி wollongong போகிற வழியில் “shell harbour village” என்னும் ஊரில் இருக்கிறது. அந்த இடத்துக்கு போய் சேரும்போது 5.45 மணியாகிவிட்டது. நாங்கள் வெயில் காலத்தில் போனபடியால் (dec,jan,feb மாதங்கள் இங்கு வெயில் காலம்) உள்ள போவதற்கான கதவு மூடவில்லை. அந்த கதவு வெயில் காலங்களில் இரவு 7.30 மணிக்கும், குளிர் காலங்களில் மாலை 6மணிக்கு மூடுவார்களாம். அந்த இடத்தில் பாறைகளுக்கிடையில் எல்லாம் தண்ணீர் இருந்ததை  பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மேலும் இந்த இடம் "SCUBA DIVING"க்கு பெயர் போன இடம். நீ "SCUBA DIVING" பண்ணினாயா என்று தயவுசெய்து என்னை கேட்டு விடாதீர்கள். எனக்கு கடப்பாறை நீச்சல் மட்டும் தான் தெரியுமாக்கும்.

 
 
ஒரு மணி நேரம் அங்கிருந்துவிட்டு, திரும்பி நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்கு நான் முன்பே பக்கத்தில் பார்த்து வைத்திருந்த ஒரு "டர்கிஷ் கெபாப் (TURKISH KEBAB)" உணவகத்துக்குப் போய் வெஜிடேரியன் கெபாபை (Vegetarian kebab) வாங்கிக்கொண்டு வந்து அறையில் சாப்பிட்டோம். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, நான் இங்கு சிட்னியில் அதே வெஜிடேரியன் கெபாபை நிறைய இடங்களில் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனா இந்த இடத்தில் சாப்பிட்ட ஒரு திருப்தி வேறு எங்கேயும் வந்ததில்லை. அந்த அளவிற்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.

சாப்பிட்டு முடிச்சாவுடனே, அம்மணி கொண்டுவந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு, புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாகிவிட்டது.

பிறகு, எவ்வாறு தயிர் சதம் செய்து மறு நாள் கொண்டுப்போனோம் என்பதையும், "CATHEDRAL ROCKS" எனும் இடத்துக்கு போனதையும் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், ஊர் உலகம் எல்லாம் சுற்றி "SEA CLIFF BRIDGE" வழியா எவ்வாறு வீடு வந்து சேர்ந்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்லி, இத்தொடரை முடிக்கிறேன்.


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – இறுதிப் பகுதி

 

14 comments:

 1. ///உனக்கு நான் வேணாம்னு சொன்னா, கொஞ்ச நேரத்துல நீ சமாதானம் ஆயிடுவ, ஆனா உங்கம்மா அப்படியான்னு,//

  அம்மாவிற்கு வேணாம் என்று சொன்னால் அவர்கள் நம்மை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் சரிதானே

  ReplyDelete
 2. எண்ணத்தை கழுவி விட்டது நல்லது... இனிமையான தொடருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமையான பயணத் தொடர்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 4. பாறைகளுக்கிடையில் எல்லாம் தண்ணீர் இருந்ததை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மேலும் இந்த இடம் "SCUBA DIVING"க்கு பெயர் போன இடம்.

  அருமையான சுற்றுலா..!

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

   Delete
 5. அழகான படங்களுடன் அருமையான சுற்றுலா. ;)

  ReplyDelete
 6. அந்த எண்ணத்தை கழுவாம இருந்திருந்தால், நான் ஒழுங்கா வீடு வந்து சேர்ந்திருக்க முடியுமா என்ன??
  தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன்

  ReplyDelete
 7. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 8. அப்பத்தான் நம்ம பாரம்பரிய உணவான புளியோதரையும், எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் “எங்களையா உதாசீனப்படுத்தின, நல்லா அனுபவி மகனே,அனுபவின்னு சொல்லாம சொல்லி சிரித்த மாதிரி எனக்கு தோணுச்சு.
  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள் .
  சும்மா டிஸ்கவரி சேனல் மாத்ரி விவரத்தை அடுக்காமல் காமெடி கலந்த சொல்லாடல் அருமை சார்.பார்ட் 3 காக வெய்டிங் !

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி. நம்முடைய

   உண்மையில் வெளியிடங்களில், தயிர் சாதம் மற்றும் புளியோத்றைக்கு ஈடு இணை வேறெதுமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   இன்னும் இரண்டு மூன்று நாட்களில், இந்த பயணத்தின் கடைசிப் பகுதியை எழுதுகிறேன்.

   Delete
 9. சிறப்பான பகிர்வு....

  நடுவே பயந்த மாதிரி நடிச்சது நல்லா இருந்தது! :)))

  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு.வெங்கட்.

   என்னாது நடிச்சேனா!!!!! உண்மையில மகள் கேட்ட அந்த கேள்விக்கு பயந்து போயி தாங்க பதில் சொல்லலை.

   இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கடைசிப் பகுதியை எழுதிவிடுகிறேன்.

   Delete