Wednesday, January 29, 2014

பச்சிளம் குழந்தையின் கேள்வி


புகைப்பட உதவி - கூகுள் ஆண்டவர்

"பூமிக்கு வந்து பதினைந்து
 நாட்களே ஆன என்னை
ஒரு குப்பையை எறிவது
 போல் எப்படியம்மா ஏறிய
முடிந்தது உன்னால்!!!

உன் வயிற்றில் வந்து
பிறந்தது தான் நான்
செய்த பாவமாம்மா?
உன்னுடைய ஐந்து நிமிட
சுகத்துக்கு நான் சாட்சி
ஆகாமல் இருக்க என்னை
உன் கர்ப்பப்பையிலேயே
அழித்திருக்கலாமே, அதை
ஏனம்மா நீ செய்யவில்லை

நீ அப்படி செய்யாமல்
விட்டதால், இன்று நான்
உன்னை போல் கேடுக்
கெட்ட மனிதர்கள் வாழும்
இந்த மோசமான உலகில்
அநாதை என்ற பட்டப்
பெயரோடு அல்லவா
வாழப்போகிறேன்!!

ஏய் இறைவா! குழந்தை
வரம் வேண்டி எத்தனையோ
பெண்கள் இருக்க, என்னை
ஏன் இந்த பாதகத்தியின்
வயிற்றில் பிறக்க வைத்தாய்???


இன்று பத்திரிக்கையில் ஒரு செய்தியை படித்து மனது மிகவும்  கனத்து விட்டது. பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தையை புகைவண்டியில்  ஒரு பையில் வைத்து விட்டு சென்று விட்டாள் தாய்மைக்கே களங்கம் விளைவித்த ஒரு அரக்கி.

அந்தப்பையில் ஏதாவது இருக்கும் என்று நினைத்து எடுத்த ஒரு வளையல் வியாபாரி, குழந்தை இருந்ததை பார்த்ததும், போலீசில் ஒப்படைத்து விட்டார். உடனடியாக அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் போலீசாரும் சேர்த்தனர்.  அந்த குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர், இன்னும் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால் அந்த குழந்தையின் உயிர் பிரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

எப்படித்தான் இந்த மாதிரி பெண்களுக்கு தான் கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இவ்வாறு தூக்கி எறிய மனசு வருகிறதோ??






16 comments:

  1. கொடுமைதான் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. இவர்கள் எல்லாம்....... சொல்வதற்கு கூட வாய் கூசுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. மனம் கனக்க வைத்த விஷயம் தான். ஆனால் இதற்கு பெண்களை மட்டும் குறை சொல்வது நியாமல்ல என்பது என் கருத்து .பல பெண்கள் தன் வாழ்க்கைக்கே பலரை அண்டி இருக்க வேண்டிய நிலமையில் குழந்தையையும் சேர்த்து வளர்ப்பது என்பது இயலாததுதான் அவள் வயிற்றில் இருக்கும் போதே அழிக்காதற்கு காரணம் அதை அழிக்க வேண்டுமென்றாலும் அதற்கும் பணம் வேண்டும் ஆனால் இப்படி பெற்றுபோட்டுவிட்டால் யாராவது காப்பாற்றுவாரகள் என்று நினைத்து விட்டுப் போயிருக்கலாம் அல்லவா. ஆனால் நாம் இந்த குழந்தை உருவாவதற்கு காரணமானவன் சந்தோஷமாக இருந்துவிட்டு பழியை பெண்மீது சுமத்தி விட்டு செல்வது நியாமில்லைதானே

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இம்மாதிரி விஷயங்களில் பெண்களை மட்டும் குறை சொல்லக்கூடாதது தான்.
      ஆனால் என்னுடைய ஆதங்கம் எல்லாம், இப்படி பிறந்த குழந்தையை பையில் போட்டு விட்டுப்போகாமல், ஒரு அநாதை இல்லத்தில் சேர்த்திருந்தால் பரவாயில்லையே. தன் குழ்னதை என்று கூறாமல் சேர்த்திருக்கலாமே.

      உண்மையில் நீங்கள் சொல்வது போல், யாராவது வளர்ப்பார்கள் என்று பையில் போட்டால், அந்த குழந்தை உயிருடன் இருக்குமா. ஏனென்றால், இன்றைக்கு அனாமத்தாக பை,பெட்டி இருந்தாலே, கிட்ட போகுவதற்கே பயப்படும் காலம் இது.
      அந்த குழந்தையின் ஆயுசு கெட்டி, அதனால் தான் அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

      Delete


  4. அப்புறம் நீங்கள் எழுதிய முதல் நாலு பாராவை கவிதை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அப்புறம் எனக்கு கண்ணா பின்னா என்று கோபம் வந்துடும் அப்படி வந்தா என்ன பண்ணுவீங்க என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.ஹீ.ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. நான் எங்காவது அதை கவிதை என்று சொல்லியிருக்கிறேனா, உங்களுக்குள்ளேயே அது கவிதையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம். அதனால் தான் "கவிதை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்" என்று சொல்லுகிறீர்கள்.
      நானெல்லாம் எழுதுவதற்கே முன்னூறு தடவை யோசித்து எழுதுபவன். இந்த லச்சனத்துல ஒரு நல்ல கவிதை எழுதினால், எனக்கே நம்பிக்கை இல்லாமல் மயக்கம் வந்துவிடும்.
      கவலைப்படாதீர்கள், நான் இதை கவிதை என்று எல்லாம் சொல்லமாட்டேன்.

      சரி,அப்படி நான் சொல்லி, உங்களுக்கு கோபம் வந்தால், பெருசா நீங்க என்னத்தை பண்ணப்போறீங்க, ஒரு ரெண்டு பூரிக்கட்டையை என் மனைவிக்கு பார்சல் அனுப்புவீங்க அவ்வளவுதானே!!!
      (எப்படி கரிக்கட்டா கண்டுப்பிடிச்சேன் பார்த்தீங்களா!!!)

      Delete
  5. வேதனையான விசயம்! ஆனால் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கிறது! திருந்தவேண்டியது அவசியம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  6. மதுரைத் தமிழன் சொன்னது போல அந்தப் பெண் மட்டுமே காரணம் அல்ல.... அதற்கு காரணமாக இருந்த ஆணும் தான்.....

    படித்த போது எனக்கும் மனது பதைத்தது..... நேற்று செய்தித்தாளில் படித்தபோது, இன்னும் ஒன்றும் எழுதி இருந்தார்கள். முதலில் அந்த பையை காசு இருக்கும் என நினைத்தவரையும் கைது செய்து ‘பலமாக’ விசாரித்து இருக்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர் ஏதாவது காசு இருக்கும் என்ற நோக்கத்தில் தான் அந்த பையை எடுத்திருக்கிறார். அது குழந்தைக்கு நல்ல நேரமாகி விட்டது. இல்லையென்றால், அந்த குழந்தை உயிருடன் இருந்திருக்காது.

      Delete
  7. கொடுமை..
    தப்பாக குழந்தை பிறந்தால் என்ன செய்யனும் என்று இன்றைய சினிமாக்கள் செல்லியிருக்கிறதல்லவா அதேபோன்றுதான் அந்தத் தாயும் செய்திருக்கிறார்...


    ReplyDelete
    Replies
    1. அந்த படங்களில் எல்லாம் அப்படி விடப்படும் குழந்தை எவ்வாறு கஷ்டப்படுகிறது, எப்படி வளர்கிறது என்றெல்லாம் தான் காட்டுகிறார்களே. அப்படியிருந்தும் இப்படி விட்டுட்டு போகிறார்கள். என்ன சொல்வது.

      Delete
  8. அப்போ குந்தி தேவியைஅ எதில் சேர்ப்பீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. என் பார்வையில் குந்திதேவியும் கர்ணனுக்கு தவறு இழைத்தவள் என்று தான் சொல்லுவேன்.

      Delete