Monday, January 27, 2014

இந்தியாவில் நன்றாக படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை



இந்த பதிவு நான் சுட்டி விகடனில் இருந்து படித்த ஒரு செய்தியாகும்.

இன்னைக்கு நம்ம நாட்டில பகல் கொள்ளைன்னு ஒண்ணு இருந்தா, அது கல்விக்கொள்ளை தான். நிறைய பெற்றோர்கள் கடன்பட்டு,எப்படியோ தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக தான் படிக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்தும் விதமாகவும், பெற்றோர்களின் பொருளாதார பிரச்சனையை சமாளிக்கவும் இந்தியா அரசாங்கம் ஒரு உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தி அதன்படி படிக்கும்போதே ஆண்டுக்கு ரூ. 6000 கல்வி உதவித்தொகையயை பெறுவதற்கு வழி செய்திருக்கிறார்கள்.       அரசின் அங்கீகாரம்  பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், மத்திய  அரசின்   கல்வி             அமைப்பான NCERT          நடத்தும்  தேசிய              திறனறித்  தேர்வில் (National Talent Search Examination-NTSE) கலந்துக்கொண்டு வெற்றிபெற்றால், மூன்று  மாதங்களுக்கு ஒரு முறை 1,500 ரூபாய்  வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறுகிறது.

இந்த தேர்வில், எட்டாம்  வகுப்புவரையிலான  கணிதம்,  அறிவியல்  மற்றும்  சமூக  அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுமாம். சிறு  பகுதி  மட்டும் ஒன்பதாம்,  பத்தாம் வகுப்புப் பாடங்களில் இருந்து கேட்கப்படுமாம்.
மற்ற விவரங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்கச் சொல்லுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களைஇணையதளத்திலும் பெறலாமாம்.
இணையதள முகவரி:

தேர்வு நாள்: 22.02.14


(நான் இந்த இணைய தளங்களில் சென்றுப்பார்த்தேன், ஆனால் என்னால் ஒன்றும் கண்டுப்பிடிக்க இயலவில்லை. ஒரு வேளை எனக்கு பொறுமை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்) .

அரசாங்கம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு வெட்டியான செலுவகளை செய்து வரும்போது, அத்திப்பூத்த மாதிரி எப்பவாவது இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்யும்போது மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதனால் உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் சொல்லுங்கள்.

இந்த தகவலை தந்த சுட்டிவிகடனுக்கு நன்றி. 

12 comments:

  1. நல்ல விஷயம்! பகிர்வுக்கு நன்றி! இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களில் அரசு விளம்பரம் செய்தால் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
      உண்மை தான், இந்த மாதிரி செய்திகளை விளம்பரம் செய்தால் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும் தான். ஆனால் செய்யனுமே!!!!

      Delete
  2. மற்றவர்களுக்குப்பயன்படும் நல்ல விஷயங்களைத் தந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. உங்கள் பதிவுகளையெல்லாம் நல்லா படிக்கும் எங்களுக்கு எல்லாம் ஏதாவது உதவி தொகை உண்டா? அதைபற்றி ஒன்றும் சொல்லவில்லையே

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! கிளம்பிட்டாய்ங்களே. இந்த மாதிரி உதவித் தொபையெல்லாம் கேட்பீங்கண்ணு தெரிஞ்சிருந்தா, இந்த பதிவை போட்டிருக்கவே மாட்டேனே!!!

      சரி, பரவாயில்லை ஆசைப்பட்டு கேட்டுட்டீங்க, அதனால தினமும் ராத்திரி கண் முழிச்சு நான் வலைப்பூவில் எழுதும் பதிவுகளுக்காக, என் மனைவி, எனக்கு கொடுக்கும் பரிசில், பாதியை நான் தங்களுக்கு தந்து விடுகிறேன்.
      அது என்ன பரிசு என்று சரியாக சொன்னால், கிடைக்கும் மொத்தப் பரிசையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

      Delete
  5. நல்ல விஷயம்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  6. நல்ல தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete