சகோதர சகோதரிகளே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என்னுடைய குடும்பத்தின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடத்தியதால்,
இந்த ஆண்டுக்கு சற்று ஓய்வுக்கொடுத்து அடுத்த
ஆண்டு தொடரலாம் என்று முடிவெடுத்ததினால், இந்த ஆண்டு பொங்கல் விழாவினை கொண்டாடவில்லை.
இந்தப் புகைப்படம் மதுரைத் தமிழனுக்கு சமர்ப்பனம்.
இது நாங்கள் போட்ட “குடும்பம் ஒரு கோவில்” என்ற நாடகத்தில் வரும் ஒரு காட்சி. இதில் “மனைவிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றும் சங்கத்தின்” தலைவனாக அடியேனும், செயலாளராக நண்பர் திரு.விஜய் சம்பத்தும்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கிணங்க,
இந்த தை மாதம் முதல் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்து வரும் அனைத்து கற்களும்
தானாக விலகி, நீங்கள் சிகப்பு கம்பளத்தில் வீர நடை போட்டு வாழ்வின் உச்சாணியை தொடுவதற்கு
இந்தத் தை மகள் அருள் புரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் சமயத்தில்
என் குடும்பத்தார் இந்தியாவில் இருந்ததால், ஒரு விபரீத ஆசை தோன்றியது, அதைத்தான் நான் ஒரு
பதிவாக எழுதியிருந்தேன்.
படிக்காதவர்கள் அதனை இங்கே படிக்கவும் –
சென்ற வருடமும், அதற்கு முந்திய வருடமும்,
நாங்கள், இங்கே “பொங்கல் விழாவை” கொண்டாடினோம். ஒரு ஹாலை வாடைகைக்கு எடுத்து, வாழை
மரம் கட்டி, காஸ் அடுப்பில் பொங்கல் வைத்து, “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லி,பொங்கலைப்
படைத்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல், இசை நாடகம் என்று தமிழின் கலைகளைப்
போற்றி, வெளியிலிருந்து வரவழைத்த பொங்கல் விருந்தை உண்டு, இறுதியாக விழாவிற்கு வந்திருந்த
அனைவரையும் ஒன்றுத்திரட்டி, ஒலி-ஒளிப் புதிர்
போட்டிகளை நடத்தி இனிதே அவ்விழாவினை கொண்டாடினோம்.
இதில் முக்கியமாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின்
படைப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களின் படைப்புகளை “பொங்கல் மலாராக” வெளியிட்டோம்.
மேலும் பெண்களின் முக்கியக்கலையான கோலத்தை “கோலப்போட்டியாக” நடத்தினோம். போட்டியில்
பங்குப்பெரும் பெண்கள் பொங்கல் விழாவின் முதல்நாளன்று தங்கள் வீட்டில் கோலத்தை போட்டு
வைக்கவேண்டும். விழாக் குழுவைச் சேர்ந்த இருவர், அக்கோலங்களை புகைப்படம் எடுத்து, அதற்கு
“K1,K2,..” என்று பெயரிட்டு, பொங்கல் விழாவன்று, அதனை மற்றவர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.
விழாவிற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் அக்கோலங்களை மதிப்பிட்டுவார்கள் அவர்களின்
மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மூன்று பரிசுகள் மற்றும் பங்குப்பெற்றமைக்கான பரிசுகள்
வழங்கி கோலம் போட்ட பெண்மணிகளை கவுரவித்தோம்.
அக்கோலங்களில் சில உங்களின் பார்வைக்கு.
புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கல் நிகழ்ச்சியை
நடத்துவதால், அடுத்த தலைமுறையினர், நம்முடைய பண்டிகையின் சிறப்பைப் தெரிந்துக்கொண்டு,
அதை தங்களது சங்கதியினருக்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இது நாங்கள் போட்ட “குடும்பம் ஒரு கோவில்” என்ற நாடகத்தில் வரும் ஒரு காட்சி. இதில் “மனைவிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றும் சங்கத்தின்” தலைவனாக அடியேனும், செயலாளராக நண்பர் திரு.விஜய் சம்பத்தும்.
மீண்டும் அனைவருக்கும் எனது பொங்கல்
நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தனபாலன்.
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்களுக்கு ஆங்கில மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசமர்'பணத்திற்கு" நன்றி... அந்த பணம் எப்ப வந்து சேரும்
ReplyDeleteஉண்மையை சொல்லனும்னா, நீங்க தான் எனக்கு பணம் தரணும். ஏனென்றால் என்னுடைய ஒரு புகைப்படத்தையே உங்களுக்கு சமர்பித்திருக்கிறேனே!!!!!
Deleteஅதனால நீங்க எனக்கு ஆஸ்திரேலிய டாலராகவே கொடுங்க பரவாயில்லை.
மதுரைத்தமிழன் இமேஜ் நாட்டுல இப்படியா இருக்கிறது??? ஹும்
ReplyDeleteஏங்க உங்க இமேஜ்க்கு இப்ப என்னங்க ஆயிடுச்சு. நல்லாத்தானே இருக்கு. எல்லார் வீட்டிலும் நடக்கிறது தானே!!!!.
Deleteஇந்த இமேஜாலத்தான் நீங்க ரொம்ப, ரொம்ப, ரொம்பவே பாப்புலர்ங்க!!!!
“///மனைவிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றும் சங்கத்தின்” தலைவனாக அடியேனும்,//
ReplyDeleteதலைவனாக இருந்தும் என்னை காப்பாற்றத உங்களுக்கு எதிராக போராடப் போகீறேன்
நீங்க எங்களோட சங்கத்துல சேர்ந்துடுங்க. அப்புறம் பாருங்க இந்த தலைவன் உங்களை எப்படி, உங்க மனைவிக்கிட்டேயிருந்து காப்பாற்றுகிறான் என்று. நான் ஒண்ணும் அரசியல் கட்சி தலைவர்கள் மாதிரி கிடையாது. தொண்டனுக்கு விழுகிற அடியெல்லாம் நான் வாங்கி, தொண்டனை காப்பாற்றுவேன் என்று இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
Deleteகோலங்கள் அனைத்தும் அருமை.....
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்கு பாராட்டுகள்.
அந்த கோலங்களை போட்ட பெண்மணிகளுக்கு தங்களின் பாராட்டுக்களை சொல்லிவிடுகிறேன்.
ReplyDeleteதங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி திரு.வெங்கட்