Wednesday, January 1, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிட்னியில் இப்போது புத்தாண்டு பிறந்து விட்டது.

என்னுடைய நண்பர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள் எனக்கு அளித்த புத்தாண்டு பரிசை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9.00 மணிக்கும், 12.00மணிக்கும் சிட்னி சிட்டியில் நடக்கும் பத்து நிமிட வாண வேடிக்கைகள் (fireworks) மிகவும் பிரசத்திப் பெற்றவை. குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு, நாங்கள் ஒரு முறை அந்த வாண வேடிக்கைகளை நேரில் சென்று பார்த்தோம். போதுமடா சாமி என்றாகி விட்டது. அந்த அளவிற்கு கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். நாங்கள் நேரில் பார்த்த அந்த வாண வேடிக்கையை தனியா ஒரு பதிவவே போடலாம். அதற்கு பிறகு எல்லாம் நாங்கள் தொலைக்காட்சியிலேயே அந்த நிகழ்வுகளை பார்த்து விடுவோம்.

சிட்டியில் கூட்டத்தை குறைப்பதற்காக, ஒவ்வொரு கவுன்சிலும் இரண்டு வாண வேடிக்கைகளை நடத்துவார்கள் (9மணி மற்றும் 12மணி). இன்று நாங்களும் எங்கள் கவுன்சிலான campbeltownக்கு இரவு 8.30 மணிக்கெல்லாம் சென்றோம். பார்த்தால் அங்கும் ஒரே மக்கள் கூட்டம் தான். ஒரு வழியா எங்கே நல்லா தெரியுமோ, அந்த இடத்துக்கு சென்று நின்று, அந்த வாண வேடிக்கைகளை பார்த்தோம். நான் என்னுடைய அலைபேசியில்,எனக்குத் தெரிந்த அளவில் அதனை காணொளியாக படம் பிடித்துக்கொண்டேன். அதிலிருந்து ஒரு துளியை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.



அந்த நிகழ்வு முடிந்தது என்னவோ 9.10க்கு. ஆனால் நாங்கள் வீட்டிற்கு வந்ததோ 10.30மணி. இத்தனைக்கும் வெறும் 15கிலோமீட்டர் தான் தூரம். போகும்போது சரியாக 10 நிமிடத்திற்கெல்லாம் போய்விட்டோம். ஆனால் அங்கேயிருந்து காரை எடுத்து வெளியில் வருவதற்கு தான் அவ்வளவு நேரம். அப்புறம் 12 மணி வரை முழித்திருந்து, தொலைக்காட்சியில் அந்த பிரம்மாண்ட வாண வேடிக்கைகளைப் பார்த்தோம். சிறிது நேரத்திற்கெல்லாம், யூடியூபில் அதனை போட்டுவிட்டார்கள். அதனையும் உங்களின் பார்வைக்கு.

  
மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

10 comments:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    "ஆங்கில புத்தாண்டு என்று சொல்லி நியாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி." தமிழர்களாகிய நமக்கு தமிழ் புத்தாண்டு தான் உண்மையான புத்தாண்டு.

    ReplyDelete
  3. இனிய ஆங்கிலப்புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  4. என்னங்க எங்களை விட்டு விட்டு நீங்க அவசர அவசரமாக புத்தாண்டுக்குள் நுழைந்து விட்டீர்கள் இங்கே இப்போது 4:30 PM 12/31/13 இன்னும் பழைய ஆண்டுதான்

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  5. மிகவும் பிரசத்தி பெற்ற வாண வேடிக்கைகள் (fireworks) எங்களுக்கும் ஆஸ்திரேலியாவிலிருந்து மகன்கள் காணொளியாக அனுப்பினார்கள்..!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தங்களது மகன்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்களா?எந்த ஊரில் இருக்கிறார்கள்? அவர்களுடன் தொடர்பு கொள்ளலாமா?

      தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  6. வாணவேடிக்கைகள் காண அருமையாக இருந்தது .
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    Reply

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete