Wednesday, January 21, 2015

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவபூசை

சென்ற பதிவான “பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க” என்கிற இந்த பதிவு டாஷ்போர்ட்டில் வராத காரணதத்தால், சிலர் அதை படிக்காமல் விட்டுப்போயிருக்கலாம். அவர்கள் படிப்பதற்காக அந்த பதிவின் சுட்டியை கீழே கொடுக்கிறேன் .

பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

பதினோராம் அதிகாரம் - சிவபூசை.

ஐயா அவர்கள் நடோறும் வைகறைக் காலத்தில் எழுந்து சிவத்தியான முதலியன முடித்துக்கொண்டு, தடாக முதலியவற்றிற்குப்போய் தந்த சுத்தி முதலியவை முடித்துக்கொண்டு, ஆசார ஸ்நாநஞ் செய்து மடிதரித்து வீபூதி உத்தூளனம் திரிபுண்டந் தரித்து அனுட்டானம் முடித்துக்கொண்டு உருத்திராஷ மாலையணிந்து ஸ்ரீபஞ்சாட்சரஞ் ஜெபித்து, பத்திர புஷ்பம் திருமஞ்சனம் முதலிய பூகோபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, பார்த்திப ரூப சிவலிங்கம் பாணித்துக்கொண்டு, சிவாகம முறைப்படி சூரியபூசை துவாரபூசை செய்து பூத சுத்தி அந்தர் யாகம், ஆத்மசுத்தி மந்திரசுத்தி, ஸ்தான சுத்தி, திரவியசுத்தி, லிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளுஞ் செய்து ஆதார சத்தியாதி, சத்தி பரியந்தம் ஆசனங் கற்பித்து, மூர்த்தி நிவேசனஞ் தண்டபங்கி முண்டபங்கி, வத்திரபங்கி கலாபங்கி, முதலிய நியாசங்கள் செய்து, வித்தியாதேகம் பாவித்து ஆவாகனாதி பத்துச்சம்ஸ்காரங்களுஞ் செய்து திருமஞ்சன மாட்டி திருவொற்றாடை சாத்தி, பட்டாடை திருநீறு சந்தனக் குழம்பு திருவாபரணம் புஷ்பம் முதலியன சாத்தி, பாத்தியாசமன அர்க்கியங் கொடுத்து அர்ச்சனை செய்து, லயான்க போகாங்க பூசை செய்து புஷ்பாஞ்சலி செய்து நிவேதன முதலியன் செய்து தூபதீப கற்பூராராத்திரிகம் காட்டி, அர்ச்சனை செய்து புஷ்பம் சாத்தி, ஜெபம் ஜெபகர்ம நிவேதனம் ஆத்ம நிவேதனம் தோத்திரம் முதலியன செய்து, பிராத்தித்துப் பூசை செய்வார்கள். அவர்கள் பிராத்திக்கும்போது சிவநாமம் பல சொல்லி ஆரமையோடும், “சுவாமி! சைவ சமய வுண்மைகளும் தேவாராதி திருமுறைகளும் சித்தாந்த சாஸ்திர படனங்களும் அபிவிருத்தியாக வேண்டும். இவைகளே அடியேனுக்கு வேண்டுவன என்று விண்ணப்பித்து ஸ்தோத்திர முதலியவை செய்து சண்டேஸ்வர வழிபாடுடன் பூசை முடிப்பார்கள்.

இப்படிக் கிரியா காண்ட விதிப்படி பூசை செய்து வந்த ஐயா அவர்கள், சூரியனார் கோயில் ஆதீனம் குருமூர்த்திகளுடன் கலந்து வந்தபின் வாதுளாகம ஞான பூசா விதிப்படலத்திற் கூறியபடி ஞான பூசையாக ஆன்மார்த்த பூசை செய்து வந்தார்கள்.

இவ்வாறு பூசை செய்யும்போதும் ஜெபஞ் செய்யும்போதும் தோத்திரஞ் செய்யும்போதும் பார்த்தால், ஸ்ரீ அப்பமூர்த்திகள் போல் சிவா வேப் பொலிவுடன் இருக்கின்ற அழகும், நிர்மலாந்தக் கரணராய் விலங்குகின்ற காட்சியும்; ததும்பிப் பொழிந்து கொண்டிருக்கின்ற ஆனந்த பாஷ்பமும், அன்புமயமான சிவானந்தப் பெருஞ் செல்வராக விலங்குகின்ற தோற்றமும்; பார்க்கின்றவர்களுக்கு மனம் உருகி அன்போடு ஆனந்த வெள்ளம் உண்டாகாமலிராது.

நாடோறும் திருநீற்றுப்பதிகம், திருநெடுங்களப் பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருவதிகையிற்  சூலை நோய் தீர்த்தருளிய திருப்பதிகங்களும், கார்த்திகை நட்சத்திரந்தோறும் “கந்தர் கலி வெண்பா  “கந்தருனுபூதி கந்த ரலங்காரமும் பாராயணஞ் செய்து வருவது வழக்கம்.

பதினோராம் அதிகாரம் முற்றுப்பெற்றது.


பன்னிரெண்டாம் அதிகாரம் – நிரதிசயானந்தப் பெரும்பேறு 

14 comments:

 1. படித்துக்கொண்டேன் நண்பரே பதினோராம் அதிகாரத்தை பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 2. தொடர்கிறேன் சகோ நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 3. பூசையை மேற்கொள்ளும் முறையைப் படிக்கும்போது நாமும் பூஜையில் கலந்துகொள்வதுபோலுள்ளது. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 4. அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்

   Delete
 5. பூஜை செய்வது பற்றித் தெரிந்து கொண்டோம்...நம்மால் ஐயா அளவிற்கு செய்ய முடியுமா?!! நாம் சாதாரண மனிதர்கள்...அவரது பாதங்களைத் தொழுவோம்....அருமை! தொடர்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. நான் தினமும் காலையில் குளித்துவிட்டு வெறுமன ஒரு ஐந்து நிமிடங்கள் பூஜை அறையில் நிற்பது தான் நான் செய்யும் பூஜை.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

   Delete
 6. அர்த்தங்கள் நிறைந்த ஆன்மீக பூசை வழிமுறைகள்
  அறியப் பெற்றேன்! அருளமுதம் ஆனந்தம் அன்பரே!
  இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு,
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  ReplyDelete
 7. இன்று தான் தங்களின் வலைப்பக்கம் வந்துள்ளேன்! தொடர்ந்து வருவேன்!

  ReplyDelete
 8. அய்யா சொக்கலிங்கம் அய்யா அவர்களின் வாழ்க்கை, பூசை முறைகள் பற்றி எழுதி உள்ளீர்கள். இதன் சிறப்பையும், இந்த பூசைகளால் அய்யா அவர்கள் பெற்ற பேறுகளையம்,சிறப்புகளையும் மற்ற பூசை செய்யாத மனிதருக்கும் இவருக்கும் இருந்த சிறப்புகள் குறித்தும் எழுதி சிறப்பு செய்யுங்கள்.

  ReplyDelete
 9. அய்யா சொக்கலிங்கம் அய்யா அவர்களின் வாழ்க்கை, பூசை முறைகள் பற்றி எழுதி உள்ளீர்கள். இதன் சிறப்பையும், இந்த பூசைகளால் அய்யா அவர்கள் பெற்ற பேறுகளையம்,சிறப்புகளையும் மற்ற பூசை செய்யாத மனிதருக்கும் இவருக்கும் இருந்த சிறப்புகள் குறித்தும் எழுதி சிறப்பு செய்யுங்கள்.

  ReplyDelete