Friday, November 28, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்




சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்

 
ஏழாம்  அதிகாரம் – சகவாசம்


ஐயா அவர்கள் இலௌகிக கௌரவத்திற் சிறிதும் பற்றில்லாதவர்களாதலின், ஆஸ்திக சிவசம்பந்தமில்லாத வேறிடங்களுக்கு எக்காலத்துஞ் செல்லமாட்டார்கள். ஆதி சைவர்களிடத்திலும், குருலிங்க சங்கமச்சார்புடைய பக்திமான்களிடத்திலும் மிக்க விசுவாச முடையவர்களகாவே யிருப்பார்கள்.

ஐயா அவர்கள் கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கிர யோகிகள் ஆதினத்தில் சித்தாந்த ஞான பானுவாக வெழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீமகா சன்னிதானமாகிய முத்துக்குமார தேசிக சுவாமிகளவர்கள் சைவசித்தாந்த ஞான குரு பீடமாய் மிகச் சிறந்த சைவ ஞானக் கல்வி கேள்விகளிலும், சிவானுபவத்திலும், ஒழுக்கத்திலும் ஒப்புயர்வின்றி விளங்கியிருந்தது கண்டு, அக்குருமூர்த்திகளிடத்து அத்தியந்த அன்பு வைத்து அடிக்கடி சென்று அவர்களை தரிசித்து சித்தாந்தஞான சாத்திர விஷயங்களை அளவளாவிக் கலந்து தெளிந்து ஆனந்தமுறுவார்கள். அந்த குரு மூர்த்திகளும் ஐயா அவர்களுடைய சைவஞான சீலமும் சமயப்பற்று முதலியனவும் நோக்கி, அவர்களிடத்து மிகுந்த கருணையோடும் அளவளாவி மகிழ்வார்கள். ஐயா அவர்கள் திருநல்லூர்ப் பெருமண மிருந்து மேற்படி குருமூர்த்திகட்கு எழுதும் விண்ணப்பங்களெல்லாம் செய்யுளாகவே எழுதுவார்கள். குருமூர்த்திகளும் இவர்களுக்கு எழுதும் திருமுகங்களில் பல செய்யுட்களால் ஆசீர்வதித்து எழுதுவார்கள்.

 

செந்தமிழ்ச் செல்வத்திருமொழியும், சிவசமயத்திருவருட் செல்வத் திருநெறியும் அபிவிருத்தியாகும் பொருட்டு, விநாயக சதுர்த்தி தினத்தில் கணேச மாநகரின் கண்ணே திருவருள் பொழியும் கற்பக விநாயக பெருமான் சன்னிதானத்தில் ஸ்தாபனம் செய்யப் பெற்று, வெளிவந்துலாவும் சிவநேசர் திருக்கூட்டமானது செந்தமிழ்ச் செல்வமும், திருவருட் செல்வமும் விளக்கி விருத்திசெய்து வருதலையும், திருக்கூட்டத்தாரும் சிவநேசச் செல்வரும் விபூதி உருத்திராஷ தாரணராய்  நித்திய நியம ஸ்ரீ பஞ்சாஷர ஜபதப சிவதரிசன பாராயன ஆசார சீலமுடையவர்களாயிருத்தலையும், சைவ சமய பரமாசாரிய சுவாமிகள் நால்வரையும் எழுந்தருளச் செய்துகொண்டு, நகர தனவைசியர்கள் வாழ்கின்ற ஊர்கடோறும் அகர வரிசையாக ஒவ்வொரு மாதமும் பூர்வபக்ஷப் பிரதோஷ காலத்திற் சென்று சிவாலய வழிபாடு செய்துகொண்டு நியதியாய்ச் சைவப் பிரசங்கம் புரிந்து வருதலையும்; வருடப் பூர்த்திக் கொண்டாட்டத்தை ஒன்பது நகரச் சிவாலயங்களிலும் அகர வரிசையாக வருடம் ஒரு கோயிலுக்கு விநாயக சதுர்த்தி தினத்தில் சென்று சிவதரிசனஞ் செய்துகொண்டு, சைவப்பிரசங்கங்கள் செய்து சிறப்பித்து வருதலையும்; வருடந்தோறும் ஆவுடையார் கோயிலுக்கு ஆனித்தரிசன காலத்திற் சென்று சுவாமி தெரிசனம் உபன்யாசம் முதலியன செய்து வருதலையும்; மற்ற சிவஷேத்திர உற்சவ தரிசனஞ் செய்து வருதலையும்; கூடும்பொழுதெல்லாம் பரசமய கோளரிகள் போற்றேன்றிச் சிவமகிமைகளைப் பாராட்டி பேசியள வளாவி வரும் ஆனந்தக் காட்சியையும்; இத்திருக்கூட்டமானது ஸ்ரீ சிதம்பரத்தில் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை ஸ்தாபனஞ்ச் செய்யப்பெற்ற வருட மாதந் தேதியிலேயே இயல்பானே தீர்மானிக்கப் பெற்ற ஒற்றுமையையும் நோக்கி ஐயா அவர்கள் மீக் கூர்ந்து அத்திருக்கூட்டம் மாதந்தோறும் செல்லுகின்ற ஊர்களுக்கும் வருடப்பூர்த்திக் கொண்டாட்டத்தின் பொருட்டுச் செல்லுகின்ற நகரச் சிவாலயங்களுக்கும் உடன்சென்று உபன்நியாசகராகவும், தலைவராகவுமிருந்து இனிது பிரசாங்கஞ் செய்து வந்தார்கள்.

 

அன்றியும், இத்தகு மேன்மைபடைத்த சிவநேசர் திருக்கூட்டத்தை சிதம்பர ஷேத்திரத்துக்கு ஸ்ரீ நடராஜப்பெருமானுடைய ஆருத்திரா தரிசன காலத்தில் அழைத்துப்போய் ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையிலேயே உறைவிடங் கொடுத்து ஆங்காங்குள்ள பல வித்வ சிரோமணிகளையும் வருவித்து இத்திருக்கூட்டத்திற் கலந்து சைவப் பிரசங்கஞ் செய்யும்படி செய்தார்கள்.

 

மேலும் சிவநேசர் திருக்கூட்டத்தார் வருடந்தோறும் மார்கழித் திருவிழாக்காலத்தில் மேற்படி மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையில் வந்து தங்கித் திருவமுது செய்து ஸ்ரீ நடராஜப்பெருமானுடைய தரிசனானந்தப் பெருவாழ்வு பெற்றுச் சிவசம்பந்தமான பிரசங்கங்கள் செய்து வரவேண்டுமென்று அவர்கள் பாற் கேட்டுக்கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள்.

 

சூரியனார் கோயில் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ இலக்கண சுவாமியென்கிற முத்துக்குமார சுவாமிகள் சைவ இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்து மேற்படி ஆதீன சன்னிதானத்தினிடத்தில் சித்தாந்த சாஸ்திர பாடங் கேட்டு அதிற்றெளிந்த ஆராய்ச்சியும், சமஸ்கிருத பாஷையிலும், தகுந்த பதிப்பு ஆராய்ச்சியும் அதற்குத் தகுந்தபடி அறிவு ஒழுக்கங்களில் மேதாவியானவர்களும், சிவபூஜா துரந்தரருமானபடியால் அவர்களிடத்தில் ஐயா அவர்கள் அத்தியந்த அபிமானமுள்ளவர்களாக விருப்பார்கள்.

 

ஸ்ரீலஸ்ரீ பாற்சாமி யென்கிற கனகசுந்தரயோகி நாதசுவாமிகளிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டி அந்தச் சுவாமிகள் சுத்தாத்துவித சைவசித்தாந்த முடிவு நிலை கண்டு அதில் உறைத்து நிற்கின்ற மேதாவித் தன்மையையும் புகழ்ந்து பாராட்டி அத்தியந்த உண்மை விசுவாசத்துடனிருப்பார்கள்.

 

இன்னும் தனவைசியமரபில் இளையாற்றக்குடிக் கோயில் கிண்கிணிக்கூருடையார் கோத்திரத்தில் அவதரித்துப் பிரமசரியம் கிருகஸ்தம் வானப்பிரஸ்தம் என்னும் ஆச்சிரமங்கள் முற்றிச் சந்நியாச ஆச்சிரமத்திலிருந்து வருவோரும், இலக்கண இலக்கிய சித்தாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும், அநேக மாணாக்கர்களுக்குப் பாடம் போதித்து வருவோரும், சிவபூஜா துரந்தரருமாகிய உலகன்பட்டி ஸ்ரீலஸ்ரீ இலக்குமண சுவாமிகளிடத்தில் அவர்கள் உண்மை நிலை கண்டு அன்புடையவர்களாக விருப்பார்கள்.   

 

இன்னும் சுத்தாத்துவைத சைவ சித்தாந்தக் கொள்கை உடையவரிடத்தும் தென்மொழி  வடமொழி ஆராய்ச்சியுள்ள வித்துவ சிரோமணிகளிடத்தும், விபூதி ருத்ராஷ தாரணர்களாய் பஞ்சாஷர ஜெப நியம முதலியவையுடைய சிவனடியார்களிடத்தும் அன்பு பூண்டு அளவளாவிப் பேசிக் கொண்டிருப்பதில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாக விருப்பார்கள்.

 
ஏழாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

Wednesday, November 26, 2014

ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)


ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் இந்த படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன். மேலும்...

Monday, November 24, 2014

நவம்பர் மாதம்–இல்லை! இல்லை!! இது மவம்பர் மாதம்(ஆண்களின் உடல் ஆரோக்கியம்)


 
 

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “மவம்பர் (Movember Foundation)” என்னும் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் , இங்கு ஆஸ்திரேலியாவில் ஆண்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  மாதம் முழுவதும் மீசையை மழிக்காமல் வளரக்கச்  சொல்லி இதில் பங்குப்பெறுமாறு அழைக்கிறது. அதன்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெறும் ஆண்கள், முதலில் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு , அந்த இணையத்தளத்தில் , ”MO SPACE” என்று ஒரு பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, நவம்பர் மாதம் முழுவதும் மீசையை வழிக்காமல் இருப்பார்கள். இப்படி அவர்கள் தங்களின் முக அழகை மாற்றிக் கொண்டு,இந்த விழிப்புணர்வில் பங்குபெறுவதால். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என எல்லோரும் அவரின் அந்த இணையத்தள பக்கத்திற்கு சென்றோ அல்லது அவரிடம் நேரிடையாகவோ பணத்தை அன்பளிப்பாக அளிப்பார்கள். இப்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெற்ற அனைவரின் மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்த தொண்டு நிறுவனம், ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கு அளித்துவிடும். இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை, பெண்களும் பங்குக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள், ஓட்டு மீசையை வைத்துக்கொண்டு, இந்த விழிப்புணர்வில் பங்குக்கொள்கிறார்கள். இதில் பங்குபெறும் ஆண்களை “MOBROS” என்றும் பெண்களை “MOSISTAS” என்றும் அழைக்கிறார்கள்.  

இந்த விழிப்புணர்வில் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் யாராவது பங்கேற்றிக்கிறார்களா என்று பார்த்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று கூறி நண்பர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் சென்ற ஆண்டு இந்த விழிப்புணர்வு மாதத்தில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். (இவர் பொதுவாக மீசையை மழிப்பவர்).  

 




பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு வரும் இந்த புரோஸ்டேட் புற்று நோயைப் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. இந்த நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இணையத்தளத்திலும், மருத்துவ நண்பரிடமும் படித்து கேட்டதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆண்களுக்கு வயதாகும்போது, இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்கனைகள் ஏற்படாமலிருக்க அந்த மருத்துவ நண்பர் கூறிய அறிவுரைகள் என்னவென்றால்,

·         தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். (இந்த தண்ணீர் தான் நம்முடைய உடம்புக்கு எவ்வளவு நல்ல வேலைகளை செய்கிறது)

·         இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு,ஜீன்ஸ் பாண்ட் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (இதுக்குத்தான் நம்மூரில் அந்த காலங்களில் பட்டாப்பட்டி டிரௌசரை அணிந்து வேட்டியை அணிந்துகொண்டார்களோ!!!)

·         சில படங்களில், நகைச்சுவை என்ற பெயரில்,”நான் உள்ளாடையை அணியவில்லை என்று கூறுவார்கள்” அப்படி உள்ளாடை அணியாமல் இருக்க்மான பாண்ட் அணிந்தாலும் இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாம்.

·         ஆண்களாகிய நாம் எப்பொழுதும் அலைப்பேசியை பாண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருப்போம். அலைப்பேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூலமாகவும் இந்த நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது (அடக்கடவுளே. அப்புறம் எங்க தான் அந்த போனை வைத்துக்கொள்வதாம்!!!)

·         புகைப்பிடிப்பதுனாலும் இந்த நோய் வருமாம்(புகைப்பிடிப்பதால் எந்த நோய் தான் வராது!!!!)

·         கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்து விட வேண்டும். அதாவது இந்த ஜங்க் உணவுகளை தவிர்க்து விட வேண்டும்.

·         பழங்கள்,காய்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

·         உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது BMI (Body Mass Index) சரியாக இருக்க வேண்டும்.

 
இங்கு, வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் இந்த நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த விழிப்புணர்வை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

 
பின்குறிப்பு:

பல வருடங்களுக்கு முன் நான் லண்டனுக்கு சென்றபோது, அங்குள்ளவர்களைப் பார்த்து, எனக்கும் மீசையை எடுத்தால் என்ன என்று ஒரு விபரீத ஆசை தோன்ற, நானும் உடனே மீசையை எடுத்துவிட்டேன். எடுத்த பிறகு தான் தெரிந்தது, ஏண்டா எடுத்தோம்னு, ஏன்னா, என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே சகிக்கலை. போதாக்குறைக்கு என்னுடன் பணிபுரிந்த தமிழ் நண்பர்கள் எல்லாம், டேய், நாங்க தினமும் உன்னைய பார்த்து, அணு அணுவாக செத்துக்கிட்டு இருக்கோம். ஏதாவது செய்து, சீக்கிரம் மீசையை வளர்த்துக்கோன்னு சொல்லி கடுப்படித்தார்கள்”. இப்ப அதை நினைச்சு பார்க்கும்போது, நண்பர் கில்லர்ஜி தான் நியாபகத்துக்கு வந்தாரு. அவருடைய புகைப்படத்தை பார்த்தபோது, எப்படித்தான் இப்படி மீசையை உரம்போட்டு வளர்க்கிறாரோன்னு தோணுச்சு. இவர் நவம்பர் மாதம் மட்டும் இங்கு வந்தால், இவர் தான் அதிகமான அன்பளிப்பை அந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பார். அவரை புகைப்படத்தில் பார்க்காதவர்கள் இங்கு சென்று அவரைப் பார்க்கவும் - கில்லர்ஜியின் புகைப்படம்

Wednesday, November 19, 2014

பாவப்பட்ட ஜீவன்களான ஆண் சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்!!!!!



“எலேய், மாடசாமி இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமாடா?”

“இன்னைக்கு புதன் கிழமை தானே, அதுக்கு என்ன சேகரு”

“அதுக்கு என்னவா? சரி, மார்ச் 8ஆம் தேதி என்ன நாள்னு தெரியுமா உனக்கு?

“ஓ! அதுவா, அன்னைக்கு பெண்கள் தினம் ஆச்சே.”

“பெண்கள் தினம் எல்லாம் உனக்கு தெரியுது, ஆனா இன்னைக்கு ஆண்கள் தினம்னு தெரியலை இல்ல மாடசாமி.”

என்னது, ஆண்கள் தினமா? அப்படி ஒரு தினம் இருக்குதா என்ன?”

சரியாப்போச்சு, உன்னைய மாதிரி தான் இங்க, நிறைய ஆம்பிளைங்களுக்கு ஆண்கள் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியலை. 1999லிருந்து இந்த நாளை அதாவது நவம்பர் 19ஆம் தேதியை ஆண்கள் தினம்னு கொண்டாடிக்கிட்டு வராங்க”.

அடப்பாவிகளா, உலகம் முழுக்க, பெண்கள் தினத்தை என்னமா விளம்பரம் பண்ணி கிராமத்துல இருக்கிற எனக்கு கூட தெரிய வச்சுட்டாணுங்க. ஆனா பாரு இந்த ஆண்கள் தினத்தை ஒரு பயலும் சொல்லவே இல்லை. ஆமா, இந்த டிவிக்காரனுங்க கூட “பெண்கள் தின ஸ்பெஷல்ன்னு சொல்லி ஏதாவது போடுவானுங்க,ஆனா ஆண்கள் தின ஸ்பெஷல்ன்னு ஒண்ணும் போடக்காணோமே சேகரு”.

“டி‌விக்காரங்களுக்கே தெரியாதோ என்னமோ,யார் கண்டா”.

நீ என்னமோ 1999லேருந்து இந்த நாளை கொண்டாடுறாங்கன்னு சொல்ற, ஆனா நம்ம நாட்டில கொண்டாடுறாங்களா சேகரு?

“வெஸ்ட் இண்டீஸ் நாட்டுல தான் இந்த நாளை முதன் முதலா கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் ஆஸ்திரேலியாவுல 2003லேருந்தும், இந்தியாவுல 2007லேருந்தும் கொண்டாடுறாங்க. இன்னும் நிறைய நாடுகளிலும் கொண்டாடுறாங்க மாடசாமி”

“நம்ம ஆண்களுக்கு எப்பவுமே விளம்பர படுத்திக்க புடிக்காது இல்ல, அதனால தான் இந்த நாளையும் விளம்பரப்படுத்தல போல”

“சரியா சொன்ன மாடசாமி, நாம என்னைக்கு தான் நம்மளை முன்னிருத்தியிருக்கோம் சொல்லு, அந்த காலத்துல வேணா, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம், ஆனா இந்த காலத்துல நாம எல்லாத்திலும் பின்னாடி நின்னு, பெண்களைத்தானே முன்னாடி நிறுத்துறோம்”.

“ஆமா,ஆமா, படிக்கிற பசங்க கூட அதைத்தானே பண்றாங்க சேகரு”

“படிக்கிற பசங்க, பெண்கள் முன்னேறட்டும்னு விட்டுக்கொடுக்கிறாங்க. ஆனா, இந்த பெண்கள் எப்பத்தான் புரிஞ்சுப்பாங்களோ!”

“இப்ப எல்லாம் சில பெண்கள் தன் கணவனோட குடும்பத்தாரை பிடிக்கலைன்னா, உடனே பொய்யா வரதட்சணை வழக்கைப் போட்டு, அப்பாவி கணவனையும், அவனோட குடும்பத்தாரையும் கம்பி என்ன வச்சிடுறாங்க சேகரு”.

“பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை சில பெண்கள் தப்பா பயன்படுத்துறதுனாலத்தான், உண்மையான சுதந்திரத்தை அவுங்களால முழுசா அனுபவிக்க முடியலை”.

அடடா, ஆண்கள் தினம்னு சொல்லி, இப்ப பெண் சுதந்திரத்துக்கு போயிட்டோம் பாரு சேகரு”

“ஆமா இல்ல, என்ன பண்றது, பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம்னு, நம்மளை மாதிரி ஆண்கள் நினைச்சுக்கிட்டே இருக்கிறதுனால தான், ஆண்கள் தினமான இன்றைய தினத்தை கூட நாம பெருசா எடுத்துக்கிறதில்லை மாடசாமி”.

“ஆண்கள் தினம்னு ஒண்ணு இருக்குது, அது இன்னைக்குத்தான்னு சொல்லி எனக்கு புரிய வச்சதுக்கு ரொம்ப டாங்சு சேகரு”.

ஆண்கள் தின வாழ்த்துக்கள் சகோதரர்களே!!!.

பின்குறிப்பு – அதிவிரைவில் ஆண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு பதிவு உங்களுக்காக வரவிருக்கிறது.  

Monday, November 17, 2014

கனவில் வந்த காந்தி(10)






என் கனவுல கொஞ்ச நாள் வரைக்கும் அனுஷ்கா, த்ரிஷா, ஹன்ஸிகா போன்றவர்கள் தான் வந்துக்கொண்டிருந்தார்கள். அப்ப அமலாபால் வரலையான்னு கேட்காதீங்க,அவுங்க எனக்கு உடன்பிறவாத தங்கச்சியாக்கும்


ஆனா எப்ப பதிவுலக நண்பர் மீசைக்கார கில்லர்ஜி அறிமுகம் ஆனாரோ, 



                                                                கில்லர்ஜி

அன்னையிலிருந்து இவுங்க எல்லாம் என் கனவுல வருவதே இல்லை. ஏன்னா, எல்லோருக்கும் அவரோட மீசையைப் பார்த்து பயமாம். இதை நான் சொல்லலை, அவுங்களே என்னோட கனவுல கடைசியா ஒரு தடவை வந்து இதை சொல்லிட்டு, நீங்க அவருக்கு நண்பராக இருக்கீங்க, அதனால உங்க கனவுலேயும் நாங்க வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. என்னடா இது, விஷயம் இவ்வளவு சீரியஸா இருக்கேன்னு கேட்டா, அவுங்க எல்லோரும் சொன்ன பதில் என்னன்னா, ஒரு நாள் அவுங்களும் அவரோட கனவுல வந்திருக்காங்க. ஆனா நம்ம நண்பர் சும்மா இருக்காமா, தன்னோட பால் வடியும்(?) முகத்தை அவுங்க கிட்ட காமிச்சிருக்காரு, அவ்வளவு தான், சின்னப்பசங்க பூச்சாண்டியைப் பார்த்து பயந்து போன மாதிரி அவுங்க எல்லாம் பயந்துட்டாங்களாம். அதனால அவரோட கனவுல இவுங்க தரிசனம் கொடுக்கிறதே இல்லையாம். இவரோட நண்பனாக இருக்கிற ஒரே காரணத்துக்காக, என் கனவுலேயும் இவுங்க வர மாட்டேன்னுட்டாங்க. என்ன கொடுமைங்க இது!!!....
.
இப்ப என்னடான்னா, நேத்து ராத்திரி, திடீர்னு கனவுல நம்ம மகாத்மா காந்தி வந்துட்டாரு. வந்தவரு என்னைய நலம்  விசாரிச்சுட்டு போயிருந்தாருன்னா பரவாயில்லை, அதை விட்டுட்டு கேள்விக்கணைகளையா தொடுத்து , அதுக்கு பதிலையும் வாங்கிக்கிட்டு தான் போனாரு. அப்ப போகும்போது, நான் முதல்ல உன் நண்பரோட கனவுல தான் வந்து, இந்த கேள்விகளை எல்லாம் கேட்டேன். உன் நண்பர் தான், உன்னோட கனவுலையும் வரச்சொல்லி என்னை அனுப்பினாருன்னு சொல்லிட்டு போனாரு.

முன்னாடியெல்லாம், நான் பாட்டுக்கு சிவனேன்னு, கனவுல வரவுங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு, நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்தேன். இப்ப கில்லர்ஜி, என்னடான்னா, மகாத்மா காந்தியை நம்ம கனவுக்கு அனுப்புராரு. காந்தி கனவுல வர்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய மனுஷன் கிடையாதுங்கோ!!!

சரி, காந்தி கனவுல வந்து என்ன கேள்வி எல்லாம் கேட்டாருன்னு கேக்கிறீங்களா? இதோ அவரோட கேள்விகளும், என்னோட பதில்களும்.


1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

இந்த ஆன்மா இதுவரை எடுத்த ஜென்மங்களே போதும். இனி வேறு ஒரு ஜென்மம் வேண்டாம். இறைவனின் காலடியில் இருப்பதே போதும்.

2. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன்.லஞ்சம் வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் நடு ரோட்டில் கசையடி கொடுப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்குவேன்.

3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்என்ன செய்வாய்?

இந்த சட்டத்திற்கு கண்டிப்பாக அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். ஏனென்றால், அவர்கள் இந்தியாவிற்கு வந்து லஞ்சத்தை கொடுத்து வேலைகளை முடித்துக்கொண்டு, சீக்கிரம் வெளிநாட்டுக்கு திரும்புவதிலேயே குறியாக அல்லவா இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் தண்டனை. லஞ்சம் கொடுத்து அவர்கள் மாட்டினால், அவர்களுக்கு கசையடியோடு, மீண்டும் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு விசாவை வழங்க மாட்டேன்.

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

முதியோர்களை அவரவர் பிள்ளைகள் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கத் தவறிய பிள்ளைகளைளின் வேலையை பறித்து விடுவேன். மீண்டும் அவர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை கவனிக்கும் வரை அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

அரசியலுக்கு வருபவர்கள் இனி தேர்வு எழுதி தான் வர வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்.

6. மதிப்பெண் தவறெனமேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?

மதிப்பெண் முறையை ஒழித்து வெளிநாடுகளில் இருப்பது மாதிரி கிரேடு சிஸ்டத்தை கொண்டு வருவேன்.


7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

விஞ்ஞானிகள் அனைவரும் சிறந்த முறையில் பாதுக்காகப்படுவர்.

8. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

கண்டிப்பாக செய்ய வேண்டும். அவ்வாறு மறுக்கும் பட்சத்தில், மக்களே அந்த ஆட்சியாளர்களை கீழே இறக்கிவிடுவர்.

9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பட்ஜெட் போட்டுத்தான் குடும்பம் நடத்துவார்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?

முதல் கேள்விக்கான பதிலே, இந்த கேள்விக்கான பதில் ஆகும்.

நான் சொன்ன பதில்கள் எல்லாம் காந்திக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சாம், அதனால, நீ உன் நண்பர்கள் 10 பேரை சொல்லு, நான் அவுங்க கனவுல போய், இந்த கேள்விகளையெல்லாம் கேக்கிறேன்னு கேட்டாரு. எனக்கு மத்தவங்களை மாட்டி விடுறதுல இஷ்டமே இல்லை. பாவம் அவுங்களாவது நிம்மதியா கனவு கண்டுக்கிட்டு தூங்கட்டும், காந்தி போய் அவுங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு, நான் யார் பேரையும் காந்திக்கிட்ட சொல்லலை.

என் கனவுல காந்தி வந்தே ஆகணும்னு நீங்க நினைச்சீங்கன்னா, நான் ஒரு மந்திரம் சொல்லித்தரேன், அதை சொல்லிட்டு நீங்க படுத்தீங்கன்னா, கண்டிப்பா கனவுல காந்தி வருவாருங்கோ...

“மீசைக்கார நண்பா, என் கனவுலேயும் காந்தியை வரச்சொல்”

இதுதாங்க அந்த மந்திரம்...


Tuesday, November 11, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய்திகள் வாசிக்கும் நேரம்)



பள்ளிக்கூடத்தில் இப்போது கடைசி பருவம் (last term) நடந்து கொண்டிருக்கிறது. சென்ற பருவத்தில் (3rd term), ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஓவியாவிற்கு செவ்வாய்க்கிழமையாக அமைந்திருந்தது. இதனை "நியூஸ் டைம்(news time)" என்று கூறுகிறார்கள். அந்த பருவம் ஆரம்பித்த முதல்வாரத்தில் இது சம்பந்தமான கடிதத்தை கொடுத்து விட்டார்கள்மேலும்.....