மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான 32 வயதான அலெக்ஸ் பால் மேனன் ஒரு தமிழர். நான் முதல்ல அவரோட பேரைப் பார்த்து, மேனன்னு இருக்கு, இவர் எப்படி தமிழரா இருப்பாருன்னு யோசிச்சேன். அப்புறம் தான் அவரோட தந்தையின் பேட்டியை படிச்ச பிறகு தான் அந்த சந்தேகம் தீர்ந்துச்சு. ''மாவீரன் அலெக்ஸாண்டர் நினைவா, அலெக்ஸ்... போப் ஜான்பால் மீது கொண்ட அன்பால, பால்... நேரு அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சரா இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் நினைவா, மேனன்...” இது தான் அவருக்கு அந்த பேர் வந்த காரணம். தன்னுடைய பள்ளிப் பருவத்துலேயே தாயை இழந்த அவர் தாய் அன்பையும், தந்தையிடமே பெற்று ஒரு பொறுப்பான இளைஞனா வளர்ந்திருக்காரு. சுக்மா மாவட்டத்தோட முதல் கலெக்டரும் அவர் தான். சுக்மாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சிபாடா என்ற கிராமத்தில் நடந்த, 'கிராம் ஸ்வராஜ் அபியான்’ என்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வைத்து மாவோயிஸ்ட்டுகள் அவரை கடத்தினர். அடிஷனல் கலெக்டராக இருந்த போது அவருடைய சேவைகளைப் பாராட்டி மத்திய அராசங்கம் அவருக்கு மூன்று விருதுகளை அளித்திருக்கிறது. சுக்மா மாவட்டத்துல நாலே மாசத்துல கலெக்டர் அலுவலகத்தைப் புதுசாக் கட்டி முடிச்சிருக்காரு. மேலும் பல நல்ல காரியங்களையும் செய்திருக்கிராரு. அதனால் அங்குள்ள மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. சென்ற வருடம் தான் அவருக்கு திருமணம் நடந்தது. அவர் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்பமான ஒரு பெண் தன் அருகில் கணவன் இருப்பதை தான் விரும்புவாள்.ஆனால் இங்கோ, தான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தன் கணவன் எப்படி இருக்கிறாரோ, அவருக்கு என்ன ஆகுமோ என்று தினம், தினம் துடித்துக் கொண்டிருக்கும் அவருடைய மனைவிக்கு என்ன சொல்வது.
மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஆத்மாக்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ. நாட்டில் எவ்வளவோ மோசமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அந்த கடத்தல்காரர்களுக்கு அடையாளம் தெரியவில்லை போல இருக்கு, அந்த மாதிரி ஆட்களை கடத்தி இருந்தால், மக்கள் எவ்வளவு சந்தோஷப் படுவார்கள். இந்த பதிவை நீங்கள் படிக்கும் போது கண்டிப்பாக அவர் விடுதலை அடைந்திருப்பார் என்று நம்புவோம், அதற்காக பிராத்திப்போம்.
.