சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு
ஐயா அவர்கள் பால்ய முதல் நித்திய நியம பாராயணமும்
சிவபூசையும் சிவதரிசனமும் செய்வதுடன், பெரியோர்கள் சார்பும், கல்வி சாஸ்திராராய்ச்சியுமுள்ள
விற்பன்னராக விருந்தபடியால் சுயமாக விரைவிற்
கவிதைபாடுவதில் அதிசாமர்த்திமுள்ளவர்களாக இருந்தார்கள்.
ஐயா அவர்களுடைய கையெழுத்து.
(மூலநூலில்
உள்ள இந்த பகுதியை அப்படியே ஸ்கேன் செய்து எடுத்துப் பதிவிட்டிருக்கிறேன்.)
இவையன்றியும்
தக்கவித்துவான்கள் இயற்றிய நூல்களுக்குக் கொடுத்திருக்கின்ற சாற்றுக் கவிகளும், சிவாலய முதலிய திருப்பணி, கும்பாபிஷேக, உற்சவ, பாலஸ்தாபன, முதலிய முகூர்த்தங்கட்கும் எழுதிக்கொடுத்த பத்திரிக்கைகளும் செய்யுட்களும்
அளவில்லாதனவாகும்.
ஐயா அவர்கள், வேண்டுஞ் சமயம் நிமிஷ கவியாகப்
பாடக் கூடியவர்களானபடியால், ஓர் மாணாக்கர், பாராயணஞ் செய்தற் பொருட்டு திருவெம்பாவைச் செய்யுட்களுக்கும், கந்தரனுபூதிச் செய்யுட்களுக்கும், செய்யுள் முதற் குறிப்புத்
தெரிந்துகொள்ள ஒவ்வோர் செய்யுளாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கு, உடனே ஐயா அவர்கள் சொல்லிய செய்யுட்களாவன,
"ஆதி பாச முத்தன்ன
வொண்ணித் திலமா லறிமானே
மோத மாரன் னேகோழி
முன்னை பாதா ளம்மொய்யார்
ஓது மார்த்த பைங்குவளை
யொடுகா தாரோ ரொரு முன்னிக்
காதற் செங்கண் ணண்ணாவுங்
கைபோற் றியுமெம் பாவைமுதல்"
"மாதிருமு னெஞ்சாடு லாசவா
னேர்புவழை மகமாயை திணியாகெடு
வாயமரு மட்டுகார் கூகாசெம்
முருககை வாய்முருக பேராசையா
மோதியுதி வடிவுமரி கருகாளை
யுடிகூர்மெய் யோதுமாதார மின்னே
யுரைசெய்யு மானாவ வில்லேசெவ்
வான்பா ழுணர்த்துகலை யேபசிந்தா
சாதிசிங் காரவிதி நாதாகு
கிரியொடா தாளிமா வேழ்சவினையோ
சாகாகு றியைதூசு சாடுகர
வாகியெந் தாயுமா றாறையெறிவொன்.
றாதிசார் தன்னந் தனிமதியொ
டுருவாகி யைம்பதிற் றிரண்டுகாப்போ
டாவிமுழு தருளம்பி காவலவர்
தருகந்த ரனுபூதி கவிகண்முதலே."
ஒன்பதாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.