நண்பர் திரு. மதுரைத்
தமிழன் அவர்கள் சும்மா இருக்காம, சக வலைப்பதிவர் சகோதரி ராஜி கனவுல வந்து பத்து கேள்வி கேட்டாங்க, அதுக்கு நான் இப்படியெல்லாம் பதில் சொன்னேன்ன்னு சொல்லி, கூட ஒரு பத்து பேர்
கிட்டேயும் இந்த கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டாரு.
இதுல கொடுமை என்னன்னா, அந்த பத்து பேர்ல நானும் ஒருத்தனாப் போயிட்டேன். இதுல வேற ஒழுங்கான
பதிலாக இருக்கணுமா, நக்கலாக எல்லாம் இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன்.
அந்த பத்து
கேள்விகளும்,
என்னோட
பதில்களும்:
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
நூறு வயது வரை இருந்து
என்னுடைய புலம்பல்களையெல்லாம் என் வலைப்பூவில் எழுதி உங்களை படிக்கச் சொல்லி
தொந்தரவு பண்ணமாட்டேன் என்று நம்புகிறேன்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
சோம்பேறித்தனத்தை
எவ்வாறு விட்டொழிப்பது என்பதை
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
வலைப்பதிவு நண்பர்
சுரேஷ் எழுதிய இந்தியரின் மாஜிக் படித்து நல்லா வாய் விட்டு சிரித்தேன்
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பகலில் என் குழந்தைகளோடு
வீட்டுத் தோட்டத்தில் விளையாடுவேன், மாலையில் மெழுகு வர்த்தியை ஏற்றி, நான் படிக்காமல் விட்டுப்போன புத்தகங்களை படிப்பேன்
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
வாழ்கையில் எப்பேற்பட்ட
துன்பம் வந்தாலும் மனம் கலங்காமல் அதை எதிர்த்து போராடு. உன் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல
தோழியாக உன்னை மாற்றிக்கொள். இறுதியாக குடும்பத்தலைவி தான் கண்ணாடி என்பதை மறவாதே என்று சொல்லுவேன்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
ஆதரவற்றவர்கள்
(குழந்தைகளாக இருந்தாலும் சரி,பெரியவர்களாக இருந்தாலும் சரி) என்ற அந்த நிலை ஒருவருக்கும் உருவாகாமல்
இருக்க முயற்சிப்பேன்,
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
மூன்றாண்டுகள் முன்பு
வரை என் அன்னையிடம் கேட்டு வந்தேன். அவர்கள் என்னை விட்டு நீங்கியதால், இப்பொழுதெல்லாம், என்னை நன்றாக புரிந்த
உற்ற நண்பரிடம் கேட்கிறேன்
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
நாய் சூரியனைப் பார்த்து
குலைக்கிறது என்று எண்ணி ஒன்றும் பேசாமல் அம்மாதிரியான துஷ்டர்களிடமிருந்து இருந்து
ஒதுங்கி விடுவேன் (இந்த பதில் வெறும் கேள்விக்காக எழுதப்பட்ட பதில் இல்லை, எனக்கு ஏற்பட்ட
அனுபவத்தை தான் நான் சொல்லியிருக்கிறேன்)
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இனிமேல் உன்
குழந்தைகளுக்கு நீ தான் தாயுமானவனாக இருந்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்று
சொல்லுவேன்
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இருக்கவே இருக்கு
புத்தகங்களும்,
புலம்பல்களை
எழுதுவதற்கு என்னுடைய வலைப்பூவும் - உண்மையானவன்
இந்த தொடர் பதிவில்
நான் மாட்டிவிடும் நண்பர்களான , நீங்களும் உங்களால் முடிந்தால் இந்த தொடர் பதிவை உங்கள் வலைப்பூவில்
எழுதி உங்களுக்கு வேண்டிய (?) நண்பர்களையும் இதில் இழுத்து விடுங்கள்.