நான் 40 வயது வரைக்கும் உடம்பைப் பற்றி யோசிக்காமல் இருந்து
விட்டேன் (உடற்பயிற்சி என்றால் என்ன, என்று கேட்கும் அளவில் தான் இருந்தேன்). 40 வயதுக்கு பிறகு தான் உடம்பைப்
பற்றிய பயம் வந்தது. அதனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று முழு உடல்
பரிசோதனையை செய்தேன். அப்போது இந்த சக்கரை, கொலஸ்ட்ரால் இதெல்லாம்
எதுவிமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இரண்டு
வாரத்திற்கு முன்பு மீண்டும் முழு உடல் பரிசோதனையை செய்யும்போது, கொலஸ்ட்ரால் 6.2 இருக்கிறது. 5.2க்குள் தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள்
உணவியலரை (Dietician) சந்தித்து, அவரின்
அறிவுரைப்படி, உங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்
என்று என்னுடைய மருத்துவர் எடுத்துரைத்தார்.
அதன்படி, நேற்று அந்த உணவியலரை சந்தித்தேன். அவர் உங்களுடைய உடம்பில் கெட்ட கொழுப்பு
அதிகமாக உள்ளது, நீங்கள் மது அருந்துவது இல்லாததால், உங்களுடைய தினசரி உணவு முறைகளை சொல்லுங்கள் என்றார். நானும் என்னுடைய உணவு
முறைகளை சொன்னேன். அவர் எல்லாத்தையும் கணினியில் பதிவேற்றிக்கொண்டு, என்னிடம் இரண்டு தாள்களை கொடுத்தார். அதில் கொழுப்புச் சத்து சம்பந்தமான உணவுத்திட்டம்
இருந்தது. எதெல்லாம் உடம்பில் கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்)
உருவாக்கக்கூடியது, எதெல்லாம் நல்ல கொழுப்பை(HDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது என்று
குறிப்பிட்டு இருந்தது.
நான் சைவம் என்பதால், அந்த உணவியாலர் அசைவ உணவு வகைகளை அடித்து விட்டார்.
இதனை பார்த்து, நீங்களும் அதன்படி உங்களின் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இந்த கெட்ட கொழுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் நான் மதியம் அலுவலகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, கோவிலில் வெளிப் பிரகாரம்
வருவது மாதிரி 20 நிமிடங்களுக்கு அலுவலகம் உள்ள சாலையை 3 முறை பிரகாரமாக வருகிறேன்.
பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு. வீட்டிற்கு பின்னால் இருக்கும் இடத்தில் 108 சுற்று
சுற்றி வருகிறேன். தினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்!!
அடுத்த மாதம் மீண்டும் நான் அந்த உணவியலரை சந்திப்பேன். அப்போது
அவர் கூறும் விஷயங்களை இந்த பதிவின் தொடர்ச்சியாக பதிகிறேன்.
நேற்று வழக்கம்
போல அலுவலகத்துக்கு trainல போகும்போது படிக்கிறதுக்கு கதை புத்தகம் எதுவும் இல்லாததுனால,
போன்ல தினமலர் படிச்சுக்கிட்டு வந்தேன். (பொதுவா இந்த தினமலர், விகடன் அப்புறம் நண்பர்களோட
வலைப்பூவெல்லாம் அலுவலகத்தில தான் படிக்கிறது). அப்படி படிக்கும்போது தான், இந்த செய்தி
கண்ல தென்பட்டுச்சு.
“காலை கழுவிய
போலீஸ் அதிகாரி”
(புகைப்படம் நன்றி - தினமலர்)
மாட்டுத்
தீவண ஊழல் வழக்குல, மாட்டி சிறைக்குச் சென்ற லாலு பிரசாத் யாதவ் ஜாமீன்ல வெளியே வந்தபோது
தான் இந்த கூத்து நடந்திருக்கு. ஜாமீன்ல வெளியே வந்த அவர், நேரா வீட்டுக்கு போகாம கோவிலுக்கு
போயிருக்கார். அப்ப, டி.எஸ்.பி ரேங்கில் இருக்கும்
ஒரு போலீஸ் அதிகாரி, லாலுவின் காலை தண்ணீர் விட்டு பாதாபிஷேகம் பண்ணியிருக்கார். நான்
இந்த வரியை படிச்சவுடனே, சரி அந்த போலீஸ் அதிகாரியின் கண்களுக்கு, லாலு ஒரு பெரிய ஆன்மீகவாதியாக
தெரிஞ்சிருக்கார் போலயிருக்குன்னு நினைச்சுக்கிட்டு (ஏன்னா அரசியல்வாதிகளை விட இப்ப
போலி சாமியார்கள் தானே சிறைக்குப் போறது அதிகமாயிருக்கு) தொடர்ந்து அந்த செய்தியை படிச்சேன்.
உடனே அடுத்த வரில, பக்கத்தில் இருந்த போலீஸ் கான்ஸ்டபுள், லாலுவோட செருப்பை பத்திரமா
கைல தூக்கிக்கிட்டு நடந்தார்ன்னு போட்டிருந்துச்சு. அட கடவுளே, எங்க லாலு செருப்பை
யாராவது திருடிக்கிட்டு போயிட்டா(?) என்ன பண்றதுன்னு பயந்துக்கிட்டு, அந்த கான்ஸ்டபுள்
கையிலேயே தூக்கி வச்சுக்கிட்டு இருந்திருக்காரு. இந்த அவலத்தை கேள்விப்பட்ட அந்த ஊர்
காவல்துறை, அந்த இரண்டு பேர் மேலையும் துறை ரீதியா விசாரானைப் பண்ண போறோம்னு சொல்லியிருக்காங்க!.
இதை கேள்விப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி, “லாலுவை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும்,
அவர் மீதுள்ள மதிப்பின் காரணமாகத்தான் , அவருக்கு நான் பாத பூஜை செய்தேன்னு சொல்லியிருக்காரு.
இந்த செய்தியைப்
படிச்சு முடிச்சவுடனே, எனக்கு சட்டுன்னு நம்ம தமிழ்நாட்டு மந்திரிங்க தான் நியாபகத்துக்கு
வந்துச்சு. அவுங்க தானே, அம்மாவைப் (அவுங்க அம்மாவை இல்லைங்க!!) பார்த்துட்டாலே, படக்குன்னு
கால்ல விழுவாங்க. இந்த படத்தைப் பாருங்க, எப்படி, அந்த மந்திரி ஸாஷ்டாங்கம்மா, அம்மாவின்
காலில் விழுந்து கும்பிடுவதை....
இயக்குனர் எங்களையெல்லாம்
கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. எனக்கு உள்ளுக்குள்ள உதற
ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, எனக்கு தான் சுட்டுப் போட்டாலும் நடனம் வராதே. ஏழு வருஷத்துக்கு முன்னாடி
நான் டோக்கியோவில இருக்கும்போது, வருஷா வருஷம் நடக்கிற பொங்கல்
திருவிழாவில நாங்க ஒரு நாடகம் போடுவோம். அப்படி
ஒரு நாடகத்தை எழுதி இயக்கிய நண்பர் ஒருவர், ராமராஜன் மாதிரி நடனம் ஆடுங்கன்னு சொல்ல, நானோ பாக்யராஜ் மாதிரி நடனம் ஆடினேன். அவர் கடுப்பாயிட்டாரு. உடனே நான், ஏங்க எனக்கு தெரிஞ்ச ஒரே நடனம் பாக்யராஜ் நடனம் தான், அதனால நாம ராமராஜனுக்கு பதிலா பாக்யராஜ்ன்னு மாத்திடுவோம்ன்னு சொன்னேன். அவரும், இவன் கிட்ட கோவிச்சுக்கிட்டா வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு, என்னிடம், ஏங்க ராமராஜன் நடனமும் ரொம்ப ஈஸி தாங்கன்னு, “தைய தக்க, தைய தக்கண்ணு” ஆடி காமிச்சாரு. நாம யாரு!!, நீங்க எப்படி வேணாலும் ஆடுங்க, ஆனா நான் பாக்யராஜ் நடனம்
மட்டும் தான் ஆடுவேன்னு ஆடினேன். அவரும் எவ்வளவோ முயற்சி செஞ்சு, கடைசில ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அதனால
மேடைல நீங்க வரும்போது, ராமராஜன் பாட்டு வரும், அப்ப கையை மட்டும்
ஆட்டுங்க போதும்னு வெறுத்துப்போய் சொன்னாரு.
இப்ப இயக்குனர் அந்த நடனக் காட்சியை சொல்ல, சொல்ல, எனக்கு அந்த வேண்டாத பழைய நினைப்பு எல்லாம் வந்துடுச்சு. எங்க நம்மளால நிறைய
டேக் ஆயிடுமோன்னு பயம் வந்துடுச்சு. ஏன்னா, இந்த காட்சியில விஜய்,அமலாபால், சந்தானம்ன்னு எல்லாரும் இருக்காங்க. ஏற்கனவே
சந்தானம், எங்களோட முத காட்சிக்கு, நீங்க
400/500 டேக் எடுத்தவங்கதானேன்னு சொல்லி ரொம்ப கடுப்பேத்தினாரு. இந்த காட்சியில நான்
ஒழுங்கா நடிக்காம நிறைய டேக் வாங்கினா என்ன பண்றதுன்னு ஒரே பயமாயிடுச்சு. இயக்குனர்
சொல்லி முடிச்சவுடனே, நான் தயங்கிக்கிட்டே,“சார், எனக்கு நடனம் எல்லாம் ஆட
வராதுன்னு” சொன்னேன். அவரும், “அது தாங்க எங்களுக்கு வேணும்.
நீங்க நடனம் கத்துக்க வந்திருக்கீங்க,அதனால தப்புத்தப்பா ஆடுங்கன்னு”
தைரியம் கொடுத்தாரு. அந்த காட்சி என்னன்னா, விஜய் சொல்லிக்கொடுக்கிற
நடனப்பள்ளியில அமலாபால் போய் சேருவாங்க. நாங்க தான் அமலாபாலை பின்னாடியே ஃபாலோ பண்ணுகிற
கல்யாணமாகாத பிரம்மச்சாரிகள் ஆச்சே, அதனால நாங்களும் விஜய் கிட்ட
எங்களையும் அந்த நடனப்பள்ளியில சேர்த்துக்குங்கன்னு கெஞ்சுவோம். அந்த காட்சி தான், நாங்க விஜய் முன்னாடி, முட்டிப் போட்டு, கையை மேல தூக்கி, விஜயிடம்,”தலைவா, நீங்க தான் எங்களுக்கு குரு, எங்களுக்கு டான்ஸ்ன்னா
உயிரு. பிளீஸ் எங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கன்னு” சொல்லுவோம்.
இந்த காட்சியை எடுக்குறதுக்காக முதல்ல
எங்களை எல்லாம் வரிசையா நிக்கச் சொன்னாங்க. நான் வந்து முத வரிசையில நின்னுக்கிட்டு
இருப்பேன். அப்புறம் அப்படியே முட்டி போடச் சொல்லி, . கையை தூக்கி மேல காட்டச் சொன்னாங்க. காமிரா
எங்களுக்கு பின்னாடி இருந்துச்சு. முதல்ல சரியா வரலை. எல்லாரும் ஒரே நேரத்துல முட்டி
போடலை. உடனே டைரக்டர் நான் ஒண்ணு,ரெண்டு, மூணு சொல்லுவேன். மூணு சொன்னவுடனே நீங்க முட்டி போட்டு கையை மேல துக்கணும்னு
சொன்னாரு. அப்புறமும் சரியா வரலை, பின்னாடி இருக்கிறவங்களோட கை, முன்னாடி இருக்கிறவங்களோட தலையை மறைக்குதுன்னு, அந்த
கைகளையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, சரியா தூக்கச் சொன்னாங்க.
4/5 டேக்குக்கு அப்புறம் அந்த காட்சி சரியா வந்துச்சு. இதுல விஜய் எங்களுக்கு
முன்னாடி நிக்கணும். இன்னும் சரியா சொல்லனும்னா, எனக்கு முன்னாடி
நின்னு(அவரோட முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு இருக்கிற கை, என்னோட கை), என்னைய அவர் பார்த்துக்கிட்டு இருப்பாரு. அவரும் பாவம் அந்த காட்சி முடியுற வரைக்கும் பேசாம
நின்னுக்கிட்டு இருந்தாரு. இப்ப வசனம். படத்துல எல்லாரும் ஒண்ணா சொல்லுவோம். ஆனா காட்சி
எடுக்கும்போது, இந்த வசனங்களையே தனித்தனியா சொல்லச் சொன்னார்கள்.
முத வசனமே என்னோடது தான். “தலைவா நீங்க தான் எங்களுக்கு குரு.” இந்த வசனத்தை நான் முகத்தை
அப்பாவியா(!!) வச்சுக்கிட்டு(எல்லாம் வீட்டு அம்மணிக்கு எதிர்ல நின்னு பேசிப் பேசி
பக்கமாயிடுச்சு) சொன்னவுடனே, விஜய் சிரிசிட்டாரு. உடனே, “சாரி, சாரி இன்னொரு டேக் போயிடலாம்னு சொன்னாரு”. அவர் சிரிச்சவுடனே, எல்லோரும் “சாம் (ஏன் சாம்ன்னு கூப்பிடுறாங்கன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கேன் - சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான் ), அவர் சிரிக்கிற அளவுக்கு என்ன பண்ணினீங்கன்னு” கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு
ரெண்டு டேக் ஒவ்வொருத்தரா வசனம் சொல்ற மாதிரி எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன
நினைச்சாரோ, எல்லோரையும் ஒண்ணா சொல்ல சொல்லி எடுத்தாரு. ஆனா அப்படியுமே
நாங்க நாலு டேக் வாங்கினோம்.
இப்ப, நடனம் கத்துக்கிற மாதிரியான
காட்சி. இந்த காட்சிக்கு, முன்னாடி நின்ன மாதிரியே நிக்கணும். ஆனா, முதல் வரிசையில
நடுவுல அமலாபால் நிப்பாங்க. அவுங்களுக்கு ரெண்டு பக்கமும் டான்சர் பாய்ஸ் நிப்பாங்க, அப்புறம் நான் அமாலாபாலுக்கு இடதுபுறத்துல அந்த டான்சர் பாய்க்கு பக்கத்துல
நிப்பேன். அந்த மாதிரி மூணு வரிசைல நாங்க நிப்போம். இந்த ஷாட்ல விஜய் கிடையாது. இன்னொரு
டான்சர் தான் எங்களுக்கு சொல்லிக்கொடுப்பவரு. அவரு ஒன்,டூ, த்ரீ ஃபோர், ஃபைவ் ,சிக்ஸ் ,செவன் ,எய்ட் அப்டின்னு சொல்லுவாரு. அப்ப எல்லோரும் டான்ஸ்
மூவ்மென்ட் பண்ணனும். அப்படி பண்ணிக்கிட்டே, அமலாபால் பக்கத்துல
போறதுக்கு ட்ரை பண்ணனும். அதாவது, எங்களுக்கு பக்கத்துல இருக்கிற
அந்த டான்சரை தள்ளிட்டு அமாலாபாலுக்கு பக்கத்துல போகணும். உடனே அந்த டான்சர் பாய்ஸும்
எங்களை தள்ளிட்டு, அவுங்க அமலாபால் பக்கத்துல போவாங்க. இப்படியே
ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நடக்கும். இதுல நான் ரொம்ப ஒல்லியா இருக்கிறதுனால, எனக்கு பக்கத்துல இருந்த டான்சர் நான் அமலாபால் பக்கத்துல போனவுடனே, என்னைய தூக்கி ஒரு சுத்து சுத்தி இறக்கி விடுவாரு. இயக்குனருக்கு அது ரொம்ப
பிடிச்சுப்போச்சு. அப்படியே பண்ணுங்கன்னு சொன்னாரு. எனக்கு தான் டான்ஸ் வராதே, அதனால நான் ஒரு தலை ராகத்துல வர்ற “கூடையில கருவாடு” பாட்டுல வர்ற ஸ்டெப்ஸ்
தான் போட்டேன். ஒரு வழியா இந்த காட்சியையும் 4 டேக்ல எடுத்தாங்க. இந்த காட்சியை எடுத்ததுக்கு
அப்புறம், இயக்குனர், காமிரா மேன், அமலாபால் எல்லோரும் அந்த காட்சியை போட்டுப்பார்த்தாங்க. அப்ப இயக்குனரும், அமாலாபாலும், என்னையப் பார்த்து, அவரு, நல்லா காமெடியா ஆடியிருக்கறேன்னு பேசிக்கிட்டாங்க.
உடனே,நாங்களும் போய் பார்த்தோம். நான் போட்ட ஸ்டெப்ஸ் ரொம்ப காமெடியா
இருந்துச்சு.
அதற்கு பிறகு, அடுத்த ஷாட் – அதாவது சந்தானம்
வந்து அமலாபாலிடம் பேசுகிற காட்சி. அவர் உள்ள என்ட்ரியாவதையே மூணு டேக் எடுத்தாங்க.
அப்புறம் அவர் எங்கக்கிட்ட வந்து “ஸ்டாப்ன்னு” சொன்னவுடனே, நாங்க
எல்லாம் அப்படியே நிக்கணும். அதை ஒரு ஷாட்டா எடுத்தாங்க. அப்புறம் அவர் நான் ஒரு ஸ்டெப்
போடுறேன்னு சொல்லி போய் குதிக்கிற மாதிரி ஆக்க்ஷன் பண்ணுவாரு, நாங்க அப்படியே
காதைப் பொத்திக்கணும். இதையே 7/8 டேக் எடுத்தாங்க. அதற்கு பிறகு தான், அந்த டான்சர் ஒரு கையை கீழே ஊனிக்கிட்டு டான்ஸ் பண்றதை தனியா ஷூட் பண்ணினாங்க.
ஒரு வழியா இந்த நடனக் காட்சி முடிஞ்சிருச்சுன்னு
சொன்னாங்க. இன்னும் ஒரு continuity
காட்சி மட்டும் பாக்கியிருக்கு, நீங்க திங்கள்
கிழமையோ, செவ்வாய்க்கிழமையோ வர வேண்டியிருக்கும். நாங்க எப்பன்னு
சொல்றோம்னு சொன்னாங்க. நான் அந்த காட்சிக்காக ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு போனேன். அன்னைக்கு
என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.
சமீபத்தில் ஒரு இணையத்தளப் பத்திரிக்கையில் இந்த செய்தியை
படிக்க நேர்ந்தது. இந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்க
முடியாமல் போனவர்களுக்காக இந்த பதிவு.
இன்று பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்ளாதவர்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு நாம் அவைகளின் அடிமையாகி விட்டோம். அதிலும்
குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் இவைகளே கதியென்று இருக்கின்றனர். இவைகள் மூலமாக
நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லது இருந்தால், கெட்டதும் இருக்கத்தானே செய்யும். ஆனால், நாம்
கொஞ்சம் சுதாரிப்போடு இருந்தால், அந்த கெட்டவைகளை
நீக்கிவிட்டு, நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். அப்படி
சுதாரிப்போடு இல்லாமல் போனதால் ஒரு பெண்ணிற்கு நடந்த அநியாயத்தை அந்த இணையத்தளப்
பத்திரிக்கை ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதோ அந்த செய்தி:
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்… எச்சரிக்கைச் செய்தி..
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்.. எனக்குத் தெரிந்த
நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.. Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் ‘அழகான தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது
பேரதிர்ச்சி… ஆம்…!
அதில் அவரது ‘தங்கையின்’ புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்.. நன்றாக யோசித்துப் பாருங்கள்… ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி
இருந்திருக்குமென்று..! தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று
அறைந்தவர் இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ.. ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம்
எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்.. (அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக்
காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி.. அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture… அப்போதுதான் அவருக்கு உறைத்தது.. #Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..
அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.. இதனை இங்கே ஏன்
சொல்கிறேன் என்றால், இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று
எல்லோருக்கும் தெரியும்.. இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல், இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் #இணையஉலகில் நம்மை நாமே காத்துக்
கொள்ளவேண்டும்.. இதற்கு, நமது #பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் ‘நட்பிற்கான விடுகையைத் தரும்போது’ (friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்.. ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும்
வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்.. அப்படியொருவேளை இதில்
விருப்பமில்லையென்றால், #உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி.. இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது
பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத்
தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்.. பொழுதுபோக்கிற்காக உலாவ வரும்
பெரும்பாலோனோருக்கு, இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை
கைவலிக்க எழுதியுள்ளேன்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி – (சொல்வது எங்கள் கடமை – தீர்மானிப்பது உங்கள் கையில்)
நன்றி: கடையநல்லூர் இணையம்
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அது மாதிரி,
பேஸ்புக்கால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை பேஸ்புக் கொண்டே தெரியப்படுத்தி, மற்றவர்களுக்கும் இம்மாதிரியான ஒரு பிரச்சனை ஏற்படாமல் தடுப்போம்.
முன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள்.
ஆனா இப்பொழுதோ அந்த மாதிரி சைவர்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. சைவ உணவை மட்டும்
சாப்பிடுபவர்கள் முட்டையையும் சைவ உணவோடு சேர்த்துவிட்டு முட்டை சைவம் தான் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அசைவ உணவு சாப்பிடுபவர்களோ, இல்லை, இல்லை, முட்டை அசைவ உணவு
வகையைச் சேர்ந்தது தான் என்று சைவ உணவு சாப்பிடுபவர்களோடு சண்டை போடுகிறார்கள். ஹி..
ஹி.. மற்றவர்கள் அந்த மாதிரி சண்டை போடுகிறார்களா
என்று எனக்கு தெரியாது. ஆனால் என் வீட்டிலேயே அந்த மாதிரி சண்டை நடந்தது... நடக்கிறது.
நான் வந்து பிறவிச் சைவம். அதாவது என் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாம்
அந்த காலத்துல சிவ பூசை செய்தவர்கள், அதனால் வீட்டில் அசைவம்
சமைக்கக் கூடாது. இதனால் என் தந்தையும் அசைவ உணவு சாப்பிடாமல் வளர்ந்து இருக்கிறார்.
அவருடைய அதிர்ஷ்டம் என் தாயும் சிறு வயதிலியே அசைவ உணவு சாப்பிடுவதை விட்டு விட்டார்கள்.
எங்கள் சமூகம் அசைவ சாப்பாட்டுக்கு பெயர் போனது. கண்டிப்பாக எங்கள் சமூகத்தில் 100க்கு
95ப்பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் தான் என் தந்தை அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்று சொன்னேன். இப்படி
என் தாயும், தந்தையும் அசைவம் சாப்பிடாததால் நானும் அசைவம் சாப்பிடாமல்
தான் வளர்ந்து வந்தேன். நான் சின்ன வயசுல பயில்வான் மாதிரி ரொம்ப குண்டா இருப்பேனாம்
(ஹி! ஹி!! இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைதான்!!!!). என் எடையை
கூட்டுவதற்கு மருத்துவர்கள், என்னை தினமும் காலையில் பச்சை முட்டையை
உடைத்து பாலில் கலந்து குடிக்கச் சொன்னார்கள். அது நாள் வரை வீட்டில் முட்டையை வாங்காமல்
இருந்த என் அம்மா, அன்று முதல் முட்டையை வாங்கி எனக்கு பாலில்
கலந்து குடுக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் அந்த முட்டைப்பால் எப்படி இருக்கும் என்று
தெரியாததால், நானும் ஆர்வமாக குடிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாய்
குடிச்சவுடனே ஒரு குமட்டு, குமட்டுனுச்சு பாருங்க, அப்பா சாமி, இந்த கருமத்தை இனிமே குடிக்க கூடாதுன்னு
நினைச்சேன். ஆனா எங்க அம்மாவோ நான் வாந்தி எடுக்கிற மாதிரி போனவுடனே, மூக்கைப் பிடிச்சுக்கிட்டு குடிடான்னு ஒரு அதட்டு அதட்டினார்கள். அப்புறம்
கஷ்டப்பட்டு, மூக்கைப்பிடிச்சு முகத்தை அஷ்டகோணலா வச்சுக்கிட்டு
ஒரு நாலைந்து நாள் குடிச்சேன். அதற்கு பிறகு காலையில எழுதிருக்கும்போதே, அம்மாவிடம், “நீ, முட்டைப்பாலை
கொடுத்தா, குடிச்சுட்டு நான் வாந்தி எடுத்துவிடுவேன்னு பிட்டை
எல்லாம் போட்டு, அழுது ஆர்பாட்டம் பண்ணி, அதிலிருந்து எஸ்கேப் ஆனேன். ஆனா, எங்கம்மாவுக்கு பேராசை, எப்படியாவது என்னை ஒரு பயில்வானாக ஆக்கிப் பார்க்கணும்னு. முட்டைப்பால் தான்
சரி வர மாட்டேங்குது, அதனால முட்டை ஆம்லெட்டா போட்டுக்கொடுத்து
உடம்பைத் தேத்திடணும்னு நினைச்சுக்கிட்டு, தினமும் எனக்கு ஆம்லெட்
போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பாருங்க அந்த முட்டைப்பால் தான் வாய்க்கு விளங்களையே
தவிர, ஆம்லெட் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதனால நானும் முட்டையை
சாப்பிட ஆரம்பிச்சேன். இது தான் சைவ உணவை சாப்பிட்டுக்கிட்டு இருந்த நான் முட்டையை
சாப்பிட ஆரம்பிச்ச கதை. என்னடா, இவன் முட்டை சாப்பிடுறதுக்கு
என்னமா ஒரு கதை விடுறான் பாருன்னு நினைக்காதீங்க. ஏன்னா, அம்புட்டும்
நெசம். (சின்ன வயசுல நடந்த சில விஷயங்கள் நம்மளால என்னைக்குமே மறக்க முடியாது. எனக்கும்
அப்படித்தான் இந்த முட்டைப் பால் குடிச்சது).
எனக்கு திருமணம் ஆனது.
நானோ முட்டையை தவிர வேற அசைவ உணவு எதுவும் சாப்பிடுறதில்லை. ஆனா எங்க
வீட்டு அம்மணியோ, “நடக்கிறது, ஊருவது, பறப்பது” இப்படி எதையுமே விட்டு வைக்கமாட்டாங்க. அதனால அவுங்க எப்பப்பார்த்தாலும்
முட்டை சாப்பிடுறீங்க, ஆனா அதிலேருந்து வர்ற கோழியை மட்டும் ஏங்க
சாப்பிட மாட்டேங்குறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நீங்க இனிமே சைவம்னு சொல்லாதீங்கன்னு
வேற சொல்லுவாங்க. நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் போனா, நான் சைவங்க
அப்படின்னு சொல்லுவேன். உடனே, வீட்டு அம்மணி, அவரு சைவம் தாங்க, ஆனா முட்டையெல்லாம் நல்லா சாப்பிடுவாருன்னு
போட்டுவிடுவாங்க. அப்ப அங்க இருக்கும் என்னைய
மாதிரி ஒன்றிரண்டு சைவ ஆட்கள், முட்டையை இப்ப சைவத்துல சேர்த்துட்டாங்கன்னு
சொல்லி, மத்தவங்களோட கோபத்தை கிளப்பி விடுவாங்க.
பசுவிலிருந்து தானே பால் கிடைக்குது, அப்ப பாலை சைவம் தானேன்னு
சொல்றோம். கோழியிலிருந்து கிடைக்கும் முட்டையை மட்டும் ஏன் அசைவம்னு சொல்றோம்னு நான்
யோசிச்சதுண்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராஜேஷ்குமார் எழுதின ஒரு நாவலை படிக்க நேர்ந்தது.
அப்ப அதில அவரு கோழி முட்டை சைவம் தான் சொல்லியிருந்தாரு. எப்படின்னா, பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பு வரை, முட்டை அசைவமாக தான் இருந்தது. காரணம் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில்
எதிர்கால குஞ்சு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு முட்டைகளை உற்பத்தி செய்தார்கள்.
ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் முட்டை என்பது ஓர் உணவுப் பொருளாக மட்டுமே
உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உள்ளே உயிர் இல்லாத முட்டைகள்
தான் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் முட்டை சைவமே என்று சொல்லியிருந்தார்.
ஒரு பெரிய எழுத்தாளர், இதனைப் பற்றி கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணாம எழுதியிருக்க மாட்டார், அதனால முட்டை சைவம் தான்னு சொல்லிக்கலாம்.
10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை
எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு. அவரு வந்து கூப்பிடறதுக்கு ஐந்து நிமிடம்
முன்னாடி, சொல்லிவச்ச மாதிரி என்னோட மற்ற நண்பர்கள் எல்லாரும்
வரிசையா வர ஆரம்பிச்சாங்க. இவுங்க எல்லாம் லேட்டா வருவாங்கன்னு நினைச்சா, எல்லோரும் சீக்கிரமாகவே வந்துட்டாங்களே, நாம நினைச்சது
நடக்கலையேன்னு எனக்கு வருத்தமாப்போச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது, கிருஷ்ணா என்னைய நம்பாம, எல்லோருக்கும் போன் போட்டு
கொஞ்சம் சீக்கிரமாக வர சொல்லியிருக்காருன்னு. அப்புறம் நாங்க எல்லோரும் மேல போனோம்.
அப்பத்தான் நான் போன பதிவுல சொன்ன காட்சியை எடுத்து முடிச்சிருந்ததுனால, இயக்குனர் கொஞ்சம் பிரேக் விட்டிருந்தாரு. எங்களையெல்லாம் பார்த்த இயக்குனர், நடிகர் விஜய் கிட்ட, சார் இவுங்க தான் நம்ம படத்துல
நடிக்கிற அந்த “batchelor team” அப்படின்னாரு. உடனே, விஜய்யும் எங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. ஒரு ரெண்டு நிமிஷம் தான் எங்களோடு பேசியிருப்பாரு, அதுக்குள்ள அவரோட மேக்கப் மேன் வந்து அவரை கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அப்பத்தான்
ஒருத்தரை நான் பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு, ஆனா சரியா அடையாளம் தெரியலை. பக்கத்துல இருந்த இன்னொரு நண்பரிடம், அவரை காமிச்சு, “ஏங்க இவரு யாருங்க, இவரை எங்கேயோ நான் பார்த்திருக்கேன்னு சொன்னேன்”. உடனே அந்த நண்பரும், “அட! இவரை தெரியலையா, இவரு தான் யூடியூப் புகழ் சாம்
ஆண்டர்சன் அப்படின்னாரு. உடனே எனக்கு நல்லா நியாபகம் வந்துடுச்சு. கொஞ்ச மாசத்துக்கு
முன்னாடி தான், “அது இது எது” ன்னு ஒரு டிவி நிகழ்ச்சியை யூடியூப்ல
பார்த்தேன்.
அதுக்கு பிறகு தான் இவர் நடிச்ச அந்த யூடியூப் மெகா ஹிட் திரைப்படமான “ராசாத்தி”யை
பார்த்தேன். அதிலிருந்து இவரோட பரம விசிறியாயிட்டேன். எப்பவெல்லாம் எனக்கு மனசு ரொம்ப
கஷ்டமா இருக்குதோ, அப்பவெல்லாம் இவர் அந்த படத்துல நடிச்ச நடனத்தையும், பவர் ஸ்டாரோட பேட்டியையும் யூடியூப்ல பார்ப்பேன்.
நண்பர்களே, நீங்கள் மற்ற காணொளியை பார்க்கலைன்னாலும் பாராவாயில்லை, மேலே உள்ள இந்த காணொளியை மட்டுமாவது பாருங்க. "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்".
நானும் என் நண்பரும் இவரைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கும்போது தான், இயக்குனர், சாம் ஆண்டர்சனை கூட்டிக்கிட்டு வந்து, எங்களிடம் "சார் யாருன்னு தெரியுமான்னு" கேட்டாரு. என்னோட நண்பரும்
சாம் ஆண்டர்சன் சாரை தெரியாம இருக்குமா அப்படின்னாரு. இவரை எத்தனை தடவை நாங்க யூடியூப்ல
பார்த்திருக்கோம், அப்படின்னேன். என் நண்பரும், "என்ன சார் நீங்க, அன்னைக்கு அந்த அது இது எது
நிகழ்ச்சியில, கடைசி வரைக்கும் நீங்க நடிச்ச படத்துல இடம்பெற்ற
வசனத்தை சொல்லவேயில்லையே" அப்படின்னாரு. அவரும், எனக்கு
மறந்துபோச்சுங்க, அதனால தான் அன்னைக்கு சொல்ல முடியாம போச்சுன்னு
சொன்னாரு. நான் இவரை கொஞ்சம் ஓட்டலாம்னு முடிவு பண்ணி,
"சார், அன்னைக்கு தான் உங்களுக்கு மறந்து போயிருக்கும், இன்னைக்கு உங்களோட பரம ரசிகர்களின் விருப்பத்திற்காக அந்த வசனத்தை கொஞ்சம்
சொல்லுங்களேன்னு" சொன்னேன். உடனே, அவர் ரொம்ப சீரியஸா, "ஏங்க, உண்மையிலேயே எனக்கு நியாபகம் இல்லைங்க.
ரொம்ப சாரிங்க" அப்படின்னாரு. இதையெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்துக்கிட்டு இருந்த இயக்குனருக்கு ஒரே ஆச்சிரியம்.
அவர் கிட்ட, "பாருங்க உங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள்
இருக்காங்க" அப்படின்னு சொன்னாரு. ஆனா, எங்களுக்கு இல்ல
தெரியும் நாங்க அவருக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள்னு.
அந்த புகழ் பெற்ற வசனம் இது தான்,
எனக்கு சாம் ஆண்டர்சன் எப்படி இங்க
வந்தாரு, அவருக்கு
என்ன ரோல்ன்னு ஒரே குழப்பம். உடனே கிருஷ்ணாவிடம் போய், இவர் என்னவாக
நடிக்கிறாருன்னு கேட்டேன். அவர் வந்து அமலாபாலுக்கு கணவராக நடிக்கிறாருன்னு சொன்னாரு.
அவர் இன்னைக்கு தான் வந்தாரான்னு கேட்டேன். அவர் ஏற்கனவே வேற ஒரு நிகழ்ச்சிக்காக மெல்போர்ன்
வந்திருந்தாரு, இந்த படத்துல நடிக்கிறதுக்காக இன்னைக்கு சிட்னி
வந்திருக்காருன்னு சொன்னாரு. நீங்க படத்துல பார்த்தீங்கன்னா,
விஜய், அவரிடம் தேங்க்யு சாம், எங்களுக்காக
ஆஸ்திரேலியா வரைக்கும் வந்ததுக்குன்னு சொல்லுவாரு, அதுக்கு அவர்
ஆஸ்திரேலியாவில சூட்டிங் நடந்ததுனால ஓகே, இந்தியாவ இருந்தா கஷ்டமா
இருக்கும் அப்படின்னு சொல்லுவாரு. அந்த வசனத்தோட உண்மையான அர்த்தம், நான் மேல சொன்னது தான். அவர் மெல்பர்ன்ல இருந்ததுனால, அவரை சிட்னிக்கு வரவழைத்து அந்த காட்சியை எடுத்திருக்காங்க.
அதற்கு பிறகு, இயக்குனர் எங்களையெல்லாம்
கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. அந்த காட்சியை எப்படியெல்லாம்
நகைச்சுவையா எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன். என்ன, அந்த
காட்சிக்கு கத்திரி போட்டு, ரொம்பவும் சுருக்கிட்டாங்க. இந்த
காட்சி மட்டுமில்ல, அந்த உணவகக் காட்சி, கடைசில அமலாபால் எனக்கு திருமணம் ஆயிடுச்சுன்னு சொல்ற காட்சி இப்படி மூணு
காட்சியையும் சுருக்கிட்டாங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
போன பதிவுல நான் ஒண்ணு சொல்லாம
விட்டுட்டேன். அதாவது, அன்னைக்கு எடுத்த அந்த ஜாகிங் காட்சி முழுமையா முடியலை. இயக்குனர், எங்ககிட்ட, இந்த காட்சியோட continuityக்காக நீங்க இன்னொரு நாள் வர வேண்டியிருக்கும்ன்னு சொன்னாரு. அப்படின்னா
இன்னும் ரெண்டு நாள் வரனுமான்னு கேட்டோம். ஆமா, இந்த
காட்சியும், அப்புறம் நடன வகுப்பு காட்சியும் தான்
பாக்கியிருக்கு, அதனால இன்னும் ரெண்டு நாள் வந்தா போதும்ன்னு
சொன்னாரு. உடனே, நாங்க ஐயா,
எப்படியாவது சனி,ஞாயிறாப்பார்த்து சூட்டிங் வைங்கன்னு
கெஞ்சாத குறையா அவரிடம் கேட்டோம். (படத்துல தோன்றுகிற இந்த ஊர் ஆங்கில கலைஞர்களுக்கு
மட்டும் குறைந்தது ஒரு நாளைக்கு $100 சம்பளம். ஆனா
எங்களுக்கோ இந்த படத்துல நடிக்கிறதுக்கு சம்பளம் கிடையாது. போதாக்குறைக்கு ஆபிஸுக்கு ரெண்டு நாள் லீவு வேற போட்டாச்சு, இதுல இன்னமும் லீவு போடுகிற மாதிரியாச்சுன்னா என்னங்க பண்றது. அதனாலத்தான்
இப்படி ஒரு பிட்டை போட்டோம்). இயக்குனரும் முடிந்த வரையில் லீவு நாள்ல
படப்பிடிப்பு வைக்கிறோம்னு சொன்னாரு.
மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ்
போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள்
காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை
எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த
இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி,tshirt,phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ். நான் மட்டும் சனிக்கிழமை காலையில
அந்த marickville இடத்துக்கு போனேன். வீட்டு அம்மணிக்கு முதநாள்
எல்லோரடையும் போட்டோ எடுத்துக்கிட்டதே போதும் போல, அதனால
அவுங்க நாங்க வரலைன்னு சொல்லிட்டாங்க. நான் சரியா 10 மணிக்கு போய் சேர்ந்தேன். அந்த
இடத்துல மேல வேற ஒரு காட்சி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த காட்சி என்னன்னா, அமலாபால், விஜய் கிட்டேயும்,
சந்தானத்து கிட்டேயும் மறுநாள் நீங்க ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு
வந்துடுங்கன்னு சொல்ற காட்சி. நான் மேல போய் கொஞ்ச நேரம் நின்னு பார்த்துக்கிட்டு
இருந்துட்டு, கீழே வந்துட்டேன். அப்பத்தான் மாடிப்
படிக்கட்டுல நம்ம கிருஷ்ணா ரொம்ப பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாரு. நான்
அவர்கிட்ட, ஏங்க இன்னைக்காவது அந்த நடனவகுப்பு காட்சியை
எடுத்துடூவீங்க இல்லன்னு கேட்டேன் (ஏன்னா, இந்த காட்சியை
எடுக்கிறேன்னு சொல்லி தான் அன்னைக்கு நாங்க மூணு மணிநேரம் வெட்டியா காத்துக்கிட்டு
இருந்து, கடைசில எடுக்காம திரும்பி போனோம்). கண்டிப்பா
எடுத்துடலாம் சார். இன்னைக்கு தான் என் வயித்துல பீர் வார்த்த மாதிரி இருக்கு
சார். இப்பத்தான் ஒழுங்கா ஷெட்யூல் படி ஒழுங்கா சூட்டிங் போயிக்கிட்டு இருக்கு.
அதனால எப்படியும் இன்னைக்கு நடன வகுப்பு காட்சி முடிஞ்சுடும் ஆமா, எங்க மற்றவங்க எல்லாம் காணோம் அப்படின்னு கேட்டாரு. அப்ப என் பக்கத்துல வேற
ஒரு நண்பர் மட்டும் தான் நின்னுக்கிட்டு இருந்தாரு. நான் உடனே, ஏங்க, நீங்க என்னைக்கு தான் சொன்ன நேரத்துக்கு
சூட்டிங் ஆரம்பிச்சிருக்கீங்க? 10 மணின்னு நீங்க சொன்னதுனால, எல்லோரும் 11 மணிக்கு மேல தான் வருவாங்கன்னு கொஞ்சம் அடிச்சு விட்டேன்.
ஐய்யையோ, 11 மணிக்கா!! இன்னும் அரை மணி நேரத்துல உங்க
காட்சியை எடுக்க ஆரம்பிச்சுடுவோம், அதனால கொஞ்சம்
எல்லாரையும் சீக்கிரம் வரச்சொல்லுங்க. இல்லன்னா விஜய் சார்,
சந்தானம் சார், அமாலாபால் மேடம்ன்னு எல்லோரும் காத்துக்கிட்டு
இருக்கிற மாதிரியாயிடும்னு புலம்பினாரு. அவர் புலம்பியதை பார்க்க எனக்கு ரொம்ப
சந்தோஷம். எப்பவுமே நாங்க தான் மணிக்கணக்கா காத்துக்கிட்டு இருப்போம். இன்னைக்கு
எங்களுக்காக இவுங்க காத்துக்கிட்டு இருக்க போறாங்களேன்னு மனசு பேயாட்டாம்
போட்டுச்சு. ஒப்புக்கு, அவரிடம் நான் போன் பண்ணி, சீக்கிரம் வர சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் அவர் அங்கிருந்து நகர்ந்து
போனாரு. நானும் அந்த இன்னொரு நண்பரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப
இந்தியாவிலிருந்து வந்திருந்த தயாரிப்பு மேலாளர் (production manager) எங்க கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம் அவர் எங்களை நீங்க
எத்தனை வருஷமா இருக்கீங்க? எல்லாருக்கும் சொந்த வீடா? அப்படி, இப்படின்னு கேள்வி மேல கேள்வி கேக்க
ஆரம்பிச்சாரு. நான் இவரோட பேசி, நம்ம சினிமா அறிவை கொஞ்சம்
வளர்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, மனுஷன் எங்களை தோண்டி
துருவிட்டாரு. அடடா! இந்தாள்கிட்ட போய் மாட்டிக்கிட்டோமேன்னு நொந்து போயிட்டேன். அப்பத்தான்
ஒரு உதவியாளர் அவரிடம் வந்து,“அண்ணே, ஹீரோயினுக்கு சிக்கன் பிரியாணி வாங்கணும், காசு
கொடுங்கன்னு” கேட்டாரு. உடனே, அவர்,
“ஏண்டா அவுங்க சிக்கன் இல்லாம சாப்பிட மாட்டாங்கலாமா?. ஒரு
சிக்கன் பிரியாணி பதினெட்டு டாலர் ஆகுது, டெய்லி எல்லாம்
வாங்கி கட்டுப்படியாகாது" அப்படின்னாரு. காசு கேட்டவரோ, “இல்லன்னே, வந்து.. .. அப்படின்னு" இழுத்தாரு.
அதுக்கு அவரும், “வெளிநாட்டில எல்லாம் வந்து, எனக்கு அது வேணும், இது வேணும்னு கேக்கிறது எல்லாம்
ஓவர். அதனால இன்னைக்கு மத்தியானம் என்ன சாப்பாடு வருதோ,
அதையே கொடு, அவுங்க இல்ல சிக்கன் பிரியாணி தான் வேணும்னு
கேட்டா, அப்ப போய் வாங்கி வான்னு” சொல்லி இருபது டாலரை கொடுத்தாரு.
இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரே ஷாக் ஆயிடுச்சு. ஆஹா, ஹீரோயினுக்கே இந்த நிலமையா!! இருபது
டாலருக்கு, இப்படி கணக்கு பார்க்கிறங்களேன்னு நினைச்சுக்கிட்டு, என்னோட நண்பரை பார்த்தேன். அவரும் என்னைய பார்த்து நக்கலா சிரிச்சாரு. நான்
அந்த தயாரிப்பு மேலாளர் கிட்ட, “ஏன்னே,
தினமும் மதியம் அசைவ சாப்பாடு தானே உங்க எல்லாருக்கும்” அப்படின்னு கேட்டேன். அதற்கு
அவர், என்னங்க விளையாடுறீங்களா, ஏற்கனவே
தினமும் இரவு அசைவ சாப்பாடு, இதுல மதிய சாப்பாடும் அசைவ சாப்பாடுன்னா
எப்படிங்க கட்டுப்படியாகும்னு திருப்பி கேட்டாரு. அப்ப நம்ம முத நாள் ஷூட்டிங்ல, ஜூஸ் கேட்டதுக்கு, தண்ணி கிடச்சதே பெருசு தான்னு, அப்புறம் என் மற்ற நண்பர்கள் கிட்ட எல்லாம் சொன்னேன்.
10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு.
அந்த நேரத்துக்கு என்னோட மற்ற நண்பர்கள் எல்லாம் வந்துட்டாங்களா, அப்புறம் யுடியூப் புகழ் நடிகரை சந்தித்ததை பற்றியெல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.
தலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம் ஆண்டர்சன்