Monday, November 17, 2014

கனவில் வந்த காந்தி(10)






என் கனவுல கொஞ்ச நாள் வரைக்கும் அனுஷ்கா, த்ரிஷா, ஹன்ஸிகா போன்றவர்கள் தான் வந்துக்கொண்டிருந்தார்கள். அப்ப அமலாபால் வரலையான்னு கேட்காதீங்க,அவுங்க எனக்கு உடன்பிறவாத தங்கச்சியாக்கும்


ஆனா எப்ப பதிவுலக நண்பர் மீசைக்கார கில்லர்ஜி அறிமுகம் ஆனாரோ, 



                                                                கில்லர்ஜி

அன்னையிலிருந்து இவுங்க எல்லாம் என் கனவுல வருவதே இல்லை. ஏன்னா, எல்லோருக்கும் அவரோட மீசையைப் பார்த்து பயமாம். இதை நான் சொல்லலை, அவுங்களே என்னோட கனவுல கடைசியா ஒரு தடவை வந்து இதை சொல்லிட்டு, நீங்க அவருக்கு நண்பராக இருக்கீங்க, அதனால உங்க கனவுலேயும் நாங்க வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. என்னடா இது, விஷயம் இவ்வளவு சீரியஸா இருக்கேன்னு கேட்டா, அவுங்க எல்லோரும் சொன்ன பதில் என்னன்னா, ஒரு நாள் அவுங்களும் அவரோட கனவுல வந்திருக்காங்க. ஆனா நம்ம நண்பர் சும்மா இருக்காமா, தன்னோட பால் வடியும்(?) முகத்தை அவுங்க கிட்ட காமிச்சிருக்காரு, அவ்வளவு தான், சின்னப்பசங்க பூச்சாண்டியைப் பார்த்து பயந்து போன மாதிரி அவுங்க எல்லாம் பயந்துட்டாங்களாம். அதனால அவரோட கனவுல இவுங்க தரிசனம் கொடுக்கிறதே இல்லையாம். இவரோட நண்பனாக இருக்கிற ஒரே காரணத்துக்காக, என் கனவுலேயும் இவுங்க வர மாட்டேன்னுட்டாங்க. என்ன கொடுமைங்க இது!!!....
.
இப்ப என்னடான்னா, நேத்து ராத்திரி, திடீர்னு கனவுல நம்ம மகாத்மா காந்தி வந்துட்டாரு. வந்தவரு என்னைய நலம்  விசாரிச்சுட்டு போயிருந்தாருன்னா பரவாயில்லை, அதை விட்டுட்டு கேள்விக்கணைகளையா தொடுத்து , அதுக்கு பதிலையும் வாங்கிக்கிட்டு தான் போனாரு. அப்ப போகும்போது, நான் முதல்ல உன் நண்பரோட கனவுல தான் வந்து, இந்த கேள்விகளை எல்லாம் கேட்டேன். உன் நண்பர் தான், உன்னோட கனவுலையும் வரச்சொல்லி என்னை அனுப்பினாருன்னு சொல்லிட்டு போனாரு.

முன்னாடியெல்லாம், நான் பாட்டுக்கு சிவனேன்னு, கனவுல வரவுங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு, நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்தேன். இப்ப கில்லர்ஜி, என்னடான்னா, மகாத்மா காந்தியை நம்ம கனவுக்கு அனுப்புராரு. காந்தி கனவுல வர்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய மனுஷன் கிடையாதுங்கோ!!!

சரி, காந்தி கனவுல வந்து என்ன கேள்வி எல்லாம் கேட்டாருன்னு கேக்கிறீங்களா? இதோ அவரோட கேள்விகளும், என்னோட பதில்களும்.


1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

இந்த ஆன்மா இதுவரை எடுத்த ஜென்மங்களே போதும். இனி வேறு ஒரு ஜென்மம் வேண்டாம். இறைவனின் காலடியில் இருப்பதே போதும்.

2. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன்.லஞ்சம் வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் நடு ரோட்டில் கசையடி கொடுப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்குவேன்.

3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்என்ன செய்வாய்?

இந்த சட்டத்திற்கு கண்டிப்பாக அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். ஏனென்றால், அவர்கள் இந்தியாவிற்கு வந்து லஞ்சத்தை கொடுத்து வேலைகளை முடித்துக்கொண்டு, சீக்கிரம் வெளிநாட்டுக்கு திரும்புவதிலேயே குறியாக அல்லவா இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் தண்டனை. லஞ்சம் கொடுத்து அவர்கள் மாட்டினால், அவர்களுக்கு கசையடியோடு, மீண்டும் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு விசாவை வழங்க மாட்டேன்.

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

முதியோர்களை அவரவர் பிள்ளைகள் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கத் தவறிய பிள்ளைகளைளின் வேலையை பறித்து விடுவேன். மீண்டும் அவர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை கவனிக்கும் வரை அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

அரசியலுக்கு வருபவர்கள் இனி தேர்வு எழுதி தான் வர வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்.

6. மதிப்பெண் தவறெனமேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?

மதிப்பெண் முறையை ஒழித்து வெளிநாடுகளில் இருப்பது மாதிரி கிரேடு சிஸ்டத்தை கொண்டு வருவேன்.


7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

விஞ்ஞானிகள் அனைவரும் சிறந்த முறையில் பாதுக்காகப்படுவர்.

8. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

கண்டிப்பாக செய்ய வேண்டும். அவ்வாறு மறுக்கும் பட்சத்தில், மக்களே அந்த ஆட்சியாளர்களை கீழே இறக்கிவிடுவர்.

9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பட்ஜெட் போட்டுத்தான் குடும்பம் நடத்துவார்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?

முதல் கேள்விக்கான பதிலே, இந்த கேள்விக்கான பதில் ஆகும்.

நான் சொன்ன பதில்கள் எல்லாம் காந்திக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சாம், அதனால, நீ உன் நண்பர்கள் 10 பேரை சொல்லு, நான் அவுங்க கனவுல போய், இந்த கேள்விகளையெல்லாம் கேக்கிறேன்னு கேட்டாரு. எனக்கு மத்தவங்களை மாட்டி விடுறதுல இஷ்டமே இல்லை. பாவம் அவுங்களாவது நிம்மதியா கனவு கண்டுக்கிட்டு தூங்கட்டும், காந்தி போய் அவுங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு, நான் யார் பேரையும் காந்திக்கிட்ட சொல்லலை.

என் கனவுல காந்தி வந்தே ஆகணும்னு நீங்க நினைச்சீங்கன்னா, நான் ஒரு மந்திரம் சொல்லித்தரேன், அதை சொல்லிட்டு நீங்க படுத்தீங்கன்னா, கண்டிப்பா கனவுல காந்தி வருவாருங்கோ...

“மீசைக்கார நண்பா, என் கனவுலேயும் காந்தியை வரச்சொல்”

இதுதாங்க அந்த மந்திரம்...


33 comments:

  1. ஆஹா, ரெண்டுநாள் வேணும், மூணுநாள் வேணும்னு ப்ரூடா விட்டுப்புட்டு காட்டு காட்டுனு காட்டிப்புட்டீங்களே.... நான் பூச்சாண்டியா ? கிடைக்கும் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அப்பத்தெரியும் கில்லர்ஜியைப்பத்தி நான் நினைச்சேன் தேவகோட்டை காற்று காரைக்குடி பக்கமா வந்ததுதான் காரணம் இவ்வளவு அழகாக எழுதியதற்க்கு.... 3 வது பதில் உங்களைப்பாதித்தாலும் உண்மையாக எழுதி ''உண்மையானவன்'' அப்படீனு நிரூபிச்சுட்டீங்க... சபாஷ்.

    உண்மையிலேயே ஸூப்பர் நண்பா வாழ்த்துக்கள்.
    அதுசரி என்னோட பெயரை ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யாதீங்க தெய்வ குற்றமாகிப்போயிடும். இப்படி எழுதுங்க - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பெரிய மீசையை வச்சுக்கிட்டு பயமுறுத்துனா, பின்ன உங்களை என்ன சொல்லுவாங்க (வேற ஒண்ணும் இல்ல, எனக்கு மீசை உங்களை மாதிரி நல்லா புசு,பூசுன்னு வளரலையேன்னு ஆதங்கம் தான். ஹி..ஹி...)

      அப்புறம், யானைக்கு ஒரு காலம் வந்தால், பபூனைக்கு ஒரு காலம் வரும்னு சொல்றீங்களா!!!

      உங்க பெயரை திருத்திவிட்டேன் நண்பரே.

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. என்னது அனுஷ்கா கனவுல வருவரா??? கில்லர்ஜி அண்ணா பதிவு தொடங்கியவுடன் தான் அம்பிகள் யாரு உண்மையானவன் கிற பேர்ல இருக்கிற ரெமோ யாருன்னு தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்போட்டு தாங்கியமைக்கு 1000 நன்றிகள்

      Delete
    2. அடடா, எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த ரெமோவை உங்களுக்கு தெரியப்படுத்திவிட்டேனே..

      கில்லர்ஜி - நீங்க ரெமோவா, அம்பியான்னு நான் பார்க்கத்தானே போறேன்..

      Delete
  3. ஆனாலும் சுவையான பதில்கள்!! வாழ்த்துகள் சகோ!!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  4. சத்திய சோதனை செய்தவரிடமே நீங்கள் உண்மையானவன் என்பதை நிரூபித்து விட்டீர்களே :)

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

      Delete
  5. உண்மையானவனின் பதில்கள் உண்மையாகவே சிறப்பாக இருந்தன! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  6. ஆ....! அனுஷ்காவா? எங்கே? எங்கே?

    சுவையான பதில்கள். நாடு இப்படி இருக்கக் கூடாதா என்று ஆதங்கம் தெரியும் பதில்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதே ஆதங்கத்தில் தான், இந்த பதில்களும் என்னுள் உதித்தன.
      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. காந்தி கனவுலவர்றதுக்கு முன்னால யார்யாரோவெல்லாம் வந்திருக்காங்களே...ஹஹஹா....

    யதார்த்தமான பதில்கள். சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஆனா, இப்ப அந்த யார்யாரோவெல்லாம் வரமாட்டேங்கிறாங்களே.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. லஞ்சத்துக்கு எதிராகவும் முதியோருக்கு ஆதரவாகவும் இருக்கீங்க.. சூப்பர் சார்...

    //பாவம் அவுங்களாவது நிம்மதியா கனவு கண்டுக்கிட்டு தூங்கட்டும், காந்தி போய் அவுங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு//

    காந்தியும் பாவம், எத்தனை பேர் கனவில் வருவார்?

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஸ்பை. காந்தி பாவம், அவருக்கு ரெஸ்ட் கொடுக்கணும் இல்ல.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை.

      Delete
  9. தங்களின் பதில்களை ரசித்தேன். இணைப்பில் என்னையும் சேர்த்திருந்தார் கில்லர்ஜி. நம் அனைவரையும் ஒன்றுசேர்க்க தனி முயற்சி எடுத்துள்ளார். தொடருவோம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தொடருவோம் ஐயா.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

  10. யோவ் கில்லர்ஜி சிக்கிரம் ஷேவ் பண்ணுய்யா இல்லைன்னா உங்க கனவுல காந்திஜி வந்த மாதிரி மோடிஜி வந்துரப் போகிறார் அவரும் தொடர் பதிவு எழுத சொல்ப்ப போறாரு.

    இப்பபாரும் எங்க சொக்கன் கனவுல வந்த அனுஷ்கா த்ரிஷா, ஹன்ஸிகா வராம போயிட்டாங்க.. இந்த சின்ன வயசுல சொக்கனுக்கும் எனக்கும் ஏன் இப்படி பெரிய தண்டனை

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ மதுரைத் தமிழா, நீங்க புதுசா வேற எடுத்துக்கொடுக்காதீங்க. நேற்று தான் மோடி, சிட்னியில "இந்தியாவில் இருக்கும் பழைய சட்டங்களை எல்லாம் நீக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. அப்புறம் மோடிக்கு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு ஐடியா கொடுங்கன்னு யாராவது தொடர் பதிவை எழுத ஆரம்பிச்சுடப்போறாங்க.

      நீங்க சைக்கிள் கேப்ல நல்லாவே உள்ள சிந்து பாடுறீங்க.

      Delete
    2. தமிழா ஹஹஹாஹஹ்ஹ்! அதானே!

      சொக்கன் நண்பரே ஐயையோ மோடி அடுத்ததா...வேண்டாம்பா தொடர் ஓட்டம் மூச்சு வாங்குது...கண்ணக்கட்டுது....விடு ஜூட்

      Delete
  11. பதிவும் பதிலும் அருமை சொக்கன்...பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  12. மீசைக்காரரால,உங்க ஆசை கனவெல்லாம் போச்சா?

    ReplyDelete
    Replies
    1. ஆமா ராஜ் சார், அவரால என்னுடைய ஆசை கனவெல்லாம் திரும்ப வரமாட்டேங்குது.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ் சார்.

      Delete
  13. மீசைக் கார நண்பரால் கனவெல்லாம் கலைந்து போய்விட்டது போல் தெரிகிறது
    அருமையான பதில்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அந்த சோகக்கதையை ஏன் கேட்கிறீர்கள் ஜெயக்குமார் சார்.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  14. நண்பர் திரு KILLERGEE அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அருமையாய் பதில் அளித்துள்ளீர்கள். என்னையும் எழுதப் பணித்துள்ளார். கூடிய விரைவில் இந்த தொடர் ஓட்டத்தில் பங்கு பெறுவேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      சீக்கிரம் எழுதுங்கள். தங்களுடைய பதில்களையும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

      Delete
  15. யதார்த்தமான ரசிக்க வைக்கும் பதில்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      Delete
  16. நண்பரே! ஹஹஹஹ ச பாவம்க நீங்க.....,, அந்தக் கொடுவா மீசக் காரர என்ன செய்யலாம் ஹஹஹ...

    அழகான பதில்கள்! கில்லர்ஜி ஃப்ரெண்டுனு தெரியுது அவரு ஊர் காத்து (அபுதாபி) உங்களுக்கும் அடிச்சுருக்குனு 2 வது பதில் சொல்லுது....ஹஹ

    3 வது பதில் சுஜாதாவை நினைவு படுத்தியது..........

    வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அங்கு நன்றாக இருப்பார்கள் ஆனா இங்க கஸ்டம்ஸ் தாண்டிட்டா இந்திய புத்திக்கு ஆளாகிடுவாங்க இல்ல ஆளாக வேண்டியச் சூழல்...ம்ம்ம்

    அருமையான பதில்கள் நண்பரே! காந்தி இந்தியாவைப் பார்த்து நொந்திருக்கும் வேளையில் ...
    தொடர் சுற்றைப் பார்க்கும் போது எத்தனை நல்ல ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்து காந்திஜி மகிழ்ந்திருப்பார் இல்லையோ!!!

    அப்படியாவது மகாத்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கில்லர்ஜி க்கு ஜே!

    ReplyDelete