Thursday, March 26, 2020

ஆஸ்திரேலியாவில் கொரோனா படுத்தும் பாடு






இந்த தலைப்பை பார்த்தவுடன், ஆஸ்திரேலியாவில் கொரோனா ரொம்பவும் அதிகமாயிடுச்சோன்னு நினைக்கத் தோணும். அது ஒரு வகையில உண்மை தான். ஏனென்றால் நேற்றைய நிலவரப்படி 2423 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் எங்கள் மாநிலத்தில் (NSW) தான் அதிகபட்சமாக 1029 பேருக்கு இருக்கிறது. ஆனால் நான் சொல்ல வருவது என்னன்னா இந்த கொரோனாவைக்கண்டு மக்கள் அடிக்கும் அலப்பறைகளைப் பற்றி தான். அலப்பறைகள் என்று கூற கூடாது, அவர்கள் பயத்தினால் செய்யும் செயல்கள் என்று கூறலாம்.


3 வரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கைப்பேசியில் அழைத்து, உதயாவிலிருந்து (இங்கு இருக்கும் ஒரு பெரிய இந்திய மளிகை சாமன் கடை) எல்லோரும் சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி எல்லாம் நாலைந்து மூட்டைகளாக  வாங்கிக்கிட்டு போறாங்க. இந்த கடையில நிறைய பொருட்கள் தீர்ந்து போச்சுன்னு சொன்னாரு. அப்ப நான் அதை பெருசா எடுத்துக்கலை. அதுக்கு பிறகு வந்த நாட்களில், நம்ம மக்கள் இந்தியக்கடைகளுக்கு படை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி இவர்கள் படை எடுத்ததுனால கடைகளில் மூன்று மாதத்திற்கு நடக்க வேண்டிய வியாபாரமானது வெறும் ஓரிரண்டு வாரங்களிலேயே நடந்து முடிந்து விட்டது. அதிலும் இட்லி அரிசி, சாப்பாட்டு அரிசி, உளுந்து மற்றும் துவரம் பருப்புகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இன்னமும் அந்த பொருட்கள் இங்கு கிடைத்தபாடில்லை. 







சரி, நம்மவர்கள் தான் இப்படி என்றால், இந்த ஊர் மக்களும், நம் மக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதைப்போல் அவர்களும் பல்பொருள் அங்காடிகளில் எல்லாம் டாய்லெட் ரோல், tissues, பாஸ்தா, நூடுல்ஸ் என்று சகலத்தையும் காலி செய்து விட்டார்கள். இதில் மிக பெரிய கொடுமை என்னவென்றால், இந்த டாய்லெட் ரோலுக்கு வந்த வாழ்வு தான். டாய்லெட் ரோலுக்கு கடைகளுக்குள்ளேயே அடிதடி எல்லாம் நடந்தது வேற விஷயம். ஒரு சில கடைகளை காவல் துறையினரின் கண்காணிப்பில் நடத்தினார்கள். பல்பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் சொன்னது என்னவென்றால்,நான்கைந்து palletகளில் இந்த டாய்லெட் ரோல் வரும், நாங்கள் அதை முழுமையாக எடுத்து வைத்த ஒரு அரை மணி நேரத்திலேயே அவ்வளவும் வித்து போய்விடும், அந்த அளவிற்கு இந்த டாய்லெட் ரோல் மிகப்பெரிய பொக்கிஷமாகிவிட்டது. எந்த ஒரு பல்பொருள் அங்காடிக்கு போனாலும், டாய்லெட் ரோல், tissues இருக்கும் இடம் காலியாகத்தான் இருக்கிறது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெரிய பெரிய மால்களில் இருக்கும் கழிப்பறைகளில் இருந்து இந்த டாய்லெட் ரோல்களை மக்கள் திருடிக்கொண்டு போவது தான். பணம் பொருட்களை கொள்ளையடிக்கும் காலம் போய், டாய்லெட் ரோல்களை திருடும் கட்டத்திற்கு ஆஸ்திரேலியா வந்து விட்டது என்பது தான் மிகப்பெரிய கொடுமையே. இந்த டாய்லெட் ரோல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, அதனை தயாரிக்கும் உள்ளூர் நிறுவனம் முழு மூச்சாக 24 மணிநேரமும் அதனை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் இன்னும் இந்த டாய்லெட் ரோல் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எப்படி நம் இந்திய கடைகளில் தென்னிந்திய அரிசி, பருப்புகள் தட்டுப்பாடாக இருக்கிறதோ, அதே மாதிரி பல்பொருள் அங்காடிகளில் டாய்லெட் ரோல், tissues, பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவைகள் இன்னும் தட்டுப்பாடுடன் தான் இருக்கின்றன. இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால், காலை 7மணிக்கு திறக்கும் அங்காடிகளில், மக்கள் போய் அத்தியாவச பொருட்கள் எல்லாவற்றையும்  எடுத்து விடுவதால், பின்னால் வரும் முதியவர்களுக்கு ஒன்றும் கிடக்காமல் போய்விடுகிறது. அதனால் அந்த அங்காடிகள் காலை 7மணி முதல் 8மணி வரை முதியவர்களுக்கான நேரம் என்று அறிவித்து விட்டது.



இன்னும் ஒரு ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், உறைந்த அசைவ உணவுகளுக்கும் (Frozen Meats) தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இந்த பொருட்களை வாங்க வருபவர்கள் எல்லோரும் அளவுக்கு அதிகமாகவே வாங்கிச் செல்கிறார்கள். எனக்கு என்ன புரியலைன்னா, மற்ற பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த உறைந்த உணவுகளை எவ்வாறு சேமிக்க முடியும் என்பது தான். ஆனால் அதற்கும் விடை கிடைத்து விட்டது. அது என்னவென்றால், எப்படி மளிகைச் சாமான்களுக்கு ஒரு தற்காலிக தேவை உருவானதோ, அது போல் இந்த குளிர் சாதன கருவிகளுக்கும் தேவை அதிகரித்து விட்டது. உறைந்த பொருட்களையெல்லாம் சேமித்து வைப்பதற்காகவே இந்த கருவிகளையும் மக்கள் வாங்க ஆரம்பித்து, அந்த கருவிகளுக்கும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டார்கள்.


இப்பொழுதும் மாலை நேரத்திற்கு பின் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால் பிரட் வகையறாக்கள் கிடைப்பதில்லை.





இப்படி மளிகை சாமான்களை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்குவதைப்போல், சென்ற வாரம் இங்கு புகழ் பெற்ற bondai கடற்கரையில் மக்கள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். அந்த செய்தியானது ஒரு மிகப்பெரிய விவாதமாகி, உலகளவில் ஆஸ்திரேலியாவிற்கு இருக்கும் பெயரை களங்கப்படுத்தி விட்டது.  

19 comments:

  1. என்னது எங்கும் கூட்டமா...? ம்ஹிம்...

    இந்த ஆண்டின் முதல் பதிவோடு மேலும் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி டிடி

      Delete
  2. விடயம் மோசமாகத்தான் இருக்கிறது குடும்பத்தோடு கவனமாக இருங்க நண்பரே... இறைவன் பாதுகாக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி நண்பரே. தாங்களும் கவனமாக இருங்கள்.

      Delete
  3. கவனமாக இருக்கவும் தோழர்
    வருத்தம்தான் ...
    இங்கும் நிலை ரொம்பவே மோசம்
    ஒரு டிக்கிங் டைம் பாம் மேலே உட்கார்ந்திருப்பது போல இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி நண்பரே. தாங்களும் கவனமாக இருங்கள்.

      Delete
  4. மனிதர்கள் தங்களது சுய ரூபத்தினை காண்பித்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. எல்லா ஊர்களிலும் இது போன்று பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைக்கிறார்கள் - அடுத்தவர்களுக்கும் தேவை என்பதை உணர்வதே இல்லை.

    டாய்லெட் பேப்பருக்கும் அடிதடி - அடக் கொடுமையே!

    கவனமாக இருங்கள் நண்பரே. நலமே விளையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க. எல்லோரும் அடுத்தவர்களுக்கும் தேவை என்று உணர்ந்தால் கண்டிப்பாக பற்றாக்குறையே இருக்காது.

      தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி நண்பரே. தாங்களும் கவனமாக இருங்கள்.

      Delete
  5. பணம் பொருட்களை கொள்ளையடிக்கும் காலம் போய், டாய்லெட் ரோல்களை திருடும் கட்டத்திற்கு ஆஸ்திரேலியா வந்து விட்டது என்பது தான் மிகப்பெரிய கொடுமையே.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களைப் பதிவின் வழி சந்திக்கிறேன் நண்பரே
    மகிழ்ந்தேன்
    எச்சரிக்கையாக இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி நண்பரே. தாங்களும் கவனமாக இருங்கள்.

      Delete
  6. கவனமா இருங்க நீங்களும் குடும்பத்தாரும் .இங்கும் அதே பிரச்சினைதான் தனக்கு உரியதை மட்டுமின்றி அடுத்தவருக்குரியத்தையும் சேர்த்து வாங்கறாங்க :( நான் ஹாஸ்பிடல் வேலை என்பதால் கட்டாயம் வேலைக்கு போகணும் இங்கே பள்ளி பல்கலைக்கழகம் மூடியாச்சு .பத்திரமா பாதுகாப்பா இருங்க .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி சகோ. தாங்கள் தான் மிக முக்கியமாக கவனமாக இருக்க வேண்டும்.

      Delete
  7. டாய்லெட் பேபாப்ருக்கா இந்த அடிதடி?!!    மற்ற பொருட்கள் விற்றுப்போவது எங்கும் நடபபதுதான்.  கவனமாக இருங்கள்.  முடிந்தவரை தனித்திருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் நன்றி நண்பரே. தாங்களும் கவனமாக இருங்கள்.

      Delete
  8. வாழ்க்கைக்கான போராட்டம்! உண்மையில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் பயத்தினால் மனதில் ஏற்படும் அமைதியின்மை. எதைச் செய்வது சரி என்றெல்லாம் எண்ணத் தோன்றாது. ஆனாலும் கடற்கரையில் அத்தனை கூட்டம் எனும் போது, தத்தமது பாதுகாப்பு பற்றிய சந்தேகம் கூட அவர்கள் மனதில் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயம் தான்.

    ReplyDelete
  9. இந்தியாவில்தான் இதுபோல் ஒரேடியாய் வாங்கிக் குவித்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உண்டாக்குவார்கள் என்று நினைத்திருந்தேன். அங்கும் அப்படித்தானா? இதை உளவியல் அறிஞர்கள் Crowd psychology என்கிறார்கள். நமக்கும் செம்மறி ஆடுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது என்பது உண்மையாகிவிடும் போலுள்ளது.

    திரும்பவும் பதிவுலகம் வந்தது மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. ஆமாம் அங்கும் பொருட்களுக்கு அடிதடி என்று அறிந்தேன் எனது ஒரு கசின் அங்கு இருக்கிறார். கவனமாக இருங்க சகோ

    கீதா

    ReplyDelete
  11. ஆஹா ... கொரானோ வந்ததுதான் வந்தது நம்ம டாய்லெட் ரோல் ஐ "ரோல் மாடல்"லாக பிரபலபடுத்தி விட்டதே !! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete