Friday, April 19, 2019

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா?


வேண்டுமென்றே(?) பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்....

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்(!) 


மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் 


ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏந்திச் செல்லும்  நவீன எந்திரங்கள் 
சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்களின் அவல நிலை

அதிமுக நிர்வாகி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக (தயாராக) நின்று கொண்டிருக்கிறார்  


கண்முன்னே இருந்தும் குமரியில் காணாமல் போன 1000 மீனவர்கள் 

குமரியிலும், பட்டுக்கோட்டையிலும் பதிவான கள்ள ஓட்டுக்கள் 

12 comments:

 1. முதலில் ஜனநாயகம் உள்ளதா...? என்பதே சந்தேகம் தான்...

  ReplyDelete
 2. வியாபாரத்திற்காக எனது சொந்த வீட்டை விட்டு வேறு வீட்டில் இப்போது உள்ளேன்... ஆனால் பலரது குடும்பங்களில் - "ஒரே வீட்டில் வசிப்பவர்களில் ஒருசிலரின் பெயர்கள் மட்டும் திடீரென நீக்கப்படுவது எப்படி?" என்று தெரியவில்லை...

  இரண்டு மாதம் முன்பு இணையத்தில், எனது மற்றும் எனது துணைவியாரின் பெயர்கள் இல்லை... பிறகு முகாமில் எழுதிக் கொடுத்தோம்... இரு வாரம் முன்பு தான் புதிய Voter id கிடைத்தது...

  ReplyDelete
 3. தொழில்நுட்பத்தில் நம்மை விட பலமடங்கு முன்னேறிய வெளிநாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறை இருக்கும்போது... நம் நாட்டில்...?

  பல பிரச்சனைகள் உருவாக்கும் வாக்கு மிஷின் முறை தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன...?

  ReplyDelete
 4. இன்னும் சில கேள்விகள் - நண்பரின் பகிர்விலிருந்து :-

  ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியதாக சொல்கிறது தேர்தல் ஆணையம். விசாரணை முடிந்த பிறகு அவை கணக்கு காட்டப்படாத பணம் என்று உறுதியானால்... இதுவரை கைப்பற்றிய கோடிக்கணக்கான ரூபாய், நகை உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு? அதை அரசாங்கம் என்ன செய்தது? இதுபற்றிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தது உண்டா?

  வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றி டிவி, ரேடியோ, நாளிதழ் போன்றவற்றில் விளம்பரம் செய்ய வேண்டுமென்பது தேர்தல் விதி. ஆனால் அதை ஒரு வேட்பாளர் கூட செய்யாதது ஏன்? அவரகள் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

  வாக்காளர் அடையாள அட்டையை தற்போதைய முகவரியுடன் வைத்து வாக்களிக்க வருவோரை பூத் ஸ்லிப் காட்ட சொல்ல வேண்டிய கட்டாயமென்ன? அவர்தான் வாக்காளர் என்பதற்கு புகைப்படமும், முகவரி சான்றும் உள்ளது. அதுபோல தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான nvsp.in மற்றும் electoralsearch.in ஆகியவற்றில் பெயர் இடம் பெற்று உள்ளது. இதைத்தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்?

  வாக்கிற்கு பணம் தந்த வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்யாமல் மொத்தமாக தேர்தலை ரத்து செய்வது எதற்கு? பலநாட்கள் பிரச்சாரம் செய்து, வாக்கிற்கு பணம் தராத வேட்பாளர்களுக்கு இதுதான் தண்டனையா? அவர்களின் செலவை தேர்தல் ஆணையம் ஏற்குமா?

  இந்தியாவில் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில் மோடியின் வாரணாசி தொகுதிக்கு மட்டும் கடைசி கட்டமான மே 19 அன்று தேர்தல் நாளை அறிவித்துள்ளது ஏன்? நீண்ட நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய உதவவா?

  வாக்குச்சாவடி வளாகத்தில் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை துண்டு போல கழுத்தில் மாட்டிக்கொண்டு வருவது விதிமீறல். அதை செய்த ஓ.பி.ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்வதில் தவறென்ன?

  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள மனநலம் குன்றிய மக்களும் இம்முறை வாக்களிக்க வைக்கப்பட்டது எதற்கு?

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தேர்தல் ஆணையம்.. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதியை செய்யாமல் போனது ஏன் அல்லது அதை செய்யத்தவறியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

  தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் தாண்டிவிட்ட வடக்கத்தி வேலையாட்களில் இங்கே எத்தனை பேருக்கு வாக்குரிமை உள்ளது? அதற்கான வெளிப்படையான அறிவிப்பு எப்போது வெளியாகும்?

  வாக்கு மிஷின்களில் லெட்டர் பேட் கட்சிகளை டாப் 10 வரிசையில் வைத்து விட்டு நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மையம் போன்றவற்றை பின்னுக்கு தள்ளியது தற்செயலாக நடந்ததா? தெரிந்தே நடந்ததா?

  நாம் தமிழரின் கரும்பு விவசாயி சின்னத்தை மட்டும் மங்கலாக அச்சடித்து இருப்பதற்கு பொறுப்பேற்று அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டியது யாருடைய கடமை? ஏதேனும் ஒரு முன்னணி தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சின்னங்கள் மட்டும் மங்கலாக இருக்காமல் கரும்பு விவசாயி மட்டும் இப்படி ஆனது எப்படி?

  ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் மத்திய மற்றும் மாநில அரசின் கட்சிக்காரர்களின் இடங்களில் ரெய்டு நடத்தி... அதை காரணம் காட்டி எத்தனை தேர்தல்களை ரத்து செய்து உள்ளீர்கள்? இவர்களில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை வாங்கித்தந்து உள்ளீர்கள்?

  வி.ஐ.பி.வேட்பாளர் வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிக்க வரும்போது பல்லை இளித்துக்கொண்டு எழுந்து நிற்கும் அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அமர்ந்தபடிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்கவில்லையா அல்லது அப்படி எடுத்தும் அவர்கள் உங்களை மதிக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல்லாரின் விடை காணா கேள்விகளுக்கு விடை எப்போது கிட்டும்?

   Delete
 5. படங்கள் சொல்லும் கதைகள்....

  தேர்தல் ஒரு மிகப் பெரிய திருவிழா.... நிறைய +/- உண்டு.

  ReplyDelete
 6. A guide to Presiding Officers

  https://eci.gov.in/files/file/8993-handbook-for-presiding-officers-october-2018/

  படித்துப் பாருங்கள்.....

  ReplyDelete
 7. பணநாயகம் முறைப்'படி' நடந்தது நண்பரே...

  ReplyDelete
 8. கில்லர் சரியாக சொல்லியிருக்கிறார்

  ReplyDelete
 9. பதிவில் எழுதவேண்டியதை படங்கள் மூலம் சொல்லிவிட்டீர்கள்!

  ReplyDelete
 10. இப்படி எதாவது தில்லுமுல்லு பண்னுனாதான நாங்க ஆட்சிய புடிக்க முடியும்.... வேற எவனாவது ஆட்டைய போட்டுட்டானா அப்புறம் நாங்க என்ன பண்ணுறது?...

  ReplyDelete