நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு
குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம்
ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த
பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு
அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும்.
இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற
ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு
நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு
சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம்.
இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, மேலும்....
உங்கள் தளத்திற்கு இன்று என் முதல் வருகை இனிமேல் அடிக்கடி வருவேன் உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது
ReplyDeleteதங்களின் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteசொக்கன் அவர்களுக்கு,
ReplyDeleteவீட்டில் பிள்ளைகளுடன் நடக்கும் உண்மை நிகழ்வினை சுவைபட சொல்லியிருந்தீர்கள், பிள்ளைகளின் சமூக சூழல் அவர்களை அதற்கேற்றாற்போல் மாற்றம் பெற செய்துவிடுகின்றது, எனினும் பெற்றோரின் வற்புறுத்தல் மற்றும் கவனம் நம் தாய்மொழியின்பால் இருந்து பிள்ளைகளை ஊக்குவிகும்போது பிள்ளைகள் ஓரளவேனும் தமிழின்பால் ஒட்டுரவுடன் இருப்பார்.
எமது "ஸ்வீட் சிக்ஸ்டீன் " படித்து கருத்து சொல்லவும்.
நட்புடன்
கோ