வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரு வாரங்களாக அடியேன் வலைப்பூ உலகை
விட்டு சற்று ஒதுங்கியிருந்தேன். “எல்லோரும் நலம் தானே, வேலைப் பளுவா” என்று திரு, துளசிதரன்
சார் அன்பாக கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உண்மையில் வேலைப்பளு எல்லாம் இல்லை. என்னிடம் இருக்கும்
ஒரு மிகப்பெரிய கெட்டப் பழக்கம், எந்த ஒரு வேலையையும் முன்கூட்டியே
செய்யாமல், கடைசி நேரத்தில் செய்வது தான். இதனால் ஏற்பட்ட பாதிப்பு
தான் நான் இரு வாரங்களாக வலைத்தளத்திற்கு வர இயலாமல் போனது.
இங்கு கடந்த இரு வாரங்களாக “ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கம்” நடத்தும்
தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஓவியா கவிதை மனனப்போட்டியிலும், வாய் மொழித் தொடர்பிலும் மற்றும் தனி நடிப்பு போட்டியிலும்
பங்கேற்றிருந்தார். அதில் முதல் இரண்டை வீட்டு அம்மணி சொல்லிக்கொடுத்து விட்டார்கள்.
இந்த தனி நடிப்பு போட்டிக்கு (“Mono Acting”) “ஊக்கமது கைவிடேல்”
என்ற கருப்பொருளில் ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை நடித்துக்காட்ட
வேண்டும். அந்த போட்டிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான், ஓவியாவிற்கு
ஏற்ற ஒரு சின்ன ஸ்கிரிப்ட்டை தயார் செய்து நடிக்க சொல்லிக்கொடுத்தேன். அவரும் மிக குறுகிய
காலத்தில் அந்த தனி நடிப்பு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தில் வந்து விட்டார்.
(இவைகளைப் பற்றிய விவரங்களை தனிப்பதிவாக எழுதுகிறேன்).
இன்று மாலை முதல், ஞாயிறு வரை இங்கு “சைவநெறி
மாநாடு” நடக்க இருக்கிறது. இதில் நாளை மாலை நாங்கள் நடிக்கும் “ஈசனின் திருவிளையாடல்”
என்ற குறு நாடகம்(25 நிமிடம்) அரங்கேற உள்ளது. சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களில், ஒரு திருவிளையாடலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய நடைமுறை
வாழ்க்கையோடு கோர்த்து ஒரு நாடகமாக மாற்ற முயற்சித்து,சென்ற வாரம்
தான் அந்த முயற்சிக்கு இறுதி வடிவம் கொடுத்தேன். என்னுடைய இந்த கடைசி நேரம் செய்யும்
பழக்கத்தால், இதில் நடிக்கிறவர்களையும் நான் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறேன்.
அவர்களும், என்னிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், நாங்கள் வசனங்களை எப்படியாவது மனப்பாடம் செய்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
நாடகத்துக்கான ஒத்திகையையும் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறோம். மேலும் நாளைய தினத்தில், மாநாட்டில் நான் எழுதிய கட்டுரையை
(“இணையம் வழி சமயக்கல்வி
கற்றலும் கற்பித்தலும்”) சமர்பிக்க இருக்கிறேன். அதற்கு தேவையான பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்
(Power point presentation) இன்னும்
செய்து முடிக்க வில்லை (இன்றிரவு அதை முடித்து விட முடியும் என்று நம்புகிறேன்!!!).
இந்த வாரத்தின் ஆரம்பத்தில்
வலைத்தளத்திற்கு வரலாம்
என்று நினைத்த பொழுது தான், உடல் நிலை சிறிது சரி இல்லாமல் போய்விட்டது.
அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எல்லாம் போட்டு உடல் நிலையை சீராக்கிக்கொண்டு, இந்த பதிவை எழுதுகிறேன். இனி மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து வலைத்தளத்திற்கு
டிமிக்கி கொடுக்காமல் வருவேன் என்று கூறிக்கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலைக்குடும்பம்... அசத்துங்கள்... மூன்றாம் பரிசு பொற்ற குட்டிச் செல்லத்துக்கு வாழ்த்துக்கள்...
என்ன ஆளையே காணோம் என்று நினைத்து இருந்தேன்...பதிவு கண்ணில் பட்டது...பதிலும் அதிலேயே...
சுகமாய்...வாருங்கள் வலைத்தளத்திற்கு...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteதிங்கட்கிழமையிலிருந்து வலைத்தளத்தில் ஆஜர்.
வாருங்கள்.
ReplyDeleteகலக்கல் மன்னனே நீர் வாழ்க உங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க உங்கள் குடும்பதினர் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபரிசு பெற்ற குட்டிச் செல்லத்துக்கு வாழ்த்துக்கள். தமிழ் வளர்க்கும் கலைக்குடும்பம்... அசத்துங்கள்...
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteநான் நினைச்சேன் நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களே ? தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுக்காமா ? என நினைக்கும்போது பதிவை கண்டேன்.
ReplyDeleteவிநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
நான் முந்திவிட்டேனோ!!!
Deleteதப்பித்துவிட்டேன் தங்களின் தொல்லையிலிருந்து .... (சும்மா ..............)
அடடா! நானும் நினச்சுட்டே தான் இருந்தேன் உங்களையும் காணோம், ராஜியக்காவையும் காணோம்னு:(( health தை கவனிச்சுங்க சகோ. பதிவு அப்புறம்தான். பாப்பாவுக்கு இந்த அத்தையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:))
ReplyDeleteஆமாம், சகோ ராஜியையும் பார்க்க முடிவதில்லை.
Deleteதங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோ.
அப்பிடியா சகோ இப்போ நலம் தானே? நானும் தேடிட்டு தான் இருந் தேன். நான் நினைத்தேன் பயபுள்ள vacation போய்ட்டார் போல ஏன் குழப்புவான் என்று அமைதிகி விட்டேன். நன்றாக அசத்துங்க சகோ. ஓவியாக் குட்டிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteஇப்போ பூரண சுகம் தாங்க சகோ.
Deletevacation எல்லாம் இல்லை சகோ. வந்தால் உங்கள் ஊருக்கு தான் வார வேண்டும்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.
ReplyDelete‘ஊக்க “மது“ கைவிடேல்‘ என்பதுதான் தற்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கிறது.
நன்றி!
மிக்க நன்றி நண்பரே.
Deleteஇப்படி கூட அந்த வார்த்தையை பிரிக்க முடியுமா!!!
உங்கள் பணிகளை வெற்றிகரமா முடிச்சிட்டு வாங்க ,சொக்கன் ஜி !
ReplyDeleteபணிகளை முடித்து விட்டு வந்துவிட்டேன் பகவான்ஜீ
Deleteகுட்டி பொண்ணுக்கும் அவளை ஊக்குவிக்கும் அப்பா அம்மா உங்களிருவருக்கும் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்
ReplyDeletethஆண்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
Deleteவெற்றி பெற்ற தங்களின் செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் பணியினை வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டு, உடல் நிலையினையும்
சரிசெய்து கொண்டு வலைப் பூ விற்கு வாருங்கள் நண்பரே
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
Deleteமிண்டும் வலைப்பூவிற்கு வந்துவிட்டேன்,
பரிசு பெற்ற உங்கள் செல்ல மகளுக்கு எனது வாழ்த்துகள்....
ReplyDeleteஒரு சில நாட்களாக பதிவுலகில் அவ்வளவாக உலவ முடியாத நிலை எனக்கும். முடிந்த போது தொடருவோம்!
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteகண்டிப்பாக தொடருவோம்.
கலக்குகின்றீர்கள்!!! ஹப்பா உங்களைக் கண்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!!!!
ReplyDeleteசெல்லத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்!
தங்கள் நாடகம் சிறப்புற அரங்கேரவும், ப்ரசென்டேஷனுக்கும் வாழ்த்துக்கள்! உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்! இத்தனை வேலைகளுக்கும் இடையில்! வாருங்கள் உடல் நலத்துடன் பழையபடி!....
தங்களின் வார்த்தைகளைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் துளசி சார். \
Deleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
குட்டிச் செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலைச் சேவை தொடரட்டும். இப்போது நலம் தானே... ஓய்வுக்கு பின் ஓயாது வாருங்கள்.
நாடகம் நன்கு நடக்கட்டும் வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
Deleteநாடகம் நல்லபடியாக முடிந்தது
நல்ல பதிவு
ReplyDeleteவிழாக்களுக்கு வாழ்த்துக்கள்
குழந்தைகளுக்கும் தான்
உடல் நலம் பேணவும்..
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது சார்.
Deleteஉடல்நலன் தான் சார் முக்கியம்.... வலையுலகம் அப்புறம் தான்...
ReplyDeleteமிக்க நன்றி ஸ்பை.
Delete"சுவர் இருந்தாள் தான் சித்திரம் வரைய முடியும்" என்று சொல்லுவார்கள். உடல் நலம் மிகவும் முக்கியம் தான்.