சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
அதுவன்றியும் சந்தர்ப்பம் நேர்ந்த பொழுதெல்லாம், விபூதி, உருத்திராஷம், ஸ்ரீபஞ்சாஷரம் முதலிய சிவ சாதனங்களின்
மகிமைகளையும் சிவபுராணங்களிலும் பெரிய புராணத்திலும் ஆங்காங்குள்ள விசிஷ்டங்களையும், பெரியோர்களுடைய மகிமைகளையும் பக்தி சிரத்தையுடன் கேட்போர்க்கு ஆனந்தம் உண்டாகும்படி
பிரசங்கஞ் செய்வார்கள்.
அவ்வாறு பிரசங்கஞ் செய்யும்பொழுது சிவமகிமைகளைப் பிரமாணங்களோடு எடுத்துக்காட்டி
ஆண்டானடிமைத்திரமும் விளக்கி புறச்சமய நிராகரணஞ்
செய்து சிவபரத்துவ ஸ்தாபன விஷயம் நேர்ந்துழி வீராவேசத்துடனிருந்து, சிங்ககர்ச்சனைப் போன்ற கெம்பீரத் தொனியுடன் கடன்மடை திறந்தாற்போன்ற
தடைபடா வாக்கினால் கன்னெஞ்சமும் கசிந்துருக எவ்வளவு நேரமானாலும் கேட்போர் சலியாமல்
கேட்கத்தக்க இனிமையுடன் விபூதி உருத்திராக்க தாரண சிவவேடத் திருமேனிப் பொலிவுடனிருந்து
பிரசங்கஞ் செய்வார்கள்.
ஐயா அவர்கள் சிவநேசர் திருக்கூட்டத்தில் கலந்து அளவளாவி அதில் அக்ராசனாதிபதியாகவுமிருந்து
பிரசங்கஞ் செய்து வந்தமை ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்படும். அந்தத் திருக்கூட்டத்தின்
எட்டாம் ஆண்டு மூன்றாவது கூட்டம் பள்ளத்தூரில் நடைப்பெற்றபொழுது ஐயா அவர்கள் தங்கள்
காலத்தின் கடைசிப் பிரசங்கமாக “நித்திய மங்கள சோபானாம்” என்பதைப் பற்றி உபந்யாசம் புரிந்தார்கள்.
இது வியக்கத்தக்கதாகும்.
எப்பொழுதும் சிவமகிமையையே பேசுதலிலும், எழுதுதலிலும்
மாணாக்கர்களுக்குப் போதித்தலிலுமே காலங்கழித்து வந்தார்கள்.
ஐந்தாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
எல்லா பதிவுகளும் படித்து விட்டேன் நண்பரே.... நிறைய தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன் அனைத்திற்க்கும் நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.
Deleteஒரு காலத்தின் கலாசார பதிவுகளை பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது
Deleteகோவில்களில் இருந்து பிரசங்கம் கேட்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சிறுவயதில் கேட்டது. அது போன்று வில்லுப்பாட்டும் நன்றாக இருக்கும்.இப்போதெல்லாம் எங்கே, காலப் போக்கில் எல்லாம் அழிந்துவிடும் போல் இருக்கிறதே. மிக்க நன்றி !சகோ பதிவுக்கு தொடர வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஒரு காலத்தில் வழக்கில் இருந்த வார்த்தைகளை அறிந்து கொண்டேன்
ReplyDeleteசொக்கலிங்கம் ஐயா அவர்களின் பணி பாராட்டிற்குரியது
நன்றி நண்பரே
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteதொடர்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட் சார்
Deleteபல வார்த்தைகள் இப்போது புதியவையாக இருக்கின்றன! எத்தனை மாற்றங்கள் மொழியிலும், கலாச்சாரத்திலும்! தொடர்கின்றோம் சொக்கன் சார்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்
Delete