Monday, December 1, 2014

விளையாட்டு வினையாகுமா?விளையாட்டு வினையாகும்னு சொல்லுவாங்க. கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்து அது மூன்று முறை உண்மையாகிவிட்டது. எந்த ஒரு விளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்யும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டால் 1998ல் இந்தியா வீரர் ராமன் லம்பா, சென்ற வாரத்தில் (நவம்பர் 27ல்) ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், அதற்கு அடுத்த இரு நாட்களில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நடுவர் ஹிலல்  ஆஸ்கர் ஆகியோர் உயிரை விட்டிருக்கிறார்கள். நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு (கிறிஸ்துவ பள்ளி என்பதால் பாதிரியார்) இந்த கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காது. 11 முட்டாள்கள் விளையாடுவதை 11ஆயிரம் முட்டாள்கள் வேலை வெட்டி இல்லாமல் பார்க்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.    இந்த கூற்று உண்மைதானோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு இன்று இந்த விளையாட்டு அமைந்து விட்டது. கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை வகுத்தவர்களுக்கு உண்மையிலியே அறிவு இருந்திருந்தால், ஒரு விளையாட்டில் உயிரை பறிக்கக்கூடிய விதிமுறைகளை வைத்திருக்க மாட்டார்கள்.


(பேட்டில் பட்டு தெறித்த பந்து நேராக ராமன் லம்பாவின் தலையை பதம் பார்த்துவிட்டு விக்கெட் கீப்பரின் கைகளுக்குள் சமர்த்துக்குட்டியாக அமர்ந்து கொண்டது)(தன் தலையை பதம் பார்த்த பந்தின் ஆக்ரோஷத்தை சமாளிக்க முடியாமல் பிலிப் ஹியூக்ஸ் கீழே சுருண்டு விழும் காட்சி) 

பவுன்சர் என்பதே ஒரு ஆபத்தான பந்து வீச்சு முறையாகும். அது பேட்ஸ்மேனின் நெஞ்சை நோக்கி வீசப்படும்போது, அதை சரியான முறையில் தடுக்கவில்லையென்றால், பந்தானது நெஞ்சை தாக்கும். 140 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்து நெஞ்சை தாக்கினால் என்ன ஆகும். சரி, பிலிப் ஹியூக்ஸை எடுத்துக்கொள்வோம், அவர் தற்காப்புக்கு ஹெல்மெட் அணிந்து தான் விளையாடி இருக்கிறார். இருந்தும் அந்த பவுன்சர் அவர் தலையில் பட்டு அவரின் உயிரை குடித்திருக்கிறது. அவரை காப்பாற்ற முயற்சி செய்த மருத்துவர்கள் கூறுகையில், “அவரின் கழுத்துக்குக் கீழ் பலமாக அடி விழுந்துள்ளது. இதன் காரணமாக, மூளைக்குச் செல்லும் மிக மிக முக்கியமான ரத்த நாளங்களில் ஒன்று கடுமையாக அழுத்தப்பட்டு நசுங்கிப் போய் விட்டது. பந்து அந்த அளவுக்கு படு வேகமாக தாக்கியுள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம்”, என்று அவரின் மரணத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். 

இவரின் மரணத்துக்கு யார் பொறுப்பு எடுத்துக்கொள்வார்கள். பவுன்சர் வீசிய அந்த பௌலரா இல்லை அந்த ஹெல்மெட்டை தயாரித்த நிறுவனமா?
பவுன்சர் அனுமதிக்கபடலாம் என்ற விதிமுறையை உருவாக்கியவர் தான் இதற்கு முழு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விதிமுறையை உருவாக்கும்போதே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, பவுன்சர் ஆபத்தானது என்று, அதனால் தான் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களுக்கு மேல் போடக்கூடாது என்ற விதிமுறையை உருவாக்கியிருக்கிறார்கள். பவுன்சரே போடக்கூடாது என்று ஒரு விதிமுறையை உருவாக்கியிருந்தால், இன்று அந்த 25வயதேயான இளம் வீரரின் உயிர் பறிக்கப்பட்டிருக்காது.

சரி, பவுன்சர் இல்லாமல் எப்படி ஒரு டெஸ்ட் மாட்ச்சை விளையாடுவது என்று கேட்பவர்களுக்கு, நியூசிலாந்து வீரர்கள் பவுன்சர் இல்லாமல் விளையாட முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள். , பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பிலிப் ஹியூக்ஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இரண்டு இன்னிங்ஸிலும் அவர்கள் ஒரு பவுன்சர் பந்தை கூட வீசவில்லை. 

இனிமேலாவது கிரிக்கெட் விளையாட்டில் உயிரைப் பறிக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஐ.சி.சியின் கடமையாகும்.


26 comments:

 1. கிரிக்கெட் ஆட்டத்தின் பவுன்சர் பந்துவீச்சு விதிமுறைகள் கண்டிப்பாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 2. அந்த செய்தியை கேள்விப்பட்டபோது ,மனம் கனத்தது :( பாவம் வாழ வேண்டிய வயதில் மரணம் ..இனியாவது விதி முறைகளை மாற்றி வீரர்களின் உயிர்களை காக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 3. விளையாட்டு இப்படிச் சில நேரங்களில் வினையாகி விடுகின்றன.

  நீங்கள் சொன்னது போல் வீரர்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

  ஹியூக்ஸ் போல இன்னொருவர் இப்படிப் பலியாகாமல் இருக்கட்டும்.
  பகிர்விற்கு நன்றி அய்யா!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக் இன்னும் ஒரு வீரர் பலியாகக்கூடாது. அதற்குள் வீரர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 4. உயிரை எடுத்து விளையாடுவது கிரிக்கெட்டிற்கு மிகவும் பொருந்துகிறது !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ

   Delete
 5. உண்மைதான் நண்பரே அவனுகளாவது கோடிக்கணக்காக சம்பாரிப்பதற்காக உயிரை விட்டார்கள் நம்ம நாட்டான் டிக்கெட் எடுக்கும் தகறாறில் கத்திக்குத்து வாங்கிச்செத்தானே... என்ன செய்வது ? எல்லாம் காலத்தின் கோலம்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் காலத்தின் கோலம். கலிகாலம்...
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. பரிதாபம்......

  சில மாற்றங்கள் கொண்டு வந்தே ஆகவேண்டும் எனத் தோன்றுகிறது. செய்வார்களா? பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சில மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். பார்ப்போம்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.

   Delete
 7. 'ஜெண்டில்மேன்' விளையாட்டு இப்ப பயமாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் இந்த விளையாட்டு இப்ப பயமாகிப் போய்விட்டது.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்.

   Delete
 8. பாதுகாப்பு அம்சங்களை இன்னும் பலப்படுத்தியாக வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக பலப்படுத்துவார்கள் என்று நம்புவோம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 9. வேதனைப்படக்கூடிய செய்தி. இது ஒரு பாடமாகட்டும். இனி இன்னும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 10. அநியாயமாய் ஒரு இளைஞர் உயிர் விடக் காரணமாக இருந்த இது விளையாட்டு இல்லை. வினைதான். சம்பந்தப்பட்டவர்கள் இது போன்று இனி நடக்காதிருக்க ஆவன செய்வார்கள் என நம்புவோம்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இது குறித்து ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 11. கண்டிப்பாக இனி மாற்றம் வரும்... வர வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் மாற்றம் வர வேண்டும்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

   Delete
 12. உங்க சார் அப்போதே சரியா சொல்லி இருக்கிறார்...
  விதி முறைகள் மாறி வரவேண்டும்.
  அவ்விஷயம் கேள்விப்பட்ட போது வருத்தமாக இருந்தது. இந்த வயதில் குழந்தையை இழந்த அந்த தாய்யின் நிலமை .....நினைக்கவே முடியவில்லை.

  ReplyDelete
 13. ஆபத்தான முறையில் பந்து வீசுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. விளையாட்டுகளில் அதிக கவனம் எடுக்க வேண்டும் அதுவும் உயிருக்கான மதிப்பில்! நியூசிலாந்து வீரர்கள் வாழ்க!

  ReplyDelete
 15. துயரமான நிகழ்வுகள்.

  ReplyDelete