Thursday, February 20, 2014

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகியின் அறிமுகக் காட்சி
3.45மணிக்கு அந்த இடத்துக்கு போனா, யாரையும் காணோம், உதவி இயக்குனர் கிருஷ்ணாவுக்கு போன் போட்டா,”சார் நீங்க அங்கேயே இருங்க நாங்க இன்னும் ஒரு கால் மணி நேரத்துல வந்துடுவோம்னு சொன்னாரு”. சரின்னு நானும் காத்துக்கிட்டு இருந்தேன். 4.15 மணிக்கு இன்னொரு ஒரு நண்பர் வந்தாரு. மணியோ 4.30 ஆயிடுச்சு, படப்பிடிப்பு குழுவோ வர்ற மாதிரி தெரியலை. நானும் அந்த நண்பரும் ரோட்ல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பத்தான் நம்ம கிருஷ்ணா மட்டும் வந்து, சாரி சார், இன்னைக்கு உங்களோட காட்சியை எடுக்க முடியாது. நாங்க பாட்டில் ஃபேக்டரியில எடுத்துக்கிட்டு இருக்கிற காட்சியே இன்னமும் முடியலை. ரொம்ப ரொம்ப சாரி சார்னு சொன்னாரு. நான் ஒண்ணுமே சொல்லாம அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். டைரக்டர் சார், நீங்க வெட்டியா காத்துக்கிட்டு இருக்கவேணாம்னு தான், நேர்ல போய் சொல்லச் சொன்னாருன்னு மறுபடியும் எங்களை சமாதானம் செய்ய பார்த்தாரு. எனக்கோ செமை கடுப்பு, இவுங்களுக்காக இரண்டு நாள் லீவு போட்டு, பத்தாததுக்கு, இன்னைக்கு பர்மிஷன் வேற போட்டு வந்து,இப்படி கழுத்து அறுக்குறாங்களேன்னு ஆயிடுச்சு. அந்த கடுப்புல,, எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லாம, உங்க படத்துல நடிக்க வந்தோம் பாருங்க, அது தான் நாங்க செஞ்ச பெரிய தப்பு, இதுல நீங்க எதுக்கு சாரி கேட்கிறீங்க கிருஷ்ணான்னு” முகத்தை சாதாரணமா வச்சுக்கிட்டு சொன்னேன். அப்படி நான் சொன்னவுடனே, கிருஷ்ணா என்னைய கட்டிப்பிடிச்சு, “சார்! உங்க நிலமை எனக்கு புரியுது, எங்களால நாங்க நினைச்சா மாதிரி இங்க சூட்டிங் முடிக்க முடியலை. அதனால தான் இந்த மாதிரி ஆகுது. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்கன்னு” என்னைய சமாதானப்படுத்திட்டு நாங்க திருப்பி கூப்பிடுறோம்னு சொல்லிட்டு போயிட்டாரு. அவர் போன ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள என்னோட மற்ற மூன்று நண்பர்களும் வந்தார்கள். அவுங்க வந்தபோது மணி சரியா அஞ்சு மணி. என் கூட நின்னுக்கிட்டு இருந்த நண்பர், “என்னங்க உங்களையெல்லாம் 4மணிக்கு வாங்கன்னா, 5மணிக்கு வரிங்க?” இருக்கிறவுங்களை வச்சு அந்த continuity ஷாட் எடுத்து முடிச்சாச்சுன்னு ஒரு குண்டைப்போட்டாரு. உடனே மூணு பேரும், “உண்மையாவா, உண்மையாவான்னு” பதறிப்போய் கேட்டாங்க. அப்புறம் அவுங்கக்கிட்ட, இன்னைக்கு சூட்டிங் கேன்ஸல் ஆயிடுச்சுன்னு சொன்னவுடனே அவுங்களுக்கும் ரொம்ப கடுப்பாயிடுச்சு. அப்புறம் எல்லோரும் வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.

இது நடந்தது திங்கட்கிழமை. மறுபடியும் புதன்கிழமை இரவு இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ்கிட்டேருந்து போன். மறு நாள் வியாழக்கிமை காலைல சரியா 8மணிக்கெல்லாம் உங்களோட காட்சியை முதல்ல எடுக்கிறோம். அதனால இந்த இடத்துக்கு சரியா 8மணிக்கெல்லாம் வந்துடுங்க. லேட் பண்ணிடாதீங்க. 10மணிக்கெல்லாம் முடிஞ்சுடும் அப்படின்னு சொன்னாரு. அந்த வியாழக்கிழமை எங்களுக்கு அரசு விடுமுறை நாள். அதனால பரவாயில்லைன்னு நினைச்சா, அன்னைக்கு நெருங்கிய நண்பரோட மகன் கல்யாணம், கண்டிப்பா வந்துடுங்கன்னு வேற சொல்லியிருந்தாரு. திங்கட்கிழமை அன்னைக்கு நான் டென்ஷன் ஆனேன். புதன்கிழமை வீட்டு அம்மணி டென்ஷன் ஆயிட்டு, சாமி ஆடாத குறை தான் போங்க. “ஏதோ இத்தனை வருஷத்துல நம்மளையும் மதிச்சு, இங்க நடக்கிற ஒரு கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்காங்க, இப்பப்பார்த்து, உங்களோட சூட்டிங்.  ஊர்ல நடக்கிற கல்யாணத்துக்கு தான் போக முடியலை. இங்க நடக்கிற கல்யாணத்துக்காவது போகலாம்னு பார்த்த முடியலையேன்னு” ஒரே புலம்பல். 10மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்னு சொல்றாங்களே(நான்  அவுங்களை அப்பவும் நம்பினேன்!!!!), முடிஞ்சவுடனே நான் கிளம்பி வந்து, உங்களை கூட்டிக்கிட்டு எப்படியும் 12 மணிக்கெல்லாம் போயிடலாம்னு சொல்லி அவுங்களை ஒரு வழியா சமாதானப்படுத்தி, மறு நாள் காலைல 7மணிக்கெல்லாம் கிளம்பி அவுங்க சொன்ன அந்த H.A.R.T(Honda Australia Rider Training) அப்படிங்கிற இடத்துக்கு சரியா 8மணிக்கெல்லாம் போய் சேர்ந்தேன். எங்க வீட்டிலிருந்து அது கொஞ்ச நஞ்ச தூரம் இல்ல, ஏறக்குறைய 65கிலோமீட்டர். அங்கப்போனவுடனே, அதிசயமா, படக்குழுவோட பஸ் இருந்துச்சு, இயக்குனர்,உதவி இயக்குனர், காமிரா மேன் எல்லோரும் வந்து காலை சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. கேட்டரிங் பண்றவரு, பெரிய அடுப்பைக் கொண்டுவந்து வச்சுக்கிட்டு, சுட,சுட மசால் தோசையும், சாம்பார்,சட்னி எல்லாம் வச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் போய் அந்த தோசையை சாப்பிட்டு முடிச்சு மணியைப் பார்த்தா 8.30 மணியாகியிருந்தது. சூட்டிங் ஆரம்பிக்கலை. நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது தான், இயக்குனர் அங்க பக்கத்துல இருந்தவங்கக்கிட்ட, என்னைய காமிச்சு, “சார், படம் ரிலீஸ் ஆனவுடனே, பொட்டியைக் தூக்கிக்கிட்டு கோடம்பாக்கம் வந்துடுவாரு பாருங்க. அவர் நடிச்ச அந்த நடனக் காட்சி ரொம்ப அருமையா வந்திருக்குன்னு” என் தலையில ஒரு கிலோ இஸ் கட்டியை தூக்கிவச்சாரு. இவுங்க பாடு பேசிக்கிட்டே தான் இருக்காங்க, சூட்டிங் ஆரம்பிக்கிற மாதிரி தெரியலை. கிருஷ்ணாவைப் பார்த்து, எப்ப சூட்டிங் ஆரம்பிக்க போறீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவரும், சார் “கதாநாயகி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்காங்க, அது கொஞ்சம் கஷ்டமான மேக்கப், அதனாலதான் லேட்டாகிக்கிட்டு இருக்குது. அவுங்க மேக்கப்போட்டுக்கிட்டு வந்தவுடனே, அவுங்களோட ஒரு காட்சியை எடுத்தவுடனே, உங்க காட்சி தான்ன்னு சொன்னாரு. எனக்கு மறுபடியும் கோபம் வந்துடுச்சு. எங்க காட்சியை தானே முதல்ல எடுப்போம்னு சொன்னிங்கன்னு கேட்டேன், அந்த காட்சி, சீக்கிரம் முடிஞ்சிடும், அதனால கவலைப்படாதீங்க, 11மணிக்கெல்லாம் உங்க காட்சியை எடுத்து முடிச்சிடலாம்னு சொன்னாரு. ஆஹா, 10மணியிலிருந்து 11மணியாயிடுச்சே. அந்த கல்யாணத்துக்கு போக முடியாது போல இருக்கேன்னு யோசிச்சு, மறுபடியும், “கிருஷ்ணா, அப்ப எங்க காட்சியை மதியானமா எடுங்க, நான் அந்த கல்யாணத்துக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்”. அவரும், “சார், மதியானத்துக்கு கார் crashing பண்ற காட்சியை எடுக்கணும், அது எடுக்க ரொம்ப லேட்டாகும். அதனால அதை கடைசியா தான் எடுக்க முடியும். அதை எடுத்து முடிச்சா, இங்க ஆஸ்திரேலியாவில சூட்டிங் முடிஞ்சுது, நாளைக்கு நாங்க எல்லோரும் காலைல கிளம்புறோம். அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் பொருத்துக்குங்க சார்ன்னு” சொன்னாரு. சரி, இன்னைக்கு அந்த கல்யாணத்துக்கு போகமுடியாதுன்னு முடிவுபண்ணி, அந்த நண்பருக்கு போன் செய்து ஒரு மன்னிப்பை போட்டேன். 9மணிக்கு மேலதான், கதாநாயகியை அறிமுகப்படுத்துகிற காட்சியை எடுக்க ஆரம்பிச்சாங்க.

அதாவது, வரிசையா ஐந்தாறு காரை ரெண்டுப்பக்கமும் பக்கத்துல பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு நிக்க வச்சாங்க.
கடைசி கார்ல காமிரா மேன் நிரவ்ஷா காமிராவை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவர் பக்கத்துல இயக்குனரும் உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு. முதல்ல ரிகர்சல் மட்டும் பார்த்தாங்க. அது வரைக்கும் விஜய் வரலை. அதற்கப்புறம் தான் விஜய் வந்தாரு.  இயக்குனர் action சொன்னவுடனே, முன்னாடி முத கார் கிட்ட நின்னுக்கிட்டு இருந்த இணை இயக்குனர் பிரசன்னா, முத காரை போக சொன்னாரு. பின்னாடியே அடுத்த காரும் போக ஆரம்பிச்சுது. அப்பத்தான் அமலாபால், வலது புறத்திலிருந்து ஓடியாரனும். அவுங்க இந்த சைட் போனவுடனே, அடுத்த கார் போகணும். அப்புறம் மறுபடியும் அவுங்க இந்த பக்கம் போகணும். அப்புறமா மறுபடியும் திரும்பி வந்து, விஜய் வர்ற கார்ல மோதி விழுகிற மாதிரி கீழே உட்கார்ந்து எந்திரிக்கணும். இது பண்றதுக்கே அவுங்க நாலைந்து டேக் எடுத்தாங்க. இதுல என்னன்னா, சரியா விஜய் வர்ற கார்ல தான் கீழே உட்காரணும். இதையெல்லாம், பின்னாடி ஒரு கார்ல உட்கார்ந்து படம் பிடிச்சுட்டு, அப்புறம் வலது பக்கத்துல ஒரு மரத்துக்கு பக்கத்துலேருந்து, முன் பக்க காட்சிகளை எடுத்தாங்க. மணி கிட்டதட்ட 11ஆயிடுச்சு.

கொஞ்ச நேரத்துல, எங்களோட அந்த continuity காட்சியை எடுக்கபோறோம், சீக்கிரம் வாங்கன்னு சொன்னாங்க. அடுத்த பகுதியில அந்த continuity காட்சியை, எப்படி continuity இல்லாம எடுத்தாங்கன்னு சொல்றேன். அதுல இன்னொரு கொடுமை என்னன்னா, 20 வருசத்துக்கு முன்னாடி என்னோட கனவுக்கன்னியா ஒருத்தவங்க இருந்தாங்க. அவுங்களை மாதிரி நீங்க இருக்கீங்கன்னு நான் அமலாபால் கிட்ட சொல்லனும்னு சொன்னாங்க. அட! கிரகமே, அவுங்க எங்க!! இவுங்க எங்கன்னு நினைச்சுக்கிட்டே சொன்னேன், நல்லகாலம், அந்த வசனம் எல்லாம் படத்துல வரலை. அதையெல்லாம் அடுத்த பகுதியில சீக்கிரம் சொல்றேன்.

- இன்னும் சொல்கிறேன்


12 comments:

 1. தலைவா...! இந்த continuity தேவையா தலைவா...!

  ReplyDelete
  Replies
  1. இந்த continuity தேவையில்லை தான். என்ன பண்றது, போய் மாட்டிக்கிட்டோம். அதனால அந்த continuity தேவையா போயிடுச்சு. ஆனா படம் பார்த்த பிறகு தான், இந்த continuityக்கு தான் continuityயே இல்லாம எடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சுது.

   Delete
 2. ஆஹா இதெல்லாம் வேற நடக்குதா சகோதரா! அடடா எனக்கு இப்ப தானே தெரியும். விஜய் அமலாபால் கூட வெல்லாமா சந்தோஷம். வாழ்த்துக்கள்....! சரி அந்தப் படத்தை நான் பார்க்கிறேன். சரி தானே.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி.
   நான் நடிச்சேன் என்பதற்காக எல்லாம் அந்த படத்தை பார்க்காதீங்க. அந்த அளவிற்கு அது ஒண்ணும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றதுக்கில்லை.
   அடுத்த பகுதியோட, என்னோட அனுபவத் தொடர் முடிஞ்சிடும். அப்புறம் நானே, நான் நடித்த காட்சிகளை எல்லாம் காணொளியாக ஒரு பதிவா போடுறேன். அப்ப நீங்க பாருங்க.

   Delete
 3. இப்டி தொடரும் போட்டுடீங்களே சகோ
  என்ன தான் ஆச்சு continuity?!

  ReplyDelete
  Replies
  1. continuity காட்சியை continuity இல்லாமா தான் எடுத்தாங்க. அடகி விரைவில் சொல்கிறேன்.

   Delete
 4. நல்ல அனுபவம்..

  நேரில் படப் பிடிப்பை பார்த்தல் நடிக்க வருபவர்களில் பாதிபேர் வெறுத்து விடுவார்கள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வேறு தொழிலில் இருப்பவர்களுக்கு, படப்பிடிப்பை பார்த்தாலே போதும் போதும் என்றாகிவிடும். இதிலில் நடிக்க வேறு வந்தால், வெறுத்து போய், ஆளை விடுங்கடா சாமி என்றாகிவிடும்.

   Delete
 5. நல்ல அனுபவம்.

  உங்க பதிவோட continuity எப்போ? :)))

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அந்த பதிவு தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்

   Delete
 6. கரெக்டா போச்சு....போன பின்னூட்டத்துல உங்கலுக்குப் பொறுமை போயிருக்குமேனு சொல்லிருந்தோம்! ஆமாங்க.....ஷூட்டிங்க் பாத்தோம்னு வையுங்க வெறுத்து போய்டுவோம்! சினிமா, அதுகுறும்படம்னாலும், பெரும் படமாக இருந்தாலும் சரி.....அதி ஈடுபாடு இருந்தால் மட்டுமே இயக்க முடியும், நடிக்கவும் முடியும்! பொறுமை ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே வேண்டும்! தங்களுக்கு பாராட்டுக்கள்! அடுத்த பதிவுக்கு போறோம்! அவங்க ஃப்ளைட் பிடிச்சாங்களா இல்லையானு தெரிஞ்சுக்க...

  ReplyDelete
  Replies
  1. அந்த ஐந்து நாட்களும், நாங்க எப்படா எங்களோட காட்சியை எடுத்து முடிப்பாங்கன்னு ஆயிடுச்சு. சூட்டிங் பார்க்கும்போதாவது, நமக்கு பொறுமை போயிடுச்சுன்னா கிளம்பி போயிடலாம். ஆனால் நடிக்கும்போது அப்படி போக முடியாதே!!!

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete