இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், நன்மைகள் ஏற்பட்டாலும், தீமைகளும் அளவுக்கதிகமாக ஏற்படத்தான் செய்கிறது. சமூக
வலைத்தளங்கள்,அலைபேசி போன்றவைகள் மூலம், பெண்கள் ஏமாற்றப்படுவது ஒருதொடர் கதையாக நடந்து கொண்டு வருகிறது. முகநூல்,ஆன்லைன் சாட்டிங் ,வீடியோ சாட்டிங் மூலம் நடக்கும் குற்றங்களை
இந்த படத்தில் நம் கண்முன்னே கொண்டுவருகிறார் அறிமுக இயக்குனர் ஜான் ராபின்சன்.
கதை களம் மலேஷியாவிலும், கோயம்புத்தூரிலும் நடக்கிறது. மலேஷியாவில் இந்தியர்களை
குறிவைத்து நடக்கும் தொடர் கொலைகளை கண்டறியும் பணியில் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னர்
சரத்குமார் ஈடுபடுகிறார். இந்த தொடர் கொலைகளுக்கும் ஆஷா பிளாக் என்ற பெயரில் முகநூல்
வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதனிடையில் கோயம்புத்தூரில்
இருக்கும் கதாநாயகன் ரோகித்துக்கு மலேஷியாவில் இருக்கும் அதே ஆஷா பிளாக் ஒரு நண்பர்
விண்ணப்பம் அனுப்புகிறார். அதனை ஏற்றுக்கொண்ட ரோகித், அவரோடு
தொடர்ந்து ஆன்லைன் சாட்டிங்,வீடியோ சாட்டிங் எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆஷாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆஷாவுடைய பிறந்த நாளில் அவரை சந்திப்பதற்காக
மலேஷியா சென்றபொழுது, ஆஷா தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரிய
வருகிறது.
ஆஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார், அந்த தொடர் கொலைகளுக்கு
என்ன காரணம், அந்த கொலைகள் எல்லாம் யார் செய்தது, சரத்குமார் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா போன்ற வினாக்களுக்கு, படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதாநாயகி ஆஷாவாக இஷிதா, நம்மை ரசிக்க வைக்கிறார். நகைச்சுவைக்கு, பிளாக் பாண்டி,எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார்கள். ஆனால்
சிரிப்பு தான் வரவில்லை. சரத்குமாருக்கு வயதாகிவிட்டது என்பது நன்றாக தெரிகிறது. முன்பு
மாதிரி அவரால் போலீஸ் அதிகாரி வேடத்தை மிடுக்குடன் நடிக்க முடியவில்லை.
படத்தின் தலைப்பு இது ஒரு பேய் படம் என்ற மாயையை கொடுக்கிறது.
ஆனால் இது ஒரு காதல் கலந்த த்ரில்லிங் படம். இன்னும் சொல்ல போனால், பிள்ளைகளை அதுவும் குறிப்பாக
பெண் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் விட்டால், அவர்கள் எவ்வாறு
சமூக வலைத்தலங்களால் ஏமாற்றப்படுவார்கள் என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு படம்.
இந்த படத்தை பார்த்த பிறகு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம்
அன்பு செலுத்தி, தினமும் சில மணித் துளிகளை அவர்களுடன் செலவளித்து, அவர்களின் உற்ற நண்பர்களாக மாறினால், அதுவே இந்த படத்துக்கு
கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஒரு சில குறைகள் இருந்தாலும் பெற்றோர்கள் கண்டிப்பாக
பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு படம்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Nalla cinema vimarsagar aiteenga... adutha ennoda padathai ungala vachu ootidalam polaye...
ReplyDeleteநாங்க எந்த படத்தையும் ஓட வைத்துவிடுவோம் இல்ல!!!!.
Deleteஅதனால தைரியமா நீங்க ஒரு படத்தை எடுங்க நண்பரே.
Nalla cinema vimarsagar aiteenga... adutha ennoda padathai ungala vachu ootidalam polaye...
ReplyDeleteஅருமையான விமர்சனம் .விரைவில் பார்க்கிறேன் .
ReplyDeleteஉங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !
பிள்ளைகளை கவனிப்பது என்பது வேறு அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள தற்காத்துக்கொள்ள பயிற்சியளிப்பது என்பது வேறு...
ReplyDeleteநல்ல விமர்சனம்..
வாழ்த்துக்கள் உணமையானவரே..
மிக சரியாக சொன்னீர்கள்.
Deleteபிள்ளைகளுக்கு அந்த பயிற்சியை அளிப்பதற்கு, அவர்களுக்கு முதலில் நம்மிடம் நம்பிக்கை வர வேண்டும்.
தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅறிவியல் செய்தி ஒன்று !
தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள். விமர்சனம் அருமை. படம் பார்க்கவேண்டும்.
ReplyDeleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteதீபாவளி நல்வாழ்த்துகள் !
ReplyDeleteபட விமரிசனம் அருமை ! இன்றைய காலத்துக்கு ஏற்ற கருவை கொண்ட படம்...
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteநண்பரே! நல்ல ஒரு விமர்சனம்! ஆனால் இப்படி ஒரு படம் வந்திருப்பதே தங்கள் பதிவின் மூலம்தான் தெரிகின்றது! இங்கு வந்ததாகத் தெரியவில்லையே! பார்க்க வேண்டும்.
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீவ ஒளி வாழ்த்துக்கள்!
இம்மாதிரியான விழிப்புணர்வு படங்கள் நம் நாட்டில் ஓடுவதில்லையே...
Deleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteஉங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவிமர்சனம் நன்றாக இருக்கு. நன்றி
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteசிறப்பான விமர்சனம்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபிந்திய ஒளி மயமான தீபாவளி வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteவிமர்சனம் அருமை!
தங்கள் பதிவின் மூலம் தான் இத் திரைப்படம் தெரிகிறது. நிச்சயம் பார்க்கவேண்டிய படம் என்று தெரிகிறது. அப்போ பார்த்திடுவோம். நன்றி சகோ !
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteகண்டிப்பாக பாருங்கள்.
உண்மையனவரின் வழியில் முதன்முதலாக உள்நுழைகிறேன்.
ReplyDeleteநான் படம் பார்ப்பதில்லை. பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது தங்கள் பதிவு.
தொடர்ந்து வலையில் சிந்திப்போம்..!
mahaasundar.blogspot.in
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteகண்டிப்பாக பாருங்கள். நானும் தங்களை தங்களுடைய வலையில் சந்திக்கிறேன்.
இப்படி ஒரு படமா? தலைப்பு ஏதோ பட்டுக்கோட்டைப் பிரபாகர் கதைத் தலைப்பு மாதிரி இல்லை? :)))
ReplyDeleteஅட, நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் கவனித்தேன்.
Deleteநல்லதொரு விழிப்புணர்வு படம்.