Friday, October 3, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஆறாம் அதிகாரம் – வாசஸ்தானம்


 
 
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

 
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
 
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்


ஆறாம்  அதிகாரம் – வாசஸ்தானம்


ஐயா அவர்கள் ஆதியில் காரைமா நகரிலுள்ள தமது கிருகத்திலும், பின் அவ்வூரை யடுத்த முத்துப்பட்டணத்தில் புதிதாக  அமைக்கப்பெற்ற இல்லத்திலும் வசித்து வந்தார்கள்.

 காரைமா நகர் அறுபத்துமூவர் குருபூசை மடாலயத்தில் நாடோறும் ஸ்நானஞ்செய்து சிவபூஜை பண்ணிச் சிவதரிசனஞ் செய்துகொண்டு திருவமுதருந்துவதற்கு முத்துப்பட்டணத்துக்குப் போய்வருவது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

 பின்பு தமது இரண்டாவது மனைவியார் சிவபதமடைந்தபின், முற்கூறிய குருபூசை மடத்திலேயே வாசஞ்செய்து கொண்டும், தவசிப்பிள்ளை பாகஞ்செய்து கொடுக்கப் பகலில் ஒருவேளை திருவமுது செய்துகொண்டும், இரவில் பால் பழம் ஆகிய சாத்துவிக உணவருந்தியும் வந்தார்கள்.

 அதன்பின், திருஞானசம்பந்தப்பெருமான் தம்முடைய திருமணந் தெரிசிக்க வந்தோர் யாவருக்கும் கொள்ளைகொள்ள வீடுதவிய திவ்விய ஸ்தலமாகிய திருநல்லூர்ப்பெருமண மென்னும் ஆச்சாபுரத்திற்குச் சென்று, அவ்வூர் மிராசுதார் பொன்னுச்சாமி முதலியாரவர்களை பக்கத் துணையாகக் கொண்டு, அந்நகரில் தமது தமக்கையாரின் புத்திரராகிய காரைமாநகர் அ.வீர. ராம. சொக்கலிங்கச் செட்டியாரால் குருபூசைமடம்  ஸ்தாபிக்கச் செய்து அறுபத்துமூன்று நாயன்மார் முதலியோர் குருபூசைகள் என்றும் நடைபெற்று வரத் திட்டம் அமைப்பித்து நடைப்பெறச் செய்து, அத்திருமடத்திலேயே முதல் தேவார பாடசாலையும் ஸ்தாபித்து நடத்திவரச் செய்து, அப்பாடசாலை மாணாக்கர்களுக்கு சைவ இலக்கண, இலக்கிய பாடங்களைத் தாமே போதித்து கொண்டுமிருந்தார்கள்.

அங்கே இருக்குங் காலத்தில், “ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத் தமிழ்”, “போற்றிக்கலி வெண்பா”, “திருவூசல்” என்ற பிரபந்தத் திரயமும் அத்தீச்சுரப்புராணமும் பாடி வெளியிட்டார்கள். அந்த தலத்தில் பல அன்பர்களைக் கொண்டு ஆகம பாடசாலை, வேத பாடசாலை, பசுமடம், திருநந்தனவனம் முதலிய சிவ தருமங்களைச் செய்வித்தும், காரைமா நகரை யடுத்த முத்துப்பட்டணம் பெரி. நா. நா. நாராயணச் செட்டியாரவர்களைக் கொண்டு திருஞான சம்பந்த சுவாமிகள் திருக்கோயில், பெரிய மண்டபம், உத்சவ மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்வித்து, கும்பாபிஷேகம் செய்வித்தும் அத்தலத்திலே மேற்கூறிய அறுபத்துமூவர் குருபூசை மடத்தில் நித்திய நியம சிவபூசாதி பாராயணங்கள் செய்துகொண்டும் திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோகத்தியாகேசரையும், திருஞான சம்பந்த பெருமானையும் தரிசனஞ் செய்துகொண்டும் இன்புடன் இருந்தார்கள்.

பின்னர் ஸ்ரீசிதம்பர ஸ்தலவாசஞ் செய்ய முன்னினார்கள். அச்சிதம்பர விசிட்டாமாவது:-

      “அத்தன் பரதத் துவனித் தநடத் தமரும்

           பொதுவின் பெயர்மன் றமலஞ்

     சத்தும் பரிரண் மயகோ சமகத்

           தனிபுண் டரிகங் குகைவண் ககனஞ்

     சுத்தம் பரமற் புதமெய்ப் பதமச்

           சுழுனா வழிஞா னசுகோ தயநற்

     சித்தம் பரமுத் திபரப் பிரமந்

           திகழுஞ் சபைசத் திசிவா லயமே”.

      “என்றின் னமநே கமநே கமெடா

           வேரார் பொதுவின் பேரா ரணநூ

     னின்றென் றுமியம் பிடுமின் னுமிதி

          னேரே யெனவிங் காரே யறிவா

     ரன்றந் நிலையத் தலைவன் னிலைகண்

           டவருண் டெனவின் றுணற்கின் றனமான்    

     மன்றந் தெரியத் தருமென் றருளால்   

           வளர்சிந் தைதெளிந் தனன்மா முனியே.”

என்று கோயிற்புராணத்தில் விரித்தருளிச் செய்தபடி ஞான சபையின் பெயர்களை இன்னும் பலவாக வேதநூல்கள் எடுத்து எக்காலமும் கூறும் என்று அதன் மகிமைகளைத் தெளிந்து, அங்கிருந்த வியாக்ரபாத முனிவரும்; தில்லைவனத்தில்.

     “மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன்றுண்டாங்

     காடுது மென்றும்” எனவும்.

      “மற்றது சிதம்ப ரத்த வாய்மையான் மாயா நீர்மைப்

     பற்றுடனழியா தென்றும் பயின்றுள துயிர்களெண்ணி

     னற்றவஞ்ச் செய்தா னீடு நாடரு ஞான நாட்டம்

     பெற்றவர் காண்பார் காணப் பெறாதவர் பிறப்பரன்றே.”

 எனவும், சிவபிரானால் உபதேசித்து நேரில் அனுக்கிரகிக்கப்  பெற்ற ஆதிசேடனாகிய பதஞ்சலிமா முனிவரும்; நித்தியானந்த நடன தரிசனங்கண்டு பேரானந்தப் பெருவாழ்வு பெற்ற சிற்சபை பிரகாசிக்கின்ற உத்தமோத்தமமான தில்லைவனமென்னும் சிதம்பர ஷேத்திரத்தின் கண்ணே, எட்டாம் அதிகாரத்தில் விவரிக்கப்படும். ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையை ஸ்தாபனஞ் செய்து, அதில் அறுபத்துமூன்று நாயன்மார் முதலியோர் குருபூசையும், சைவ இலக்கிய இலக்கண சித்தாந்த சாஸ்திர பாடங்களும், நடைப்பெறச் செய்து, சைவசமயத்தை விருத்தி செய்துகொண்டும் சிவதரும முதலியவைகளை நடத்திக்கொண்டும், ஸ்ரீமந் நடராஜப் பெருமானுடைய குஞ்சிதபாத தரிசனானந்தப் பெருவாழ்வுடையவராய், சிவத்தியான ஞானயோக சீலராய் “சொக்கலிங்க தேசிகராச்சிரம” மென்று சொல்லத்தக்க அவ்வித்தியாசாலையிலேயே வாசஞ் செய்துகொண்டிருந்தார்கள்.

ஐயா அவர்கள் காரைமாநகரில் இருந்தது பிரமசரிய ஆச்சிரமமும் முத்துப்பட்டணத்தில் இருந்தது கிருஹஸ்தாச்சிரமமும், காரைமாநகர் அறுபத்துமூவர் மடத்திலும் ஆச்சாபுரம் அறுபத்துமூவர் மடத்திலும் இருந்தது வானப் பிரஸ்தாச்சிரமமும் தில்லைவனமாகிய சிதம்பர தலத்திலிருந்தது சந்நியாச ஆச்சிரமமும் ஆமென்று சொல்லத்தக்கதாகும்.  


இன்னும் காரைமாநகர் அறுபத்துமூவர் மடாலயத்திலிருந்து சரியை கிரியைகளை யனுட்டித்ததும், ஆச்சாபுரத்திலிருந்து யோக நிலையை யனுட்டித்ததும், சிதம்பரத்திலிருந்து ஞான நிலையை அனுட்டித்ததும் ஊகிக்கதக்கதாம்.

 
ஆறாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

15 comments:

  1. நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்.முழுவதும் படிக்க ஆவல் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
      இன்னும் ஆறு அதிகாரங்கள் மீதமுள்ளன. சீக்கிரம் தட்டச்சு செய்து விடுகிறேன்.

      Delete
  2. முத்துப் பட்டினம் என்பது தூத்துக்குடியா?
    காரை காரைக்கால் ...
    நற்பணி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புதுக்கோட்டையில் தானே இருக்கிறீர்கள்.
      காரை - காரைக்குடி
      முத்துப்பட்டணம் - காரைக்குடியில் இருக்கும் ஒரு பகுதி.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது சார்.

      Delete
  3. தங்களின் தமிழ்ப் பணி தொடரட்டும் நண்பரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  4. நல்ல பதிவு நண்பரே வளர்க உமது தொண்டு... அடுத்து ஏழாம் அதிகாரம் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அடுத்து ஏழாம் அதிகாரம் இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்திலோ வரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. சைவத்திரு சொக்கலிங்க அய்யா அவர்களின் வரலாற்றினைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
    அறிய ஆவலாய் உள்ள அரிய தகவல்களை அளித்து வரும் தங்கள் பணி போற்றுதற்குரியது.
    தொடருங்கள்.
    தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  6. தமிழ் பணி தொடரட்டும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  7. நேற்று படிக்க ஆரம்பித்து இதோ இன்றுதான் முடிக்க நேர்ந்தது!தொடர்ந்து படித்தும் வருகின்றோம். தங்கள் சைவப் பணி பாராட்டற்குரிய ஒன்றே! இத்தனைத் தகவல்களையும் தொடுத்து அருமையாக வழங்கி வருகின்றீர்கள்! தொடரட்டும் தங்கள் பணி! நாங்களும் தொடர்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மக்ழ்ச்சியாக இருக்கிறது. தங்களை போன்றோர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னால் இந்த பணியை செய்ய இயலுகிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்/கீதா சகோதரி

      Delete
  8. நல்ல பதிவு சகோ கொஞ்சம் மிஸ் பண்ணிவிட்டேன் முழுவதும் பார்க்க வேண்டும். பார்க்கலாம். நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete