(சிலையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் தீவிர ரசிகர்)
(இவரை மாதிரியானவர்கள், எப்போவாவது தங்களின் பெற்றோரை இப்படி வணங்கி இருப்பார்களா???)
தங்கள் அபிமான நடிக நடிகையரின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான வெறியை
எப்போது தான் இந்த ரசிகர்கள் விலக்கிக்கொள்ளப்போகிறார்களோ? திரைப்படம் என்பதை ஒரு பொழுதுபோக்குக்கான அம்சமாக பார்க்காமல், அதில் நடித்திருக்கும் தங்கள் அபிமான நடிகர்கள் ஏதோ பெரிய சாதனையை செய்து
விட்டார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களை பாராட்டி, சீராட்டி கொண்டாடுகின்ற கூத்துக்களை எல்லாம் பார்க்கும்போது, இவனுங்க எல்லாம் என்னைக்கு தான் திருந்தப்போறாங்களோன்னு நினைக்கத் தோன்றும்.
சில வருடங்களுக்கு முன்பு, நடிகை குஷ்பூவின் அதிதீவிர ரசிகர்கள்
அவருக்கு ஒரு கோயிலை எழுப்பி ஒரு மானங்கெட்ட செயலை செய்தார்கள். இப்போது நடிகர் விஜய்யின்
உருவ சிலையை வடிவமைத்து, நீங்கள் குஷ்புவிற்கு கோயில் எழுப்பினால், நாங்கள் எங்கள் நடிகருக்கு சிலை எழுப்புவோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த சிலை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கு வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இப்படி
ரசிகர்கள் பைத்தியமாய் நடிகர்களின் பின்னால் அலைகிறார்கள். இப்படி தங்களின் குடும்பத்தை
கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருப்பவர்களை என்ன சொல்வது!. உண்மையில் இவர்களால், இவர்களது குடும்பம் நன்மை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே தான்.
சரி, இவர்களாவது பரவாயில்லை, தங்களின் பணத்தையும் நேரத்தையும் தான் வீனடித்திருக்கிறார்கள். வேறு ஒரு ரசிகரோ, தன்னுடைய உயிரையே அந்த நடிகருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். கத்தி படத்தை
பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், அங்கே வைக்கப்பாட்டிருந்த
நடிகர் விஜய்யின் மெகா கட்அவுட்டிற்கு, பாலாபிஷேகம் செய்ய வேண்டும்
என்று எண்ணி, அந்த கட்அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கால் தடுக்கி கீழே விழுந்து உயிர் துறந்திருக்கிறார். இந்த சம்பவம்
நடந்தது தமிழ்நாட்டில் இல்லை, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில்
இருக்கும் வடக்கன்சேரியாகும். அந்த ரசிகரின் பெயர் உன்னியாம். விலைமதிப்பில்லாத உயிரை, நடிகருக்கு பாலாபிஷேகம் செய்யப்போய் மாய்த்திருக்கிறார். சில காலங்களுக்கு
முன்பு, விஜய்,அஜீத் ரசிகர்கள் மோதிக்கொண்டு, உயிர் விட்ட சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.
இம்மாதிரியான ரசிகர்கள் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஹைடெக் ரசிகர்கள்,
அதாவது முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின்
நடிகர்களை பின் தொடர்பவர்கள்.இவர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமல், இணையம் வாயிலாக மோதிக்கொள்பவர்கள்.
இந்த நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கிறவர்கள்.
பாழாய்ப்போன இந்த ரசிகர்கள் தான் தங்களின் கைக்காசைப்போட்டு அவர்களின் படத்தை பார்த்து, அதனை ஓட வைப்பவர்கள். இவையெல்லாம் தெரிந்தும் கூட, இந்த பைத்தியக்கார ரசிகர்கள் அவர்களின் பின்னால் சென்று தங்கள் வாழ்க்கையை
தொலைப்பது தான் வேதனையான விஷயம்.
பின்குறிப்பு:
கேரள ரசிகர் உயிர் இழந்த சம்பவம் அந்த நடிகருக்கு தெரிந்திருக்குமா?(படங்கள் உதவி - தட்ஸ்தமிழ் இணையம்)
தமிழ் நாட்டில் தான் நடிகர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் வீணே செலவு செய்யும் ‘இரசிகர்கள்’ இருக்கிறார்கள் என எண்ணியிருந்தபோது படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிலும் இந்த அவலம் இருக்கிறது என அறியும்போது வருத்தமாக இருக்கிறது.
ReplyDelete//கேரள ரசிகர் உயிர் இழந்த சம்பவம் அந்த நடிகருக்கு தெரிந்திருக்குமா?//
சிட்னியில் இருக்கிற உங்களுக்கே தெரியும்போது அவருக்கு தெரியாமல் இருக்குமா? நிச்சயம் ஒரு அனுதாப அறிக்கை வெளியிடுவார். அவ்வளவே.
உடனே முதலாவதாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteமக்களின் ரசனை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி ஆகிவிட்டது. முன்பெல்லாம் தரமான மலையாளப்படங்களில் வெளி நாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. குறைந்த பட்ஜட்டில், மிகபூம் தரமான படங்களை மலையாள திரைப்படத்தினர் வெளியிடுவார்கள். ஆனால் இப்போதோ அங்கும் வெளிநாடுகளில் சென்று பாடல்களை படம்பிடிக்கும் முறை வந்துவிட்டது.
அந்த நடிகர் தன்னுடைய சிலையப் பற்றி இன்னும் மூச்சே விடவில்லை, பார்ப்போம் இறந்த அந்த ரசிகருக்காக அனுதாப அறிக்கையாவது வருகிறதா என்று!!!
Super Nanpare.... Netrutan Madurai Vazha Medaiyil Ivakalaippatri Pesinen Inru Athanaikurithu Pathivu.
ReplyDeleteஆஹா, தாங்கள் பேசியதை குறித்தே இந்த பதிவா. மகிழ்ச்சியாக இருக்கிறது.
Deleteநடிகன் மாறுவான்
ReplyDeleteகாலம் மாறும்
ரசிகர்கள் மாறுவார்கள்
ஆனால்...
இந்தப் பழக்கம் மட்டும் வியாதி போல்
தொற்றிக் கொண்டே வருகிறது.
நமது பண்பாடுகள்,மொழிகள் என இவர்கள் பின் பற்றாமல் ....
இதை மட்டும் உடனே பின் பற்றுகிறார்கள்.... என செயவ்து.
பாவம் அந்தக் குடும்பத்தார்.
நல்லதை பின்பற்றுவது மிகவும் சிரமம். ஆனால் இந்த மாதிரியான பழக்கங்களை பின்பற்றுவது எளிது.
Deleteஅந்த குடும்பத்தார் பாவம் தான், இப்படிப்பட்ட ஒரு மனிதன் தங்களின் குடும்பத்தில் ஒருத்தராக இருந்ததற்கு.
இந்த ரசிக கண்மணிகள் திருந்த மாட்டார்கள்! திருந்தவும் விடமாட்டார்கள்!
ReplyDeleteஅவர்கள் திருந்தினால் ஆச்சிரியம் தான்.
Delete//(இவரை மாதிரியானவர்கள், எப்போவாவது தங்களின் பெற்றோரை இப்படி வணங்கி இருப்பார்களா???)//
ReplyDeleteசாட்டையடி கேள்வி சகோ !!..நம் நாட்டில்தான் இம்மாதிரி கேவலங்கள் அரங்கேறுது ..
ஒரு நடிகர் பணம் வாங்கறார் அதுக்கு நடிக்கிறார் தட்ஸ் ஆல் ..அதுவும் இன்னிக்கு ஒரு விளம்பரம் நாளைக்கு ஒரு விளம்பரம் ..எல்லாம் பணத்துக்கு :(
பால் அபிஷேகம் :( எத்தனை பிள்ளைகள் பாலின்றி செத்து போயிருப்பாங்க பசியால் இவங்களைஎல்லாம் உணவு போடாம தனி ரூமில் அடைச்சிவைக்கணும் .பசியின் கொடுமை தெரிஞ்சா பாலை வீனாக்கியிருக்க மாட்டாங்க ..
.அதுவும் அந்த வணக்கம் போட்டு பக்தி பரவசமா இருக்காரே ..யப்பா .முடியலை சாமி !! .தன்னை பெற்றவங்களுக்கு ஒரு வாய் சோறு தண்ணி கையால் கொடுத்திருக்குமா அந்த கும்பிடு போடுபவர்
கட்டவுட்டில் விழுந்து செத்து போனவருக்கு ரசிகர் மன்றம்மூலம் ஒரு தொகை தரப்படலாம் ! ஆனா போன உயிர் :( ??
உண்மை தான் சகோ. எத்தனை குழந்தைகள் பால் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் சொல்வது மாதிரி செய்யவேண்டும். அப்போதாவது அவர்களுக்கு புத்தி வருமா என்று தெரியாவில்லை.
Deleteபோன உயிர் அவ்வளவு தான்.
தாங்கள் இந்த பதிவை தங்களின் பதிவில் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோ.
சிந்தனைக்குறிய பகிர்வு.. வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்.
Deleteகூத்தர்கள் கூழுக்கு ஏங்கி ஊர் ஊராக அலைந்த காலங்கள் உண்டு.
ReplyDeleteகூத்தாடிக் கூட்டம் என்று இகழப்பட்டதுண்டு. பரம்பரை பரம்பரையாய் வேறு தொழில் அறியாதோராய் இரந்து வாழும் வாழ்வைப் பெற்றதுண்டு. அவர்கள் உண்மையில் கலைஞர்கள். தங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தாங்கள் சார்ந்த கலைக்காக அர்ப்பணித்து அவல வாழ்வு வாழ்ந்தவர்கள்.
ஆனால் காலத்தின் சுழற்சி இன்று வேறுவிதமாய்த்தான் இருக்கிறது.
பணம் சம்பாதிக்கவும் பிழைப்பு நடத்தவும் பின்பு வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்து மணிமுடி சூடவும் நடிகர்களுக்கு ஆசை வந்திருக்கிறது.
நடிப்பு.. அரசியலுக்கு இன்று மூலதனமாகிவிட்டது.
நம்மவர்களும் நிஜமென்று நிழலின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்!
உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய பதிவு அய்யா!
ஆனால் என்ன
செவிடன் காதில் ஊதுகின்ற சங்கினைப் போலத்தான் இவர்களுக்கு இதைச் சொல்வது!
நன்றி
உண்மை. உண்மை. தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யமான உண்மை. காலங்கள் மாறிவிட்டது. இன்று நடிகர்களின் சம்பளம் கோடிக்கணக்கில். அதில் பாதிக்குமேல் கருப்பு பணம். என்ன சொல்வது.
Deleteசகோதரி உமையாள் சொன்னது போல் நடிகர்களும் மாறுகிறார்கள், ரசிகர்களும் மாறுகிறார்கள். ஆனால் இந்த அவலமான நிலை தாண் மாறவில்லை.
சிலர் சாதனை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்க செய்யாவார்கள் இந்த மாதிரி உள்ள லூசுங்களோ
ReplyDeleteதங்களைப்பற்றி இந்த சமுகம் பேச வேண்டும் என்ற மனவியாதிதால்தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள்
அட, ஆமாம் இல்ல - நானும் இவர்களைப் பற்றி பேச வைத்து விட்டேனே.. ஆனால் என்ன எதிர்மறையாகத்தான், தங்களைப் பற்றி பேசுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை. எப்படியோ தங்களைப் பற்றி பேசினால் போதும் என்று நினைத்து விட்டார்கள்.
Deleteதமிழகமே சினிமாவையும் அரசியலையும் சுற்றித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.. என்ன எதிலுமே உருப்படியான புரிதல் இல்லை என்பது தான் வேதனையான வேடிக்கையான விசயம்...
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteநான் சென்ற மார்ச் மாதம் இந்தியா வந்திருந்தபோது, தங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது. ஸ்பை மட்டும் சந்தித்தேன். அடித்த முறை கண்டிப்பாக சந்திப்போம்.
எப்போது தான் திருந்துவார்களோ.....
ReplyDeleteஎம்.ஜி.ஆர். சிவாஜி காலத்திலிருந்தே நம் மக்களுக்கு சினிமாவின் மேலும், குறிப்பாக சினிமாவில் நடிப்பவர்கள் மீதும் இப்படி அதீதமான வெறி இருப்பது தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
இந்த மாதிரி ரசிகர்கள் திருந்திவிட்டால் நாட்டில் பெரிய பிரளயமே வெடித்துவிடும்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே....
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஇன்று பாரதி இருந்தால், இவர்களைப் பற்றி நிச்சயமாக பாடியிருப்பான்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பதிவு! நம் நாட்டில் என்று இந்த சினிமா, அரசியல் மோகம் ஒழியுமோ அன்றுதான் நம் நாடு திருந்தும். இந்த இடுகை எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை....ஒருவேலை நேற்று வலைத்தளம் பக்கம் வரமுடியாமல் ஆனதால் இது மிகவும் கீழேபோய்விட்டது நண்பரே! மன்னிக்கவும் நண்பரே! தாமதத்திற்கு.
ReplyDeleteநண்பரே! நாங்கள் இதைப் பற்றித்தான் எழுதி ஒரு இடுகை இன்று இடலாம் என்று உள்ளோம். இன்று துளசி கீதாவிற்கு அதை டிக்டேட் செய்வதாக இருக்கின்றார்! நணப்ரே! நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்தானே! எங்களது இந்த சம்பவம் குறித்த இடுகை சற்று தாமதாமாகி விட்டது!
தாமதத்துக்கு எல்லாம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் துளசி சார். நண்பர்களிடத்தில் மன்னிப்பு எல்லாம் தேவை இல்லாத ஒன்று. நானே வாரத்தில் எல்லா நாட்களும் வலைப்பூவிற்கு வருவதில்லை. என்னிடம் போய் நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள். (என்ன கொடுமை சார் இது!!!). தங்களுக்கு எப்ப முடிகிறதோ அப்ப வந்து பாருங்கள்.
Deleteஇந்த செய்தி ஒரு பொதுவான செய்தி. அதனால் யார் வேண்டுமானாலும் அதனை அவர்கள் பணியில் எழுதலாம். தாராளமாக எழுதுங்கள். இப்படி நிறைய பேர் எழுதினால்தான், அந்த செய்திக்கு வீரியம் அதிகமாக இருக்கும். சீக்க்ரியம் எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே! இதொ இன்று பதிவிடல் இன்னும் சில மணி நேரத்தில்...கீதா பதிவிட்டுவிடுவார்..துளசி டிக்டேட் செய்துவிட்டார். பதிவேற்றம் எல்லாம் சென்னைதானே எங்கள் தலைமையகம். கீதாவின் பொறுப்பில் இனி.....
Deleteதங்களது நட்பு எல்லாம் கிடைத்தற்கு எங்களுக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா! நண்பரே! மிக்க நன்றி!
இவர்களையெல்லாம் துபாய்க்கு கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கம்பெனிக்கு விசா கொடுத்து என்னை இவர்களை வேலை வாங்கும் ஸூப்பர்வைசராக போட்டு 6 மாதத்திற்க்கு ஒப்படைக்கவேண்டும் வாழ்வியல் தத்துவத்தை மூன்றே வாரத்தில் உணர்த்தி விடுவேன் நண்பரே....
ReplyDeleteநீங்கள் இப்படியெல்லாம் செய்வீர்கள் என்று தான் அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள்.
Delete