Friday, June 1, 2012

காதல் – காதலியை முதன் முதலில் சந்தித்த தினம்


    “என் விழிகளுடன் உன் விழிகள் 
     கலந்த அந்த நொடியில்,
     என் இதயத்தில்
     மொட்டாக இருந்த காதல் பூ
     மலர்ந்தது”.


வழக்கம் போல இந்த ஆண்டும், திருவிழாவுக்காக ஊருக்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும், திருவிழாவிற்கு வருவதற்கு முன், எப்படியாவது எனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு வருவேன். ஆனால் அந்த நினைப்பு நிறைவேறாமலே வேலைப் பார்க்கும் ஊருக்கு திரும்புவேன். இந்த முறை கண்டிப்பாக அந்த நினைப்பு நிறைவேறும் என்று உள்மனசு சொல்லிக்கொண்டிருந்தது. இந்த வருடமாவது, என் தேவதையை கண்ணில் காட்டுங்கள் என்று இறைவனிடம் கோரிக்கையை வைத்து,ஊரில் வலம் வந்தேன். நேற்று வரை, என் கோரிக்கைக்கு இறைவன் செவி சாய்க்கவில்லை. இன்று தான் கடைசி நாள். திருவிழாவோ களை கட்டியிருந்தது. நானும் மற்ற நண்பர்களோட நடந்து கொண்டிருந்தபொழுது, எதிரில் நீ தோழிகளோடு நடந்து வந்து கொண்டிருந்தாய். அப்போது உன் நெற்றியிலிருந்து சில முடிக்கதிர்கள், எங்கே தென்றல் தங்கள் எஜமானியின் முகத்தை தீண்டிவிடுமோ என்று பயந்து முகத்தின் அருகே தென்றலை தீண்டவிடாமல் அரணாக பாதுக்காத்துக் கொண்டிருந்தது. நீயும் அந்த முடிக்கதிர்களை உன்னுடைய மென்மையான விரல்களால் வருடிக் கொடுத்து, முகத்தை பாதுகாத்தது போதும் என்று தூங்க வைத்த நொடியில், உன் விழிகள் என் விழிகளோடு கலந்தது. அந்த நொடியில் தான் என் இதயத்தில் காதல் பூ மலர்ந்தது. நான் என் இதயத்தில் காதல்  மலர்ந்ததில் பரவசப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, நீ என்னை கடந்து சென்று விட்டாய். சுயஉணர்வு பெற்ற நான் உன்னை காணாமல் ஊர் முழுக்க சுற்றி தேடினேன். கடைசியில் உன்னைக் கண்டுப்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினேன்.
 நீ என் கண்களில் இருந்து மறைந்திருக்கலாம். ஆனால் என் இதயத்தில் அழியா ஓவியமாய் இடம் பெற்றுவிட்டாய்.


5 comments:

  1. அப்படிப்போடு அறுவாள!!! இளவட்டத்தில் செய்த குறும்பெல்லாம் இப்ப கதையா வருதா? நல்ல வேளை அந்தக் கருவழியாள் தப்பிவிட்டாள்! அதிர்ஷ்டம் செய்தவள்தான். இங்கே இவர் ஏங்குகிறார் பத்து வயதில் நடந்ததை எண்ணி!

    -அன்பு

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா...

    இது உண்மையா? வருத்தப்பட வேண்டியதுதான். கடைசி வரை தேடி கிடைக்காத பெண்ணை, பெற்றவர்களே மணப்பெண்ணா ஆக்கிட்டாங்கன்னு முடிச்சிருக்கலாம் அண்ணா... நீங்கள் முடிசிருக்குறது கொஞ்சம் வலிய கொடுக்குது.

    ReplyDelete
  3. முதல் முதலாக வருகைப்புரிந்ததற்கும், கருத்துக்கும் நன்றி சகோதரா.
    சில சமயம் எனக்கு சோகமான முடிவு தான் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  4. மறுபடியும் பிளாஷ் பேக்கா?! பின்னுங்க!

    ReplyDelete
    Replies
    1. என்னப் பண்றது, பிளாஷ் பேக்கை நினைக்கிறதே வாழ்க்கையாகிப் போச்சு.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete