படங்கள் உதவி - கூகிள் ஆண்டவர்
அக்டோபர் 1ஆம் தேதி “உலக முதியோர் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த
“சர்வதேச முதியோர் தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் எனக்கு இம்மாதிரி தினங்களை கொண்டாடுவதில் உடன்பாடில்லை.
ஆனால் இன்றைய அவசர உலகில் இம்மாதிரியான தினங்கள் அவசியம் தான் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து
விட்டது. குறைந்தபட்சம் இம்மாதிரியான தினங்களை ஒரு விழிப்புணர்வு தினமாகவாவது நினைக்க
தோன்றுகிறது. “பெண்கள் தினம்”, “ஆண்கள் தினம்” (இந்த தினம் அதிகம் பிரபலமடையவில்லை
– ஆண்கள் எல்லாத்திலும் விட்டுக்கொடுத்து போவது தான், பிரபலமடையாமல்
இருப்பதற்கு காரணம்), “அன்னையர் தினம்”, “தந்தையார் தினம்” என்கிற வரிசையில் “முதியோர் தினமும்” சேர்ந்து விட்டது. இன்றைக்கு இந்த விழிப்புணர்வு
தினம், மிகவும் அவசியம் தான். பெற்றோர்கள் தங்களின் கடமையாக பிள்ளைகளை
படிக்க வைத்து, வாழ்க்கையில் அவர்கள் முன்னேற வழி வகுக்கிறார்கள்.
ஆனால், பிள்ளைகளோ, வளர்ந்த பின்பு, பெற்றோர்களை பாதுக்காப்பது தங்களின் கடமை என்பதை மறந்து, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், அவர்களின்
தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதும், இன்னும் ஒரு சில பிள்ளைகளோ, தங்களின் தேவைக்கு அந்த வயதான பெற்றோர்களை வேலைக்கு அனுப்புவதும் உலகம் முழுவதிலும்
நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இங்கு சிட்னியிலும், நான் அலுவலகத்துக்கு செல்லும் வழியில், ஒரு சில முதியவர்கள்
சாலையோரத்தில் உட்கார்ந்து, பிச்சை எடுக்கும் அவலத்தை பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பக்கத்தில் ஒரு அட்டையில் “Domestic Violence. Homeless now.Help needed” என்கிற வாசகங்கள் இருக்கும். அவர்களிடம்
சென்று அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கலாம் என்று எண்ணுவேன். ஏனோ, அவர்களை காட்சிப் பொருளாக ஆக்குவதற்கு மனம் இடம் கொடுத்ததில்லை.
இங்கும் முதியோர் இல்லங்கள் நம் நாட்டைப் போல் நிறைய இருக்கின்றன.
ஓவியாவின் முதல் பிறந்த நாளை, இந்த மாதிரி ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் கொண்டாடலாம்
என்று நினைத்தோம். ஆனால் வெளி மனிதர்கள் யார் வேண்டுமானாலும் முதியோர் இல்லங்களுக்கு
சென்று இந்த மாதிரி நிகழ்வுகளை கொண்டாட முடியாது, முதியோர் இல்லத்தில் இருப்பவர்களின்
சொந்தக்காரர்கள் மட்டும் தான், இந்த மாதிரி நிகழ்வுகளை கொண்டாடமுடியும்
என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் தான், அடாடா, நாம் நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
அன்றைக்கு கூட்டுக்குடும்பமாக இருந்த கால கட்டத்தில், இவ்வளவு வியாதிகள் வந்ததில்லை.
மேலும் எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் சென்றதுமில்லை. அதற்கு காரணம் பெரியவர்கள் கூறும்
“பாட்டி வைத்தியம்” தான். இன்றைக்கு அந்த பாட்டி வைத்தியம், மறைந்து
கொண்டு வருகிறது. நாம் சாதாரண சளி பிடித்தால் கூட மருத்துவரிடம் செல்வது பழகிவிட்டது.
இன்றைய நவநாகரிக உலகில், பாட்டி, தாத்தாவுடன்
வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த தலைமுறையினர் தான் கூட்டுக்கும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அடுத்த தலைமுறையினராவது, அந்த முற்றுப்புள்ளியை அழிப்பார்களா என்று தெரியவில்லை.
முதியவர்களின் அருமைகைளை தெரிந்து, அவர்களுக்கு உரிய மதிப்பை
அளித்து அவர்களை குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே பிள்ளைகளின் முக்கிய கடமையாகும்.
நாம் வாழ்க்கையில் வேற எந்த நற்செயலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, முதியவர்களை புறக்கணிக்கும் தீய செயலை செய்யாமல் இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
This comment has been removed by the author.
ReplyDeletehttp://www.killergee.blogspot.ae/2014/09/my-india-by-devakottaiyan.html
Deleteஇன்றைய அவசர வாழ்க்கைக்கு தகுந்த பதிவு நண்பரே .. நாளை நமக்கும் இந்நிலை வரும் என்பதை இன்றைய தலைமுறையினர் மறக்ககூடாது என்பதே எமது எண்ணம் எமது புதிய பதிவு My India By Devakottaiyan காண்க...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteதங்களின் அந்த பதிவை படித்து கருத்தும் இட்டுவிட்டேன்.
//முதியவர்களை புறக்கணிக்கும் தீய செயலை செய்யாமல் இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்//
ReplyDeleteஅருமையாக சொன்னீங்க
உண்மையில் அந்த கூகிள் ஆண்டவர் மூலம் பெற்ற படம் மனதை கிழிச்சது ..என்ன ஒரு வேதனை இந்த தள்ளாத வயதில் :(
வெளிநாட்டிலும் எத்தனை பேர்கள் இப்படி இருக்காங்க தெரியுமா !! பாவமா இருக்கும்
சிலர் பெற்றோரை பிள்ளைகளை கவனிக்கவென்றே ஸ்பான்சர் செய்றாங்க அவங்க கொஞ்சம் வளர்ந்ததும் பெற்றோர் ரோட்டில் :( பிறகு அவர்கள் கவுன்சில் வீடுதேடி செல்றாங்க .
நாங்க எங்க ஆலயத்தினருடன் கிறிஸ்மஸ் நேரத்தில் முதியோர் இல்லம் செல்வோம் அதே நேரம் மகள் பிறந்த நாள் வரும் அதனால் எங்களுக்கு வசதி .என் மக எப்பவும் /பாவம் பாட்டி பாவம் தாத்தா /இதை சொல்லிட்டே இருப்பா .
காலத்தின் கட்டாயம் இந்த தினங்களை அனுசரிதாலாவது மக்கள் கருணையுடன் இருக்கட்டும் மூத்தோரிடம்
அந்த படங்களை பார்த்தபோது, எனக்கும் மனது மிகவும் காணத்து விட்டது சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
நினைவில் நிறுத்தப்படும் பலநாட்களில் இதுவும் ஒன்று என்பதற்கு உங்களின் பதிவு தலைப்பே சாட்சி சார், விழிப்புணரவான பதிவு... நம்மை அவர்கள் பார்த்துக் கொண்டதைவிட அவர்களை நாம் நன்றாக பார்த்துக் கொண்டால் தான் சிறப்பு. சினியில் கூடவா வயதான பிச்சைக்காரர்கள்???? உலகம் உருண்டை என்பது சரிதான் போல... நல்ல சமூகப் பதிவுக்கு நன்றி சார்...
ReplyDeleteஎல்லா நாடுகளிலும் வயதானவர்களை புறக்கணிக்கும் இளைய சமுதாயம் இருக்கத்தான் செய்கிறது நண்பரே.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
மிகுந்த வருத்தத்தை தந்த பதிவு..
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது
Deleteகாவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் என்பார்கள்!
ReplyDeleteஅதுபோல் இன்றைய இளமையும் இரத்தத் துடிப்பும் இருக்கும் வரை அந்த முதியவர்களை எண்ணத் தெரியாமல், அல்லது எண்ணத்தை தவிர்த்து வாழ்பவர்கள் நாளை இதே வயோதிக நிலை அடைவார்கள். அதை நினைத்தேனும் முதியவர்களை ஆதரித்து, அனுசரித்து நடக்கலாமே..
மனம் தொட்ட பதிவு சகோதரரே! அருமை!
சரியாக சொன்னீர்கள் சகோதரி.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
// இங்கு சிட்னியிலும், நான் அலுவலகத்துக்கு செல்லும் வழியில், ஒரு சில முதியவர்கள் சாலையோரத்தில் உட்கார்ந்து, பிச்சை எடுக்கும் அவலத்தை பார்த்திருக்கிறேன்.//
ReplyDeleteசிட்னியிலுமா இந்த நிலை!
முதியவர்கள் தினம் கொண்டாடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது வருத்தத்திற்குறியதே.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
எல்லா நாடுகளிலும் இந்த அவல நிலை இருக்கத்தான் செய்கிறது.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
வயதானக் குழந்தைகள்
ReplyDeleteபதிவு மனதினைக் கனக்கச் செய்துவிட்டது நண்பரே
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஇன்றைய கால சுழ்நிலைக்கு ஏற்ற நெஞ்சை தொடுகிற நல்லதொரு பதிவு.
ReplyDeleteமுதியவர்களின் அருமைகைளை தெரிந்து, அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்து அவர்களை குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே பிள்ளைகளின் முக்கிய கடமையாகும். நாம் வாழ்க்கையில் வேற எந்த நற்செயலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை,முதியவர்களை புறக்கணிக்கும் தீய செயலை செய்யாமல் இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
நன்றாக சொன்னீர்கள் திரு. சொக்கன்.
முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் வீட்டில் வைத்து கொள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் அந்த பிள்ளைகள் அவர்களை கொண்டாடவில்லை என்றாலும் அவர்களை மதித்து அவர்களுடன் தினமும் சிறிது நேரம் பேசி குழந்தைகளையும் பேச வைத்தால் அவர்களின் அனுபவங்களில் இருந்து நிறைய தெரிந்து கொள்ளலாம். முதியவர்களும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்
மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி.
Deleteகண்டிப்பாக அவர்களின் அனுபவங்கள் நமக்கு நிறைய கற்று தரும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
வயதான குழந்தைகளை போற்றி வளர்ப்போம். மிக்க நன்றிங்க அய்யா பகிர்விற்கு.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்
Deleteஅவர்களை காட்சிப் பொருளாக ஆக்குவதற்கு மனம் இடம் கொடுத்ததில்லை. // அவர்கள் மனம் நோகுமல்லவா..
ReplyDeleteஎல்லா இடங்களிலும் மனிதர்கள் ஒன்றான எண்ணத்துடன் தான் இருக்கிறார்கள், நாடுகள் மாறலாம் ...வருத்தமாக இருக்கிறது.
இந்த மாதிரி எண்ணங்கள் உடையவர்கள் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய செய்தி.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
''முதியவர்களின் அருமைகைளை தெரிந்து, அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்து அவர்களை குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே பிள்ளைகளின் முக்கிய கடமையாகும்''
ReplyDelete-----------------.அனைவரும் கடமையை உணர வேண்டும் .......பகிற்விற்கு நன்றி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteமனம் நெகிழ செய்த பதிவு. கடைசிப்பந்தியில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் உண்மை. கண்டிப்பா அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். நல்லதொரு பகிவிர்வினை தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteநெஞ்சை உருக்கும் பதிவு. நாமும் இவற்றை எல்லாம் கடக்கவே வேண்டும் எனும் எண்ணம் ஏன் வருவதில்லையோ தெரியவில்லை. இதனையிட்டு வேதனை அடைந்த போது தான் இதை எழுதினேன். முடிந்தால் நீங்களும் பாருங்கள் சகோ. தொடர வாழ்த்துக்கள்....!
ReplyDeletehttp://kaviyakavi.blogspot.com/2014/01/blog-post_6651.html
தங்களின் அந்த பதிவை சென்று படிக்கிறேன் சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
மனதை கனக்கச் செய்த பதிவு..நன்றி சார்
ReplyDeleteமுன்பெல்லாம் எனக்கு இம்மாதிரி தினங்களை கொண்டாடுவதில் உடன்பாடில்லை. //
ReplyDeleteஎங்களுக்கும் உடன்பாடில்லை நண்பரே! எல்லா தினமும் ஒன்றேதான்!...
மனம் கனத்து விட்டது நண்பரே! படங்கள் வேறு அதை இன்னும் கூட்டியது! உலகம் செல்லும் திசையும் அப்படித்தான் இருக்கின்றது!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்/கீதா சகோ.
Deleteயாரும் சொல்லாமல் தான் பெற்றோர் நம்மை வளர்த்தார்கள், ஆனா இப்படி பதிவெல்லாம் போட்டு அவர்கள் பார்த்துக்கொள்ளும்படி சொல்லவேண்டியிருக்கே:(( கனமான, அர்த்தமுள்ள பதிவு சகோ!!
ReplyDelete