Monday, July 16, 2012

நிம்மதி

விடலைப் பருவத்தில்
நண்பனாக இருந்த
தந்தையை இழந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

வாலிப வயதில்
குடும்பத்தின் பாரத்தை
தோள்களில் சுமந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

திருமண வயதில்
திருமணத்தை முடித்து
குழந்தை செல்வத்துக்காக
பத்து வருடங்கள் காத்திருந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

நடுத்தர வயதில்
நிம்மதியை கண்டுப்பிடித்து
விட்டேன் என்று நினைக்கையில்
என்னை செதுக்கி இந்த
நிலமைக்கு கொண்டுவந்து விட்ட
என் தெய்வம் என்னை
விட்டு நீங்கியதினால்
கிடைத்த அந்த நிம்மதியை
மீண்டும் தொலைத்தேன்!
 
இன்று என்னில்
சரிபாதியாக இருப்பவளுக்கு
கண்ணில் பிரச்சனை என்றால்
என்னோடு கூடப் பிறந்தவனுக்கோ
உடம்பில் பிரச்சனை
இப்படி பிரச்சனைகளையே
வாழ்கையில் பார்த்து
மரத்துப் போன மனது
கேட்கிறது,
உன்னால் நிம்மதியை
கண்டுப்பிடித்து வைத்துக்
கொள்ள முடியாதா
என்று!
அதற்கு புத்தி பதில்
கூறியது,
நிம்மதி ஆடும் கண்ணாம்பூச்சி
ஆட்டத்தில், உன்னால்
நிம்மதியை கண்டுப் பிடிக்க
முடிந்தாலும், அது உன்னை
விட்டு சீக்கிரம் மறைந்து விடும்
என்றாவது ஒரு நாள் அது
தன் தோல்வியை ஒப்புக்கொண்டு
உன்னிடம் தானாகவே அடைக்கலமாகும்
ஆனால் அப்போது உன்னால்
அதை அனுபவிக்க முடியாது
என்று!.


1 comment:

  1. இந்த கவிதையை ??? படித்ததினால் எனக்குள் இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் தொலைத்தேன் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete