வலைப்பூ நண்பர்கள் மூவர் அவர்களுக்கு கிடைத்த விருதினை என்னுடன் பகிர்ந்து
இருக்கிறார்கள். இந்த செய்தி அறிந்தவுடன், வலைப்பூவுலகில் நான் என்ன பெரிதாக
சாதித்துவிட்டேன் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவன் தானா என்றெல்லாம்
எண்ணினேன். உண்மையை சொல்வதென்றால், நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து
மூன்று ஆண்டுகள் கூட முற்றுப்பெறவில்லை. பெரும்பாலும் அனுபவப்பதிவுகளைத்தான் நான் எழுதி
கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு சில கதைகளை எழுதியதோடு சரி, பிறகு கதைக்களம் பக்கமே செல்வவில்லை. மனதிற்குள் சில கருக்கள் உருவாகியிருப்பது
என்னமோ உண்மை தான். அவைகள் தொடர்கதைகளாக பிரசவிக்கும் காலம் தான் எப்போது என்று தெரியவில்லை.
இந்த விருதை பெற்ற பிறகு, சீக்கிரம் அந்த கருக்கள் பிரசவிக்க
வேண்டுமே என்று ஆவல் ஏற்படுகிறது.
நான் விருதைப் பெற தகுதியானவன் தான் என்று என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு
விருதினை அளித்த மூவரும் ஆசிரியர்கள். அதாவது
இருவர், ஆசிரியர்களாக தொழில் புரிபவர்கள்.
மற்றொருவர் டியுசன் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தவர். இப்படி ஆசிரியர்கள்
கையால் விருது பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
(படிக்கிற காலத்தில் பெறாததை எல்லாம் இப்போது பெறும்போது சந்தோஷமாகத்தானே இருக்கும்!!!)
எனக்கு விருதை அளித்த ஆசிரியர்கள்:
இவர் கரந்தையில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருடைய வரலாற்று
பதிவுகளின் மூலம், வரலாற்று பக்கங்களை கற்றுக்கொண்டு
வருகிறேன்.
இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் ஸ்ரீ காரியசித்தி கணபதி கோயிலில் குருக்களாக இருப்பவர்.
தமிழ் இலக்கணத்தைப் பற்றி அதிகம் தெரியாமலே, இங்கு தன்னார்வல தமிழ் ஆசிரியராக
இருக்கும் எனக்கு இவருடைய பதிவுகள் தான் இலக்கணத்தை எளிதாக கற்றுக்கொடுத்துக்கொண்டு வருகிறது.
இந்த விருது ஒரு தொடர் விருது. இந்த விருதின் விதிமுறைகள் என்னவென்றால்,
1.
விருதை அளித்த தளத்தினை தளத்தை பகிர வேண்டும்.
2.
விருதினை தளத்தில் பதிய வேண்டும்.
3.
குறைந்தது ஐந்து பேருக்கு இந்த விருதை பகிர
வேண்டும்
4.
விருதினை பெற்ற நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டும்
கம்பனது உவமைகளை எடுத்து கூறும் நண்பர் அன்பு ஜெயா - http://tamilpandal.blogspot.com.au/
ஊக்கமது கைவிடேல் நண்பர் பக்கிரிசாமி - http://packirisamy.blogspot.com/
காகித பூக்கள் சகோதரி ஏஞ்சலின் - http://kaagidhapookal.blogspot.com.au/
சுயம்பு நண்பர் இல.விக்னேஷ் - http://indianreflects.blogspot.com/
நிறைய பதிவுகளில் என்னுடைய சுயபுராணத்தை சொல்லிவிட்டேன். அதனால் என்னைப்பற்றி
சொல்ல ஒன்றும் இல்லை.
முக்கனி போல மூன்று விருதுகள் பெற்றுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசுட!!!!சுட!!! வாழ்த்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
Delete//Chokkan Subramanian September 18, 2014 at 4:29 PM
Deleteசுட!!!!சுட!!! வாழ்த்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.//
தங்களுக்கு மேலும் பல விருதுகள் கிடைக்கலாம்.
2012ம் ஆண்டு மட்டும் எனக்கு 12 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றில் கடைசி மூன்று விருதுகள் ஒவ்வொன்றையும் 108 பதிவுலக நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன்.
மிகவும் இனிமையான நினைவலைகள் அவை.
இதோ அவற்றில் ஒரேயொரு சாம்பிள் இணைப்பு மட்டும் கொடுத்துள்ளேன்.
நேரம் இருக்கும் போது Just கண்ணால் ஒரு glance பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
- அன்புடன் VGK
ஒரே ஆண்டில் 12 விருதுகளும், 108 பேருக்கு பகிர்ந்துக்கொண்டதும் மிக பெரிய விஷயம்.
Deleteவாழ்த்துக்கள் ஐயா.
இது விருது சீசன் ,உங்களுக்கும் கிடைக்கவில்லை என்றால்தான் நம்ப முடியவில்லை என்று சொல்லணும் !வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி பகவான்ஜீ
Deleteமூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன. இனிய வாழ்த்துக்கள் சகோ.
ReplyDelete//வலைப்பூ நண்பர்கள் மூவர் அவர்களுக்கு கிடைத்த விருதினை என்னுடன் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த செய்தி அறிந்தவுடன், வலைப்பூவுலகில் நான் என்ன பெரிதாக சாதித்துவிட்டேன் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவன் தானா என்றெல்லாம் எண்ணினேன். உண்மையை சொல்வதென்றால், நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கூட முற்றுப்பெறவில்லை//
இவ்வரிகளை நானும் எழுத நினைத்தேன். விருது தருபவர்கள் இனிமேலாவது சாதிக்கவேண்டும் எனும் எண்ணத்திலும், ஊக்குவித்து தருவதால் எழுதவில்லை.
உண்மை தான் சகோ. நான் தங்களை மாதிரி யோசிப்பதில்லை. மனதில் தோன்றியதை உடனே எழுதிவிட்டேன். பிறகு தான் அந்த கோணத்தில் யோசித்தேன்.
Deleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ
வாழ்த்துக்கள்! இன்னும் பல விருதுகளையும் பெருமைகளையும் அடைய இது ஓர் ஆரம்பமாக அமைய்ட்டும்! நன்றி!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteஒரே நேரத்தில் மூன்று பதிவர்களிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பல விருதுகள் தாங்கள் பெற விழைகின்றேன்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteவாழ்த்துக்கள் நண்பா. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமுதல் முறையாக வருகைபுரிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
Deleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா
மூன்று விருதுகள் பெற்ற முத்தமிழ் அறிஞருக்கு எமது முத்தான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதே இரண்டு ஆசிரியர்கள்தான் எனக்கும் கொடுத்தார்கள்.
சரி, நண்பரே... தலைப்பை டி.எம்.சௌந்தரராஜன் குரலில் பாடலாமா ?
நான் ஒரு சாதாரணமானவன்.முத்தமிழ் அறிஞர் என்று கூற எல்லாம் வேண்டாம்.
Deleteஅதற்காக தானே அந்த தலைப்பையே கொடுத்தேன். எனக்கு தெரியும் உங்களின் குரல் வலம் மிக அருமை என்று.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்குமாய்/
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteபகவான் பாஸ் சொல்றது தான் சரி:)) உங்களுக்கு கிடைக்கலைனா தான் வியப்பு!! ஹட்-ட்ரிக் அடித்த சகோவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ
Deleteமூன்று விருதுகள் பெற்றுள்ளீர்களா? அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteஎனக்கும் உங்களைப் போன்றே மூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன.
உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொள்பவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
Deleteதங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteவாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதகவல் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteமுதல் முறையாக தங்கள் தளத்திற்கு என் வருகை...
ReplyDeleteமனம்கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே விருது பெற்றமைக்கு...
முதல் முறையாக வந்ததை கண்டு மனது மகிழ்ச்சி கொள்கிறது நண்பரே.
Deleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ட்ரிப்பிள்!!!! வாழ்த்துக்கள்! நண்பரே! தாங்கள் விருது பெற தகுதியானவரே! தாங்கள் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்! உங்களை நாங்களும் லிஸ்டில் வைத்திருந்தோம்....மைதிலி அவங்க கொடுத்து பகிர்ந்ததுனால இன்னும் நிறைய பேர் இருப்பாங்களே பகிர யாராவது விட்டுப் போய் உள்ளனரோனு மாத்தினோம்.....அப்படின்னா 4 ஆகியிருக்கும்!!!!!
ReplyDeleteமூன்றே அதிகம் தான் துளசி சார். என்னையும் தங்களின் லிஸ்ட்டில் வைத்திருந்ததுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
Deleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி துளசி சார்
வாழ்த்துக்கள் ...
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே
Deleteமுத்தான மூன்று விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரரே.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி
Deleteவிருதினை பெற்றதற்கும் மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள் திரு. சொக்கன்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி
Deleteசொக்கா
ReplyDeleteமும்மூர்த்திகளின் விருதினை பெற்றமைக்கு எனது பாராட்டுகள்.
ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிளி பெற எமது வாழ்த்துக்கள்
தங்களின் வழ்ழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணன்
Deleteமேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ....!
ReplyDelete