சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
ஐயா
அவர்கள் பாடஞ்ச்சொல்லுந் தன்மையில் மாணாக்கரிடத்துப் பொருள் அபேஷை இன்றி அவர்கள் தமக்குத்
தொண்டேனுஞ் செய்யவேண்டு மென்னும் நோக்கமும் இல்லாமல், பாடஞ்ச் சொல்லுதல் உத்தம
சிவதருமம் என்னும் ஒன்றே கருதி, வந்த மாணாக்கர்கட்கு உரிய காலந்தோறும்
அவர்கள் சௌகரியத்தை அனுசரித்தும், சலியாமலும், மிகுந்த பற்றுடன் முகமலர்ச்சியோடிருந்து தமிழில் ஆரம்பக்கல்வி முதல் இலக்கணம், நீதிநூல், இதிகாசம், புராணம், சித்தாந்த சாத்திரம் வரை பாடஞ்ச் சொல்லி வந்தார்கள்.
“குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
அமைபவ னூலுரை யாசிரி யன்னே.”
என்ற ஆசிரியராகத்
தக்கவர் இலக்கணத்துக்கும்,
“ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி நோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப”.
என்ற
பாடஞ்சொல்லும் இலக்கணத்துக்கும் இலக்கியமாகவுள்ளவர்கள், மேலும் மற்கட சம்பந்த நியாயமாகத்
தொடர்ந்து வருகின்ற மாணாக்கர்கட்கு அதிப்பிரியத்தோடு பாடஞ் சொல்வது மன்றி, அவ்வாறு வாராத மாணாக்கர்களையும் மார்ச்சார சம்பந்த நியாயமாக வலிந்தழைத்து
அவர்களுக்கும் பிரியத்தோடு பாடஞ் சொல்லுவார்கள். பாடஞ்சொல்லி வரும்பொழுது காலம் மிகுதியானாலும்
சலிப்பின்றிச் சந்தோஷமாகவே பாடஞ் சொல்லுவார்கள். மேன்மேலும் அநேகர் வந்து பாடங்கேட்டு
நன்னிலைமைக்கு வரவேண்டும் என்ற அவாவே இவற்றிற்கெல்லாங் காரணமாமென்க.
பெரியபுராணம்
ஆராய்ந்து அதன் திட்பநுட்ப நோக்கக் கருத்துக்களை யறிந்து போதிப்பதில் ஐயா அவர்கள் அதிமேதாவி
யானவர்கள் என்பது யாவரும் நன்கறிந்ததே! அவ்வாறு மாணாக்கர்களுக்குப் பெரியபுராணம் பாடஞ்
சொல்லும்பொழுது பாட முறையில் வேண்டிய அளவு சொல்லுவதுமன்றி சில சமயங்களில் அந்தப் புராணத்திலுள்ள
அரிய பெரிய விஷயங்களைப் பக்தி மேலீட்டால் பிரசங்காமிருத வருஷமாகப் பொழிந்து, மாணாக்கர்களுக்கும், சபையிலிருப்பவர்களுக்கும் மனதிற் சாத்திரப் பொருளாகிய அமிர்தம் நிறைந்து தங்கிக்
குளிர்ந்திருக்கும்படி செய்வார்கள்.
ஐயா
அவர்களிடத்திற் பாடங்கேட்டுக் கொண்ட மாணாக்கர்கள் பிராமணர், தேசிகர், முதலிமார், பிள்ளைமார், தனவைசியர்
முதலிய எல்லா வகுப்பினருமுள்ளார். அவர்களில் அநேகர் வித்துவசிரோண்மணிகளாகவும், உபன்நியாசகர்களாகவும், தமிழ் பண்டிதர்களாகவும், உபாத்தியாயர்களாகவும் சிறப்புற்றிருக்கின்றனர்.
நான்காம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-----------------------------------
ஐந்தாம் அதிகாரம்
பிரசங்கம்
ஐயாவின் கல்விப்பணியை அறிந்தேன்! அருமை! தொடருங்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteநல்ல விசயங்கள் நண்பரே... உள்ளே போய்க்கொண்டே... இருக்கிறது ஆனால் 7 லில் 4 ஏற்கனவே படித்து விட்டேன் மிகுதி படித்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி.
ReplyDeleteதாங்கள் முழுமையாக படிப்பதைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜீ
"பாடஞ்ச் சொல்லுதல் உத்தம சிவதருமம் என்னும் ஒன்றே கருதி," தான் செய்யும் செயலில் கண்ணும் கருத்துமாக சலிக்காமல் பாடம் செல்லி இருக்கிறார்கள் என்பதை படிக்கும் போதும்....மதிப்பும் ,மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது.நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteஆரம்பத்தில் இருந்து சரியாக தொடரவில்லை சகோ ! தொடர்ந்து படிக்கிறேன். நேரத்தை பிடிப்பது பெரும் பாடாக இருக்கிறது. தொடர்கிறேன் வாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் இல்ல சகோ, எல்லோருக்கும் இந்த நேரத்தை பிடிப்பது என்பது பெரிய பாடு தான்.
Deleteமிக்க மகிழ்ச்சி சகோ, தாங்கள் இதனை தொடர்ந்து படிப்பது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
தோழி இனியா சொன்னதுதான் எனக்கும் சகோதரரே!..
ReplyDeleteஇப்படிப் பட்ட நல்ல விடயங்களை நழுவவிடாமல் இப்படியாவது படித்திடணும் என்று ஆவல் மிகவே. ஆனால் படிக்க வரமுடியாமல் பல இடையூறுகள். ..
எல்லாம் பதிவாக இங்கு இருக்கும்தானே. எப்படியும் வந்து படித்துக் கருத்திடுவேன்.
இப்போதைக்கு வந்து பார்த்துச் செல்கிறேன்.
இனிய வாழ்த்துக்களையும் சொல்லி!
நன்றி சகோ!
தங்களின் ஆவல் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எப்பேற்பட்ட குரு! அவரது மாணவர்களும் சிறப்புற பணியாற்றுவது மிகுந்த மகிழ்சி அளிக்கின்றது!. பழைய அதிகாரங்களையும் படிக்கின்றோம். தொடர்கின்றோம்! நல்ல தகவல்கள், விளக்கங்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
Deleteகுரு போற்றுவோம்
ReplyDeleteநன்றி நண்பரே
தங்களின் பணி தொடரட்டும்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
Delete