நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக
இருந்த சமயத்தில் இந்த பதிவை அறிமுகப்படுத்தினேன் - ஹாங்காங் - ஒரு அறிமுகம். அன்றிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கும் இந்த மாதிரி ஒரு வழிகாட்டி
தொடர் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின்
முதல் படியாக இந்த பதிவை எழுதியிருக்கிறேன். முடிந்த வரை ஒவ்வொரு வாரமும் இந்த தொடரை
எழுதுகிறேன். நான் இங்கு அதிகமாக குறிப்பிட்டு சொல்வது சிட்னியைத்தான். மற்ற நகரங்களைப்
பற்றி எனக்குத்தெரிந்த அளவில் தகவல்களை அளிக்கிறேன். இந்த தொடரின் உண்மையான நோக்கம் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு சரியான தகவல்களை அளித்து
அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே. அதனால் உங்கள் பார்வைக்கு எங்கேனும்
தவறுகள் தென்பட்டால், தெரியப்படுத்துங்கள், உடனே திருத்தி விடுகிறேன். மேலும் கூடுதல் தகவல்களை
சொல்லத் தவறியிருந்தாலும், கூறுங்கள், அவைகளையும்
சேர்க்கிறேன்.
ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு
நிறைய மார்க்கங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானவர்கள் கீழ்கண்ட இந்த நான்கு மார்க்கங்களில்
ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவிற்குள் நுழைகிறார்கள்.
1. ஆஸ்திரேலியாவிற்கு மற்ற நாடுகளிலிருந்து
புலம் பெயர்ந்து வருவது (“PERMANENT RESIDENT” ஆக வருபவர்கள்)
2. ஆஸ்திரேலியாவிற்கு படிப்பதற்காக
வருவது (“STUDENT” ஆக வருபவர்கள்)
3. ஆஸ்திரேலியாவிற்கு வேலை விஷயமாக
வருவது (“WORK VISA”வில் வருபவர்கள்)
4. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா பயணிகளாக
வருவது(“TOURIST” ஆக வருபவர்கள்)
முதலில், இந்த நான்கு வழிகள் மூலம் எவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு வரலாம் என்று பார்ப்போம்.
உள்ளே வந்த பிறகு, எவ்வாறு ஆஸ்திரேலிய மண்ணில் காலூனலாம் என்று
பார்க்கலாம்.
-தொடரும்
உங்களின் பிள்ளையார் சுழி அருமை!
ReplyDeleteநானும் பின்னூட்டத்தில் ஆரம்பித்து வைக்கிறேன்!
தங்களது தமிழ் நன்றாக உள்ளது.
முன்னோர்க் கொடையும் இருக்கக் கூடும். நன்றி!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதமிழ் வகுப்பில் நான் இன்னும் பாலர் கல்வி மாணவன் தான் ஐயா.
ஆஸ்திரேலியா பார்க்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteதொடர் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteசரி, ஒரு TOURIST VISA அப்ளை பண்ணிட்டாப்போச்சு ஸ்பான்சர் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்தான் வேற யாரு ?
ReplyDeleteஸ்பான்சர் தானே செஞ்சுட்டாப்போச்சு. நீங்க தான் எனக்கு வைர மோதிரமே போடப்போறீங்களே!!!!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
நான் டூரிஸ்ட் விசாவுல உங்க வீட்டுல சில மாதங்கள் தங்க வரலாம்ன்னு இருக்கேன். என்ன வழிமுறைன்னு சொல்லுங்க சகோ!!
ReplyDeleteஎங்க வீட்டில் தாராளமா வந்து தங்குங்க சகோ. வீடு கொஞ்சம் சின்னது தான். ஆனால் எங்கள் மனது விசாலமானது.
Deleteஇனி வரும் பதிவுகளில் வழிமுறைகளைத்தான் சொல்லப்போறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
தொடருங்கள்! எப்போதாவது உதவும்!
ReplyDeleteகண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு உதவும் சுரேஷ்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
உங்களுடன் சேர்ந்து ஆஸ்த்திரேலிய உலாவிற்குத் தயார்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
Deleteஆஹா! ஆஸ்திரேலியா டூர் !!
ReplyDeleteகலக்குங்க சகோ!!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteதொடருங்கள்..... நானும் தொடர்கிறேன்...
ReplyDeleteஇத் தொடர் மூலம் நிறைய விஷயங்களை நாங்களும் கற்றுக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது.
கண்டிப்பாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் வெங்கட் சார்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
என் மகளும், மருமகனும் சிட்னியில் இருந்தபோது அங்கு வர எண்ணியிருந்தேன். அதற்குள் அவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். உங்கள் தொடர்மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் அடியெடுத்து வைக்கலாமென எண்ணுகிறேன்! தொடர்கிறேன்.
ReplyDeleteதங்கள் மகளும் மருமகனும் சிட்னியில் தான் வசித்தார்களா!!!!
Deleteஅப்பவே நீங்கள் இங்கு வந்திருக்க வேண்டும் ஐயா.
பரவாயில்லை, இப்போது கண்டிப்பாக வாருங்கள். இந்த தொடரும், நானும் உங்களுக்கு வழி காட்டியாக இருப்போம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
ReplyDeleteமிக நல்ல முயற்சி...அனைவரும் அறிந்துக்கொள்ளலாம்.பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் எண்ணத்துக்கு சிறிதும் குறை வராமல் எழுத முயற்சிக்கிறேன் ராஜ் சார்.
Deleteதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ஆஹா ஆஸ்திரேலியா! நல்லதோர் ஆரம்பம்! எழுதுங்கள்! நாங்கள் இப்போது தங்கள் எழுத்துக்களிந் மூலம் ஆஸ்திரேலியாவில் நுழைந்து உலா வருகின்றோம்...பின்னர் நேரில்..ஹஹஹஹா...அங்கு எங்கள் உறவினர் பலர் உள்ளனர். சார்..
ReplyDeleteநேற்று சிரிப்பொலி சானலில் தலைவா படத்தின் தாங்கள் நடித்திருந்த காமெடி காட்சிகள் பார்த்தோம்...உடன் நாங்கள் வீட்டிலுள்ளவர்களிடம்...இதுதான் எங்கள் ப்ளாக் நண்பர் சொக்கன் சார் என்று சந்தோஷத்தில் அறிமுகப்படுத்தினோம் சார்....தங்களை.....நன்றாக ஆடுகின்றீர்களே சார்.......
உங்கள் உறவினர் பலர் இருக்கிறார்களா!!!
Deleteஎன்னோட நடனத்தை யாராலுமே ஆட முடியாதே!!!
என் மகள்கள் என்னுடைய நடனத்துக்கு கொடுத்திருக்கும் பெயர்கள் -
"Excercise Dance/Funny Dance"
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
நீங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது சொன்னீர்கள். ஞாபகம் இருக்கிறது.. அடுத்த பதிவுக்கு வருகிறேன்...
ReplyDelete