நான் சிறுவயது
முதல் கிரிக்கெட் மீது அதீத பற்று கொண்டிருந்தேன் (இப்பொழுது முற்றிலுமாக அது குறைந்து
விட்டது). கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், கிரிக்கெட் மேட்ச் தொலைக்காட்சியில்
ஒளிப்பரப்பினால், தொலைக்காட்சியே கதி என இருப்பேன். அந்த சமயத்தில் வெளி வேலைகளை தவிர்த்து
விடுவேன். அப்படியும் சில சமயம் வெளியே போக வேண்டியிருந்தால், ஏதாவது கடைகளில் இருக்கும்
தொலைக்காட்சியில் அந்த போட்டியை பார்ப்பதற்கு, அந்த கடைக்கு முன் நின்று கொண்டு பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.
நான் மட்டும் அப்படியிருந்ததில்லை, இந்தியாவில் ஒரு பெரிய கூட்டமே தங்களின் பொன்னான
நேரத்தை இப்படியெல்லாம் வீணடித்திருக்கிறது. சென்னையில் தொலைக்காட்சி பெட்டி விற்கும்
பெரிய பெரிய ஷோரூம்களின் வெளியே கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டு அந்த வீணாப்போன
விளையாட்டை நேரம் காலம் பார்க்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
நான் வேலையில்
சேர்ந்த பிறகு, அம்மாதிரி கடைக்கு வெளியே நின்று பார்க்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்
(பொறுப்பா வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம் இல்ல... ). அப்பொழுதெல்லாம் இந்தியாவில் மட்டும்
தான் மக்கள் தங்கள் நேரத்தை இப்படி வீணடிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், ஆஸ்திரேலியாவிலும் அந்த மாதிரி மக்கள் இருக்கிறார்கள் என்று சில நாட்களுக்கு
முன்பு தான் உணர்ந்தேன். என்ன! இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் கடைகளுக்கு முன்னால்
நின்று கொண்டு பார்க்கிறார்கள், இங்கு கால்பந்த்தாட்டத்தை அவ்வாறு பார்க்கிறார்கள்.
மேலே உள்ள
படத்தில் நீங்கள் பார்ப்பது, இரு வாரங்களுக்கு முன்பு அர்ஜென்டீனாவிற்கும் நெதர்லேண்ட்ஸ்க்கும் நடைப்பெற்ற உலகக்கோப்பை
அரையிறுதி போட்டியை, அலுவலகத்துக்கு செல்லும் மக்கள் நின்று அந்த போட்டியை ரசித்துக்கொண்டிருப்பது
தான்.
நாடும் மொழியும் வெறொழிய
ReplyDeleteநாட்டு மக்கள் மனம் மட்டும்
வேறுவேறு ரசனைக்கு அடிமையாகி
மனித குலம் ஒன்றே...என சாட்சியாவர்.
பகிர்வுக்கு நன்றி.
இத்தளத்திற்கு முதன்முறை வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteமனித குளம் ஒன்று தானே என்று அழகாக கவிதை வடிவில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி.
துளசி ஸ்ரீநிவாஸ் அவர்கள் சொல்லியிருப்பது போல.....எல்லா நாடுகளிலும் இந்த ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது! விளயாட்டுகள் வேண்டுமானால் மாறலாம்...ஆனால் உலக அளவில் நடக்கும் எல்லா விளையாட்டுகளும், ஒலிம்பிக்ஸ் உட்பட இப்படித்தான் ......ஒரு வேளை எல்லோருக்கும் இது போன்ற சமயங்களில் மட்டும் 24 மணி நேரத்திற்கு கூடுதல் சமயம் இருக்குமோ?
ReplyDeleteஉலக அளவில் நடக்கும் விளையாட்டுக்களுக்கு 24 மணி நேரத்திற்கு கூடுதல் சமயம் இருக்கத்தான் செய்யும் போல. அந்த அளவிற்கு மக்கள் அதனோடு ஒன்றிவிடுகிறார்கள்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteதிருமதி துளசி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன். நாடுகள் வேறாயினும் மக்களின் இரசனை ஒன்றுதான் போலும்.
ReplyDeleteவிளையாட்டைப் பொறுத்தவரை, விளையாட்டுக்கள் தான் வேறுபடுகிறதே தவிர, இரசனை ஒன்று தான்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
எல்லா ஊரிலேயும் சில விஷயங்களிலே மனுஷங்க ஒரே மாதிரிதான் போல!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteஎல்லாருடைய மனநிலையும் ஒரே மாதிரி தான்....
ReplyDeleteபயந்து கொண்டே படம்பிடித்து பதிவிட்டு விட்டீர்களே சகோ....:)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஎல்லாம் ஒரு குருட்டு தைரியம் தான்...
ஹா ஹா... நானும் சில நாட்கள் கிரிக்கெட்டை இந்த மாதிரிப் பார்த்தவன் தான்... இப்போது கிரிக்கெட் என்றால் காத தூரம் ஓடிவிடுகிறேன்.....
ReplyDeleteதாங்களும் என்னை மாதிரி தானா ஸ்பை?
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை
நல்ல கைபேசி கேமரா!
ReplyDeleteசகோ அட்டகாசமாய் வந்திருக்கிறது படம்!
அட கொடுமையே ! அங்கயும் இப்படிதானா?
கைபேசி - சாம்சங் கூகிள்.
Deleteஎல்லா ஊரிலேயும் இப்படி தான் போல.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
அங்கேயுமா இப்படி ?
ReplyDeleteநண்பருக்கு தங்களது மெட்ராஸ் நாடகம் அன்றே படித்து விட்டேன் கருத்துரையிட மறந்து விட்டது வசனம் நல்லாகீதுப்பா....
இங்கே தான் இப்படி...
Deleteநாடகம் படிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா ...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜீ
நீங்க திருந்துன மாதிரி அவர்களும் ஒருநாள் திருந்தி விடுவார்கள் !
ReplyDeleteஅப்படி ஒரு நம்பிக்கை இருக்கா உங்களுக்கு....
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நண்பரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteமோகம் எங்கும் உண்டு...!
ReplyDeleteசரியாச் சொன்னிங்க டிடி
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
மனிதனின் ரசனைகள் பார் முழுதும் ஒரே மாதிரித் தான் இருக்கிறது. ஆபீஸ் போகிற அவசத்திலும் பகிர்வுக்கு படம் எடுத்து பகிர்ந்தமைக்கு சபாஷ்.
ReplyDeleteஅழகாக வந்திருக்கிறதே படம்!
ReplyDeleteஆர்வம்தான் காரணம். சாதாரண விளையாட்டா?
உலகக் கோப்பைக்கான ஆட்டம் அல்லவா?
உங்கள் துணிவு மெச்சத்தக்கது சகோ!
இல்லையெனில் இப்படி எமக்கும் பார்க்கக் கிடைத்திருக்குமா?..:)
வாழ்த்துக்கள்!