Monday, November 24, 2014

நவம்பர் மாதம்–இல்லை! இல்லை!! இது மவம்பர் மாதம்(ஆண்களின் உடல் ஆரோக்கியம்)


 
 

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “மவம்பர் (Movember Foundation)” என்னும் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் , இங்கு ஆஸ்திரேலியாவில் ஆண்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  மாதம் முழுவதும் மீசையை மழிக்காமல் வளரக்கச்  சொல்லி இதில் பங்குப்பெறுமாறு அழைக்கிறது. அதன்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெறும் ஆண்கள், முதலில் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு , அந்த இணையத்தளத்தில் , ”MO SPACE” என்று ஒரு பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, நவம்பர் மாதம் முழுவதும் மீசையை வழிக்காமல் இருப்பார்கள். இப்படி அவர்கள் தங்களின் முக அழகை மாற்றிக் கொண்டு,இந்த விழிப்புணர்வில் பங்குபெறுவதால். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என எல்லோரும் அவரின் அந்த இணையத்தள பக்கத்திற்கு சென்றோ அல்லது அவரிடம் நேரிடையாகவோ பணத்தை அன்பளிப்பாக அளிப்பார்கள். இப்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெற்ற அனைவரின் மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்த தொண்டு நிறுவனம், ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கு அளித்துவிடும். இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை, பெண்களும் பங்குக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள், ஓட்டு மீசையை வைத்துக்கொண்டு, இந்த விழிப்புணர்வில் பங்குக்கொள்கிறார்கள். இதில் பங்குபெறும் ஆண்களை “MOBROS” என்றும் பெண்களை “MOSISTAS” என்றும் அழைக்கிறார்கள்.  

இந்த விழிப்புணர்வில் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் யாராவது பங்கேற்றிக்கிறார்களா என்று பார்த்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று கூறி நண்பர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் சென்ற ஆண்டு இந்த விழிப்புணர்வு மாதத்தில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். (இவர் பொதுவாக மீசையை மழிப்பவர்).  

 




பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு வரும் இந்த புரோஸ்டேட் புற்று நோயைப் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. இந்த நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இணையத்தளத்திலும், மருத்துவ நண்பரிடமும் படித்து கேட்டதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆண்களுக்கு வயதாகும்போது, இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்கனைகள் ஏற்படாமலிருக்க அந்த மருத்துவ நண்பர் கூறிய அறிவுரைகள் என்னவென்றால்,

·         தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். (இந்த தண்ணீர் தான் நம்முடைய உடம்புக்கு எவ்வளவு நல்ல வேலைகளை செய்கிறது)

·         இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு,ஜீன்ஸ் பாண்ட் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (இதுக்குத்தான் நம்மூரில் அந்த காலங்களில் பட்டாப்பட்டி டிரௌசரை அணிந்து வேட்டியை அணிந்துகொண்டார்களோ!!!)

·         சில படங்களில், நகைச்சுவை என்ற பெயரில்,”நான் உள்ளாடையை அணியவில்லை என்று கூறுவார்கள்” அப்படி உள்ளாடை அணியாமல் இருக்க்மான பாண்ட் அணிந்தாலும் இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாம்.

·         ஆண்களாகிய நாம் எப்பொழுதும் அலைப்பேசியை பாண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருப்போம். அலைப்பேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூலமாகவும் இந்த நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது (அடக்கடவுளே. அப்புறம் எங்க தான் அந்த போனை வைத்துக்கொள்வதாம்!!!)

·         புகைப்பிடிப்பதுனாலும் இந்த நோய் வருமாம்(புகைப்பிடிப்பதால் எந்த நோய் தான் வராது!!!!)

·         கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்து விட வேண்டும். அதாவது இந்த ஜங்க் உணவுகளை தவிர்க்து விட வேண்டும்.

·         பழங்கள்,காய்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

·         உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது BMI (Body Mass Index) சரியாக இருக்க வேண்டும்.

 
இங்கு, வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் இந்த நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த விழிப்புணர்வை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

 
பின்குறிப்பு:

பல வருடங்களுக்கு முன் நான் லண்டனுக்கு சென்றபோது, அங்குள்ளவர்களைப் பார்த்து, எனக்கும் மீசையை எடுத்தால் என்ன என்று ஒரு விபரீத ஆசை தோன்ற, நானும் உடனே மீசையை எடுத்துவிட்டேன். எடுத்த பிறகு தான் தெரிந்தது, ஏண்டா எடுத்தோம்னு, ஏன்னா, என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே சகிக்கலை. போதாக்குறைக்கு என்னுடன் பணிபுரிந்த தமிழ் நண்பர்கள் எல்லாம், டேய், நாங்க தினமும் உன்னைய பார்த்து, அணு அணுவாக செத்துக்கிட்டு இருக்கோம். ஏதாவது செய்து, சீக்கிரம் மீசையை வளர்த்துக்கோன்னு சொல்லி கடுப்படித்தார்கள்”. இப்ப அதை நினைச்சு பார்க்கும்போது, நண்பர் கில்லர்ஜி தான் நியாபகத்துக்கு வந்தாரு. அவருடைய புகைப்படத்தை பார்த்தபோது, எப்படித்தான் இப்படி மீசையை உரம்போட்டு வளர்க்கிறாரோன்னு தோணுச்சு. இவர் நவம்பர் மாதம் மட்டும் இங்கு வந்தால், இவர் தான் அதிகமான அன்பளிப்பை அந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பார். அவரை புகைப்படத்தில் பார்க்காதவர்கள் இங்கு சென்று அவரைப் பார்க்கவும் - கில்லர்ஜியின் புகைப்படம்

21 comments:

  1. கில்லர்ஜியின் மீசை பார்த்திருக்கிறேன்! :)))

    நல்ல ஒரு பதிவு. ப்ராஸ்டேட் பிரச்னை 90 சதவிகித ஆண்களுக்கு வயதானவுடன் வரும் பிரச்னை என்று தெரியும் . அது கேன்சராக மாறாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று பட்டியலிட்டிருப்பது விழிப்புணர்வைத் தரும்.

    ReplyDelete
    Replies
    1. நான் அவருடைய மீசையை பார்த்து பயந்திருக்கிறேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete

  2. இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! இந்த ப்ராஸ்டேட் பிரச்னை பற்றிய காணொளிக் காட்சி ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா,

      Delete
  3. பட்டியல் பயன் தரும்...

    மீசைகள் படத்தை இன்றைய எனது பதிவில் பார்த்திருப்பீர்கள்...!

    ReplyDelete
    Replies
    1. மூன்று மீசைகளை பார்த்துவிட்டேன் தங்களின் பதிவில்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  4. நல்ல விசயத்தை பகிர்ந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

    என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே....

    ReplyDelete
    Replies
    1. உங்க மீசையை பார்த்தபிறகு, யாராவது உங்களை வச்சு காமெடி,கீமெடி பண்ணமுடியுமா என்ன?

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. மிக நல்ல பதிவு! பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ப்ராஸ்டேட் பிரச்சினை வருவதுண்டு. கான்சரில் முடியாவிட்டாலும் வேறு பல பிரச்ஹினைகளும் வருகின்றது. இந்த மொவம்பர் பற்றி அறிந்திருந்தாலும் தங்கள் தொகுப்பு மிகவும் அருமை.

    அது சரி அப்ப கொடுவா மீசை கில்லர் ஜி வருடம் முழுவதும் விழிப்புணர்வு மொவம்பர்தான்னு சொல்லுங்க.! ஹஹஹ் நல்ல விஷயம் ஆயிற்றே!

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி நண்பரை, நவம்பர் மாதம் மட்டும் மீசையை மழிக்க சொல்லிவிடலாம்.(எப்பூடி நம்ம ஐடியா!!!)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.

      Delete
  6. விழிப்புணர்வு பதிவை பகிர்ந்ததற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  7. இவ்வாறான ஒரு நோய் இருப்பதைப் பற்றி தற்போது தங்களின் பதிவு மூலமாகத் தான் தெரிந்துகொண்டேன். பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !! சகோ .இங்கும் கணவர் வேலை செய்யும் இடத்தில அனைவரும் மீசை தாடி வளர்த்து மழிப்பார்கள் சாரிட்டிக்கு அங்கேயே பணம் சேர்த்து மொத்தமாக அளிப்பார்கள் ..மருத்துவ நண்பரின் அறிவுரை தகவல்களும் அருமை ..இதைப்பற்றிய விழிப்புணர்வு பரவட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  9. யான் அறியாத செய்தி அறியவைத்தமைக்கு மிக்க நன்றிகள். நம்ம மீசைக்காரர் நண்பருக்கு மொவம்பர் மாத வாழ்த்துக்கள்...ஹி ஹி ஹீ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்.

      Delete
  10. மீசை யாருமே மற்ற நேரங்களில் வைத்துக் கொள்ள மாட்டார்களா ,சொக்கன் ஜி ?
    நல்ல விசயம்தான் ,நம்மூரில் இந்த பிரச்சாரம் ஒத்துவராதே ?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக இங்குள்ள பல ஆண்கள் மீசையை வைத்துக்கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு மீசை நம்மளை மாதிரி வளராதோன்னு எனக்கு ஒரு சந்தேகம்)
      நம்மூரில், அந்த மாதம் மீசையை மழிக்க சொல்லிவிடலாம்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

      Delete
  11. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! மீசை வளர்த்து வெட்டியாக திரியாமல் உருப்படியாக சேவை செய்யும் உள்ளங்களை அறிந்து நெகிழ்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. இந்த செல் போனை எங்க தான் வைக்கிறது:))))
    நல்ல தான் கல்லா கட்டி, அதை நல்லாவும் பயன்படுத்துறாங்க!! நல்ல பகிர்வு சகோ வாழ்த்துகள்!

    ReplyDelete