“எலேய், மாடசாமி இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமாடா?”
“இன்னைக்கு புதன் கிழமை
தானே, அதுக்கு என்ன சேகரு”
“அதுக்கு என்னவா? சரி, மார்ச் 8ஆம் தேதி என்ன நாள்னு தெரியுமா உனக்கு?”
“ஓ! அதுவா, அன்னைக்கு பெண்கள் தினம் ஆச்சே.”
“பெண்கள் தினம் எல்லாம்
உனக்கு தெரியுது, ஆனா இன்னைக்கு ஆண்கள் தினம்னு
தெரியலை இல்ல மாடசாமி.”
“என்னது, ஆண்கள் தினமா? அப்படி ஒரு தினம் இருக்குதா என்ன?”
“சரியாப்போச்சு, உன்னைய
மாதிரி தான் இங்க, நிறைய ஆம்பிளைங்களுக்கு ஆண்கள் தினம்னு ஒண்ணு
இருக்கிறதே தெரியலை. 1999லிருந்து இந்த நாளை அதாவது நவம்பர் 19ஆம் தேதியை ஆண்கள் தினம்னு
கொண்டாடிக்கிட்டு வராங்க”.
“அடப்பாவிகளா, உலகம்
முழுக்க, பெண்கள் தினத்தை என்னமா விளம்பரம் பண்ணி கிராமத்துல
இருக்கிற எனக்கு கூட தெரிய வச்சுட்டாணுங்க. ஆனா பாரு இந்த ஆண்கள்
தினத்தை ஒரு பயலும் சொல்லவே இல்லை. ஆமா, இந்த டிவிக்காரனுங்க
கூட “பெண்கள் தின ஸ்பெஷல்ன்னு சொல்லி ஏதாவது போடுவானுங்க,ஆனா
ஆண்கள் தின ஸ்பெஷல்ன்னு ஒண்ணும் போடக்காணோமே சேகரு”.
“டிவிக்காரங்களுக்கே தெரியாதோ
என்னமோ,யார் கண்டா”.
“நீ என்னமோ 1999லேருந்து
இந்த நாளை கொண்டாடுறாங்கன்னு சொல்ற, ஆனா நம்ம நாட்டில கொண்டாடுறாங்களா
சேகரு?”
“வெஸ்ட் இண்டீஸ் நாட்டுல
தான் இந்த நாளை முதன் முதலா கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் ஆஸ்திரேலியாவுல
2003லேருந்தும், இந்தியாவுல 2007லேருந்தும் கொண்டாடுறாங்க. இன்னும் நிறைய நாடுகளிலும் கொண்டாடுறாங்க மாடசாமி”
“நம்ம ஆண்களுக்கு எப்பவுமே
விளம்பர படுத்திக்க புடிக்காது இல்ல, அதனால தான் இந்த
நாளையும் விளம்பரப்படுத்தல போல”
“சரியா சொன்ன மாடசாமி, நாம என்னைக்கு தான் நம்மளை முன்னிருத்தியிருக்கோம் சொல்லு, அந்த காலத்துல வேணா, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம், ஆனா இந்த காலத்துல நாம எல்லாத்திலும் பின்னாடி நின்னு, பெண்களைத்தானே முன்னாடி நிறுத்துறோம்”.
“ஆமா,ஆமா, படிக்கிற பசங்க கூட அதைத்தானே பண்றாங்க சேகரு”
“படிக்கிற பசங்க, பெண்கள் முன்னேறட்டும்னு விட்டுக்கொடுக்கிறாங்க. ஆனா, இந்த பெண்கள் எப்பத்தான் புரிஞ்சுப்பாங்களோ!”
“இப்ப எல்லாம் சில பெண்கள்
தன் கணவனோட குடும்பத்தாரை பிடிக்கலைன்னா, உடனே பொய்யா வரதட்சணை
வழக்கைப் போட்டு, அப்பாவி கணவனையும், அவனோட
குடும்பத்தாரையும் கம்பி என்ன வச்சிடுறாங்க சேகரு”.
“பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை
சில பெண்கள் தப்பா பயன்படுத்துறதுனாலத்தான், உண்மையான சுதந்திரத்தை
அவுங்களால முழுசா அனுபவிக்க முடியலை”.
‘அடடா, ஆண்கள் தினம்னு சொல்லி, இப்ப பெண் சுதந்திரத்துக்கு
போயிட்டோம் பாரு சேகரு”
“ஆமா இல்ல, என்ன பண்றது, பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம்னு, நம்மளை மாதிரி ஆண்கள் நினைச்சுக்கிட்டே
இருக்கிறதுனால தான், ஆண்கள் தினமான இன்றைய தினத்தை கூட நாம பெருசா
எடுத்துக்கிறதில்லை மாடசாமி”.
“ஆண்கள் தினம்னு ஒண்ணு
இருக்குது, அது இன்னைக்குத்தான்னு சொல்லி எனக்கு புரிய
வச்சதுக்கு ரொம்ப டாங்சு சேகரு”.
ஆண்கள்
தின வாழ்த்துக்கள் சகோதரர்களே!!!.
பின்குறிப்பு – அதிவிரைவில்
ஆண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு பதிவு உங்களுக்காக வரவிருக்கிறது.
ஆண்கள் தினம்னு ஒண்ணு இருக்குது, அது இன்னைக்குத்தான்னு சொல்லி எனக்கு புரிய வச்சதுக்கு ....//
ReplyDeleteஉலகம் தோன்றின நாட்கள்ல இருந்து ....இப்போவரை...ஆண்கள் தினமாத்தானே இருக்கு...
அதனால தான் ஆண்கள் தினம் அப்படிங்கிறது தெரியலை
தனியாக விளம்பரம் வேற வேணுமாக்கும்...?
சரி சரி ....ஆண்கள் தின வாழ்த்துக்கள் சகோதரர்களே.
என்ன இருந்தாலும் பெண்கள் மனம் இளகினது இல்லையா..?
ஆண்கள் தினம்னு சொன்னவுடனே, உங்களுக்கு எவ்வளவு கோபம் வருது. உலகம் தோன்றிய நாள்லேருந்து இப்ப வரைக்கும் ஆண்கள் தினமாமே, அப்ப எதுக்கு பெண்கள் தினம்னு ஒண்ணு இருக்கு..
Deleteஎங்களுக்கு உங்களை மாதிரி விளம்பரம் படுத்திக்க தெரியலையே...
பெண்கள் மனம் இளகிய மனமா - என்னென்னமோ சொல்றீங்க???
ஆண்கள் தினம் தெரியாத மாடசாமிக்குப் பேரு மடசாமினு வச்சு இருக்கலாம் உரையாடல் ஸூப்பர் நண்பரே,,, உண்மையானவர்களுக்கும், பொய்யானவர்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மையுடன்
கில்லர்ஜி.
உங்களை பொய்யானவர்களுன்னு பெருந்தன்மையா ஒத்துக்கிறீங்களே நண்பரே. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
Deleteஆண்கள் தினத்தைப் பெரிதாகக் கொண்டாட ஆண்களே முன்வருவதில்லை. என்ன செய்வது! என்னவோ போங்க... ஆண்கள் தினமாவது, பெண்கள் தினமாவது! நாளெல்லாம் நம்ம நாளே!
ReplyDeleteசூப்பர் நண்பா - நாளெல்லாம் நம்ம நாளேன்னு சொன்னதுக்கு.
Deleteஎல்லாம் சரி!! ஏன் இந்த தினத்தை குறிப்பிட்டு ஆண்கள் தினமா கொண்டாடுறாங்க??? இந்த ஆண்களே இப்படி தான்பா சொல்லவந்த விசயத்தை விட்டுபுட்டு ஏதேதோ கதை பேசுவாங்க :)))
ReplyDelete"//இந்த தினத்தை குறிப்பிட்டு ஆண்கள் தினமா கொண்டாடுறாங்க??? //" -இதை சொல்றதுக்கு தானே நீங்கள் இருக்கீங்க சகோ.
Deleteஎங்களை நாங்களே விளம்பரப்படுத்திக்க பிடிக்காதே.
"//இந்த ஆண்களே இப்படி தான்பா சொல்லவந்த விசயத்தை விட்டுபுட்டு ஏதேதோ கதை பேசுவாங்க :)))//"
இந்த பழக்கத்தையே உங்க கிட்டே இருந்து தானே நாங்கள் கத்துக்கிட்டோம்.
ஆண்கள் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அம்மா.
Deleteஹஹ்நல்ல உரையாடல். ஆண்கள்தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோஸ்
Deleteஆண்கள் தின வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவீட்டில் வெளியில் அலுவலகத்தில் என எல்லா இடத்திலும் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டும் நல்ல மனசுக்காரர்கள் ஆடவர் அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள் :)
மிக்க நன்றி சகோ.
Deleteபுதிய தலைப்பில் நல்ல விவாதம். பல பேருக்கு இவ்வாறு ஒரு நாள் இருப்பது தெரியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteபாவப்பட்ட ஜீவன்களான ஆண் சகோதரர்கள் என்று சொல்கிறீர்கள் ,பெண்ணாய் பிறப்பதே பாவமென்று பெண்கள் சொல்கிறார்கள் ,யார்தான் புண்ணியம் செய்தவர்கள் :)
ReplyDeleteகண்டிப்பாக நீங்கள் புண்ணியம் செய்தவர் தான் - பேரிலேயே பகவானை வைத்திருக்கிறீர்களே. அப்புறம் மக்கள் தினமும் வாய்விட்டு சிரிப்பதற்கு நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாம் சளைக்காம எழுதுறீங்களே...
Deleteஆண்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteஹா... ஹா...
ReplyDeleteஇப்படி ஒன்று இருக்கோ...?
ஆண்டு முழுதும் உதாசீனப்படுத்திவிட்டு இந்த மாதிரி ‘தினங்கள்’ கொண்டாடுவது ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்’ என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.
ReplyDeleteஆண்கள் தின வாழ்த்துக்கள்............
ReplyDeleteஆண்கள் தினம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் இப்படிபட்ட பதிவுகள் போடுவதற்காக மட்டுமே இது தெரியாமல் பல பேர் வாழ்த்து சொல்லுறாங்க சரவணா என்ன கொடுமையடா
ReplyDeleteஇப்ப்டி ஒரு தினம் இருக்கின்றதா
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே
வாழ்த்துக்கள்
ஆண்கள் தின இனியவாழ்த்துக்கள்!
ReplyDeleteஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅப்புறம்
ஆரோக்கிய பதிவிற்கு காத்திருக்கிறேன் ...