Thursday, April 18, 2019

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 8 (ஊக்கத்தொகை விருது)


(இனியா - புதுமைக்கான விருது (innovation award)
ஓவியா - இணைந்து செயல்பட்டற்கான விருதும்      (collaboration award), ஊக்கத்தொகை விருதும் (Scholarship award)


சென்ற வாரம் ஓவியா,இனியாவின் பள்ளியில் இருந்து, ஓவியாவும் (ஐந்தாம் விகுப்பு), இனியாவும் (இரண்டாம் வகுப்பு) இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முதல் பருவ கூட்டத்தில் (first term assembly) விருதுகள் வாங்குகிறார்கள்,வந்து கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் வந்திருந்தது. இங்கு பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களில் (assembly) எல்லாம் பள்ளியின் தலைவர்கள் (மாணவன்,மாணவி தலைவர் மற்றும் மாணவன், மாணவி துணைத்தலைவர்) - குழு தான் முன்னின்று நடத்தும். தொடக்க கல்வி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தான், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று இந்த பதவிக்கு வருவார்கள்.

இம்மாதிரி விருது வழங்கும் கூட்டத்தில், ஆசிரியர்கள் விருது வாங்கும் மாணவர்களின் பெயர்களை படித்து, அந்த விருதை தலைவர்கள் குழுவிடம் கொடுப்பார்கள், தலைவர்கள் தான் அந்த விருதை மாணவர்களிடம் வழங்குவார்கள். இது ஒரு வகையில் விருது வாங்கும் மாணவர்களுக்கு, நாமும் இந்த இடத்தில் நின்று இம்மாதிரி விருதுகளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும்.

இந்த கூட்டத்திற்கு மாணவிகளுக்கான துணைத்தலைவர் விடுமுறையில் இருந்திருக்கிறார். அதனால் ஓவியாவின் வகுப்பில் ஒரு நாள், எல்லோருக்கும் ஒரு தலைப்பை கொடுத்து எந்த ஒரு முன் தயாரிப்புமின்றி, மூன்று நிமிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். அதில் ஓவியா தேர்வுப்பெற்று, இந்த கூட்டத்தை நடத்தும் ஒருவராக வாய்ப்பு பெற்றிருக்கிறார். எங்களுக்கு அவர் விருது வாங்குவது மட்டுமல்லாமல், இவ்வாறு ஐந்தாம் வகுப்பிலேயே, விடுமுறையில் இருக்கும் பள்ளியின் துணைத்தலைவருக்கு மாற்றாக அவர் வாய்ப்பு பெற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பள்ளியின் பட்டிமன்ற குழுவிழும் (SCHOOL DEBATE TEAM) ஓவியா தேர்வாகி இருப்பது தான். பட்டிமன்ற குழு என்ன செய்யும், எவ்வாறு ஓவியாவை தேர்வு செய்தார்கள் என்பதை பற்றியெல்லாம் வேறொரு பதிவில் சொல்கிறேன்.

இங்கு பள்ளியின் இடைவேளைகளில் எல்லாம் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் UKULELI (கிடாரின் சிறிய வடிவம்) என்கிற ஒரு இசை கருவியை இலவசமாக பயிற்றுவித்தல். இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். அதில் ஓவியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்த கருவி மற்றும் வேறு சில கருவிகளையும் முழுமையாக கற்றுக்கொள்ள “MUSIC BUS” என்ற ஒரு தனியார் நிறுவனம் வாரம் ஒரு நாள் பள்ளிகளுக்கே சென்று பயிற்றுவிக்கிறார்கள். ஒரு வகுப்புக்கு (30 நிமிடம்) கட்டணமாக $15 பெறுகிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஓவியாவும் நானும் அந்த மியூசிக் பஸ்ல சேரட்டுமா என்று கேட்டிருந்தார். நாங்களும் நீ இந்த ஒரு வருடமும் உங்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள், அடுத்த வருடம், உனக்கு இன்னும் அதே ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் அவரின் நியாமான ஆசைக்கு கடவுள் அளித்த அங்கீகாரம் தான் ஊக்கத்தொகை விருது.

இந்த விருதானது இந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதின் மூலம் ஓவியா ஒரு ஆண்டு முழுவதும் மியூசிக் பஸ்ஸில் பயிற்சி பெறலாம்.








(உட்கார்ந்திருப்பவர்கள் தான் இந்த ஆண்டின் மாணவர்கள் தலைவர் குழ. அதில் ஓவியா துணைத்தலைவருக்கு மாற்றாக இருக்கிறார்)


(மாணவர் தலைவரின் உரை)


(மாணவி தலைவரின் உரை)


(ஓவியாவின் உரை)




(கூட்டத்தின் ஒரு பகுதி)



(விருதை அளிப்பதற்காக நின்றுகொண்டிருக்கிறார்)



இனியா விருதை வாங்குவதற்காக வருகிறார்)




(விருதை வாங்கிக்கொண்டு நிற்கிறார்கள்)




(ஊக்கத்தொகைக்கான விருதை காணொளி)




பின்குறிப்பு - அடுத்த ஆண்டு பள்ளிக்கூட தேர்தலில், ஓவியாவிற்கு தலைவர் பதவிக்கு நிற்க வேண்டும் என்று ஆசை. ஆனால் தனக்கு யார் வோட்டு போடுவார்கள் என்று கவலை. உடனே இனியா, அக்கா, நீங்கள் நில்லுங்கள் நான் என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி, உங்களுக்கு வோட்டு போடச்சொல்லுகிறேன் என்று கூறினார். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபோது எனக்கு நம்மூரில் நடக்கும் அரசியல் கூத்துக்கள் தான் நியாபகத்துக்கு வந்தது. 

10 comments:

  1. இந்த மாதிரி பரிசுகள் குழந்தைகளுக்கு ஊக்கம் தருபவை. கூடவே பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி.

    உங்கள் செல்லங்களுக்கு எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

      Delete
  2. மருமகள் ஓவியாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.

    அடுத்த வருடம் விசிட் விசா அனுப்பி வைத்தால் கள்ள ஓட்டுப்போட தேவகோட்டையிலிருந்து 'ஆட்கள்' அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
      கண்டிப்பா இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே தங்களுக்கு விசிட் விசா அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  3. செல்லங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடி

      Delete
  4. வாழ்த்துக்கள் செல்லங்கள்..Good Iniya இப்படிதான் அக்காவுக்கு சப்போர்ட் செய்து தலைவராக்கவேண்டும். மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ .

      Delete
  5. ஓவியாவிற்கும் இனியாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! இளம் வயதிலேயே பிள்ளைகளை பொறுப்பேற்க ஆயத்தம் செய்வது போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  6. ஓவியாவிற்கும் இனியாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! ....

    ReplyDelete